டிக் டோக் ஆப்-பில் மறைத்திருக்கும் பாலியல் தொழில் !

0
Business trichy

டிக் டோக் ஆப்-பில் பாலியல் தொழில் கைதான புரோக்கர் பகீர் வாக்குமூலம்!

டிக் டோக்  போன்ற செயலிகளில்  பின்னணியில் பாலியல் தொழில் மறைந்து கிடப்பது தற்போது அம்பலமாகியுள்ளது.

ஐ.டி.நிறுவனங்கள் நிறைந்துள்ள பகுதியில் சட்டவிரோதமாக மசாஜ் பார்லர் நடத்தி, அதன்மூலம் பாலியல் தொழிலை  நடத்தி வந்த  பூங்கா வெங்கடேசனை, விபச்சார தடுப்பு பிரிவு கைது செய்துள்ளது. அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில்தான் பல திடுக்கிடும் தகவல்கள் தெரியவந்துள்ளன.

Kavi furniture
MDMK

இது குறித்து அவர் அளித்துள்ள வாக்குமூலத்தில், ‘பாலியல் தொழிலை விரிவுபடுத்த டிக் டோக் ஆப்பினை தேர்வு செய்தேன். இதில் சினிமா பாடல்கள் மற்றும் வசனங்களுக்கு ஏற்ப வாயசைத்து, பலர் வீடியோக்கள் பதிவு செய்கின்றனர். குறிப்பாக சிலர் சினிமாவில் நடிக்க வேண்டும் என்ற ஆசையில், அரைகுறை ஆடைகளோடு, ஆபாசமாக நடனமாடி பதிவு செய்கின்றனர். இதுபோன்ற வீடியோக்களில் அதிக லைக்ஸ் பெறுபவர்களைக் குறிவைத்து அவர்களிடம் Chat மூலம் நட்பாக பேசி பழகி, அவர்களிடம் ஆசை வார்த்தைகளைக் கூறி பாலியல் வலைக்குள் விழ வைக்கிறேன்.

இன்னும் சில தரகர்கள், தங்களிடம் உள்ள பெண்களை ஆபாசமாக பாடவும், ஆடவும் செய்து, அதனை டிக்டாக் செயலியில் பதிவிட்டு, அதற்கு ஆபாசமாக கமெண்ட் போடும் நபர்களிடம் பேரம் பேசி பாலியல் தொழிலை நடத்தி வந்தேன்’ என்று தெரிவித்துள்ளார்

இதனால் டிக் டோக், டப்ஸ்மேஷ் போன்ற செயலிகளில் வீடியோ பதிவிடுபவர்கள் ஆபாச வீடியோக்களை பதிவிடுவதை தவிர்த்து, நாகரீகமான வீடியோக்களை பதிவு செய்யலாம் என காவல்துறை அறிவுறுத்தியுள்ளது.

Pranav city

Leave A Reply

Your email address will not be published.