தி இந்து என்ற செய்தி இதழை நிறுவியவர்

0
Full Page

ஜி. சுப்பிரமணிய ஐயர் என அறியப்பட்ட கணபதி தீட்சிதர் சுப்பிரமணிய ஐயர் சனவரி 19, 1855 ல் தஞ்சையில் பிறந்தவர்.

Half page

இந்தியாவின் முன்னணி இதழியலாளர்களில் ஒருவர். செப்டம்பர் 20, 1878 இல் தி இந்து என்ற செய்தி இதழை நிறுவி 1898 வரை அதன் உரிமையாளர், மேலாண்மை இயக்குநர் மற்றும் பதிப்பாளராகவும் இருந்தவர். சுதேசமித்திரன் என்ற தமிழ் வார இதழை மார்ச்சு, 1882 இல் தொடங்கியவர். சமூக சிந்தனையாளர் மற்றும் விடுதலைப் போராட்ட வீரரும் ஆவார்.

சுப்பிரமணிய ஐயர் 1885 ஆம் ஆண்டில் பம்பாயில் இடம்பெற்ற இந்திய காங்கிரசின் முதலாவது மாநாட்டில் அம்மாநாட்டின் முதலாவது தீர்மானமாக இந்தியாவில் ஆங்கிலேயரின் ஆட்சியைப் பற்றி விசாரணை நடத்துவது சம்பந்தமாகக் கொண்டு வந்தார்.

Quarter page

Leave A Reply

Your email address will not be published.