மு.க.ஸ்டாலினை காப்பாற்றப்போவது கனிமொழியா? உதயநிதியா?

0
1

4ம் எண்ணிற்கான உதாரணங்கள்….
மு.க.ஸ்டாலின் பிறந்த தேதி + மாதம் + வருடம் மூன்றையும் கூட்டினால் வரும் எண் 4(1-3-1953 (1+3+1+9+5+3=22=4)). இவர் ஒருவரை சார்ந்து இருந்தால் பலம் இல்லை என்றால் இவரின் உடமை, பதவி பறிக்கப்படும். மு.கருணாநிதி முதல்வராக பதவி வகித்த வரை எம்.எல்.ஏ., சென்னை மாநகர மேயர் என இரு பதவிகளில் இருந்தார். அப்பொழுது 9ம் எண்ணை ராசியாகக் கொண்ட ஜெ.ஜெயலலிதா ஒருவருக்கு ஒரு பதவி தான் இருக்க வேண்டும் என்று கூறி மு.க.ஸ்டாலினின் மேயர் பதவியை பறித்தார்.

எண் 4 காரர்கள் நிலப்பரப்பை அதிகம் பிடிப்பார்கள் அதனால் தான் மேயராக பதவி வகித்தபொழுது பாலம் கட்ட நிலம் ஆர்ஜிதம் செய்தார் மு.க.ஸ்டாலின். இவர் வளர்ந்த பின் இவர் குடும்பம் இடங்கள் நிறைய வாங்கினார்.

மு.க.ஸ்டாலினின் DOB (1-3-1953)
பிறந்த தேதி எண் 1
எண் 1 எந்த நிலையில் இருந்தாலும் ஒருவரை தலைமை பண்புக்கு இட்டுச் செல்லும். இவருக்கு பெயர் எண் 1 வலிமையாக இருந்ததால் மு.கருணாநிதி மரணத்திற்குப் பிறகு கட்சி தலைமை பதவி கிட்டியது. அதேபோலா மு.க.ஸ்டாலினை மிசா காலத்தில் சிறையில் அடைத்து தாக்கும் பொழுது சென்னை மாநகர மேயராக இருந்த சிட்டி பாபு அடி வாங்கி மரணம் அடைந்து இவரை காப்பாற்றினார். எண் ஒன்று எதிரிகளால் ஆபத்து இல்லை என்பது இதன் மூலம் தெரிகிறது. கூட்டு எண்ணோ அல்லது பெயரின் எண்ணோ வலுவிழந்தால் காப்பாற்ற யாரும் வரமாட்டார்கள்.

 

 

2

மு.க.ஸ்டாலின் முன்பு தந்தையின் துணையோடு இருந்தார். இப்பொழுது பெயர் எண் 6 உடைய மகன் உதயநிதி ஸ்டாலினோ அல்லது பெயர் எண் 6 உடைய கனிமொழியோ துணை நின்று பதவி பெற்றால் அதை தொடர முடியும். இல்லை என்றால் பதவி பறிக்கப்படும்.
பெயரின் கூட்டு எண் 5 M.K.STALIN(4+2+3+4+1+3+1+5 = 23 = 5)
ஐந்து அனைவருக்கும் நட்பு கிரகம். மு.கருணாநிதியும், J.ஜெயலலிதாவும் கீரியும் பாம்புமாக இருந்த காலத்திலே சுனாமி நிதியை அப்போதைய முதல்வர் J.ஜெயலலிதாவிடம் நேரில் வழங்கினார். J.ஜெயலலிதா முதல்வர் பதவி ஏற்கும் பொழுது மு.க.ஸ்டாலின் தன் M.L.A. சகாக்களுடன் கலந்து கொண்டார். இப்பொழுதும் அனைத்து கட்சி கூட்டம் கூடினாலும் கூட்டத்திற்கு செல்வார்.

 

4

பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் பிறந்த தேதி, மாதம், வருடம் ஆகியவற்றின் கூட்டு எண் 4 (DOB 30-10-1908(3+0+1+0+1+9+0+8) =22=2+2=4)
இவ்வெண் தேவரை துணிச்சல் மிக்க தலைவராக்கியது. எண் 4 யாருக்கும் அஞ்சாத மனோபலம் நிறைந்தது. ஆகவே தெய்வீகச் சொற்பொழிவும் விடுதலை போராட்டத்திற்கான பசும்பொன் தேவரின் பேச்சுக்களும், அனல் தெறிக்கும் மக்கள் உணர்ச்சி மிகுதியால் அவருடன் விடுதலை போராட்டத்தில் கலந்து கொண்டனர். இவர் ஆன்மீகவாதியாக இருந்தாலும் ஜாதி மதம் பார்க்காது அனைவருக்காகவும் உழைத்தார். ஒரு கலவரத்தில் இவர் பெயர் அடிபட்டபொழுது காவல்துறை அமைச்சராக கக்கன் இருந்தார். அவரின் பிறந்த தேதியின் கூட்டு எண் 9 (DOB 18-6-1908 (9&6) (1+8+6+1+9+0+8=33=6)) இது எண்4யைக் கொண்ட தேவரை முடக்கியது.

 

தேவரின் பிறந்த தேதி எண் 3 ( 30)
அடுத்த பிறவி என்று ஒன்று இருந்தால் நான் தமிழனாக பிறக்க வேண்டும் என்று கூறிய நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் வெள்ளையனை போர்முனையில் அப்புறப்படுத்த வேண்டும் என்று போராடிய போராளி. இவரின் இந்திய தேசிய படைக்கு பெருமளவில் தமிழர்களை அணிவகுக்கச் செய்த பெருமை பசும்பொன் தேவரைச் சாரும் அதனால் தான் நேதாஜி அந்த உயரிய வார்த்தையை கூறி தமிழர்களை பெருமைப்படுத்தினார்.

 

எண் மூன்று இந்தியாவிற்கு (INDIA 1+5+4+1+1=12=3) ராசியான எண். எனவே தான் இவர் தேசியமும் தெய்வீகமும் இரண்டு கண் என்பார். தேசிய போராட்டத்தில் பெரும்பங்கு வகித்திருக்கிறார். அதைப் போல் குற்ற மரபினர் என்ற சட்டத்தை எதிர்த்து போராடி வெற்றி பெற்றார். தாழ்த்தப்பட்டவர்களை கோயிலுக்கு அழைத்துச் சென்றார். எண் 4யைக்கொண்டவர்கள் நிலங்களை நம்பிக்கையானவர்களின் பெயர்களில் வாங்குவது சிறந்தது. இல்லையேல், தானமாகவோ அல்லது ஏமாந்தோ நிலத்தை இழக்க நேரிடும். அந்த வகையில் எண் 4யைக்கொண்ட தேவர் தேவர் தன் நிலங்களை தாழ்த்தப்பட்டவர்களுக்கு தானமாக பிரித்து கொடுத்தார்.

டி.டி.வி தினகரனின் பலன்களை
அடுத்த இதழில் பார்ப்போம்…

 

-சுரேஷ் ஆழ்வார்

3

Leave A Reply

Your email address will not be published.