டெல்டா விவசாயிகளுக்கு ஒரு அறிய வாய்ப்பு

0
Business trichy

டெல்டா விவசாயிகளுக்கு ஒரு அறிய வாய்ப்பு

விவசாயிகளுக்கு வணக்கங்கள்,

திருச்சியில், பிப்ரவரி 2 முதல் 10 வரை, நடத்த உள்ள சுபாஷ் பாலேக்கர் இயற்கை விவசாயப் பயிற்சி பெருவாரியான தமிழக விவசாயிகளுக்கு சென்று சேர வேண்டும் என்று விரும்புகிறோம்.

இரசாயனமற்ற, நஞ்சில்லாத, தற்சார்புடைய, இவ்விவசாய முறையை நாம் மற்ற விவசாயிகளுக்குக் கொண்டு செல்லும் போது அவரது வாழ்விலும், சுற்றுச்சூழல் நிலையிலும், பொருளாதார நிலையிலும் ஒரு நல்ல மாற்றத்தை உருவாக்க நாம் காரணமாக இருக்கின்றோம்.

இத்தகைய வாப்பினை தங்கள் விவசாயம் சார்ந்த நண்பர்கள், உறவினர்கள், குழு உறுப்பினர்கள் என அனைவருக்கும் தாங்கள் கொண்டு சேர்ப்பதன் மூலம் தமிழ் நாட்டின் மக்களின் ஆரோக்கியத்தை உறுதிப்படுத்துவதோடு மட்டுமல்லாது, இயற்கை விவசாயப் புரட்சியையும் நாம் உருவாக்க முடியும்.

பயிற்சி துவங்க இன்னும் இரண்டு வாரங்களே உள்ளது. இருப்பினும், பயிற்சியில் கலந்து கொள்ள விரும்பும் அனைத்து விவசாயிகளுக்கும் தேவையான ஏற்பாடுகளை ஈஷா விவசாய இயக்கம் செய்யத் தயாராக உள்ளது.

அவ்விவசாயிகளை நிகழ்ச்சிக்கு கொண்டுவந்து சேர்ப்பது என்பது உங்கள் கைகளில் உள்ளது. உங்களது பங்களிப்பினால் இந்நிகழ்ச்சி மேலும் சிறக்கும் என்பது நிச்சயம்.

 

சிறப்பு அம்சங்கள் :

  • வெளி இடுபொருட்கள் தேவையில்லாத தற்சார்பு இயற்கை விவசாயம்.
  • ஒரு நாட்டுப் பசுவை வைத்து 30 ஏக்கர் வரை விவசாயம்.
  • குறைந்த நீர் மற்றும் குறைந்த மின்சாரத்தில் விவசாயம்.
  • தரமான, நஞ்சில்லாத உணவு உற்பத்தி.
  • பலபயிர் சாகுபடி நுட்பங்கள்.
  • பணியாட்கள் செலவைக் குறைக்கும் நுட்பங்கள்.
  • இரசாயன பூச்சிக் கொல்லிகளினால் ஏற்படும் உடல்நல பாதிப்புகளில் இருந்து விடுதலை.

பயிற்சி நாள்:

02.02.2019 காலை 9 மணி முதல் 10.02.2019 மாலை 6 மணி வரை 9 நாட்கள் தொடர்ந்து நடைபெறும்.

பயிற்சி நடைபெறும் இடம்:

S.R.M மருத்துவக் கல்லூரி வளாகம்,
திருச்சி – சென்னை சாலை, இருங்கலூர்,
சமயபுரம் Toll Gate (சுங்கச்சாவடி) அருகில்,
மண்ணச்சநல்லூர்,
திருச்சி – 621105
திருச்சியிலிருந்து 18 கி.மீ.

முக்கியக் குறிப்புகள்:

விவசாயம் செய்து கொண்டிருப்பவர்கள் மற்றும் அர்ப்பணிப்பு உணர்வுடன் மற்றவர்களுக்குக் கற்றுக்கொடுக்க ஆர்வம் உள்ளவர்கள் விண்ணப்பிக்கவும்.

தினசரி வருகை பதிவேடு எடுக்கப்படும், 9 நாட்களும் முழுமையாக கலந்துகொள்வது அவசியம்.

9 நாட்களும் பயிற்சியில் பங்கேற்பவர்களுக்கு ஈஷா விவசாய இயக்கம், இயற்கை விவசாயம் குறித்த ஆலோசனைகளையும் ஆதரவையும் தொடர்ந்து வழங்கும்.

 

MDMK
Kavi furniture

பயிற்சியில் பங்குகொள்ள விருப்பம் உள்ள விவசாயிகள் விரைவாக விண்ணப்ப படிவத்தை projectgreenhands.org/SPNF என்ற இணையதள முகவரியில் ஆல்லைனில் பதிவு செய்து கொள்ளலாம், நன்கொடையை ஆன்லைன் மூலமாகவே செலுத்தலாம்.

அல்லது தமிழகம் முழுவதுமுள்ள ஈஷா நர்சரிகளில் விண்ணப்பங்களைப் பூர்த்தி செய்து கொடுத்து, அங்கேயே நன்கொடையையும் செலுத்தி பதிவு செய்து கொள்ளலாம்.

மேலும் கூடுதல் தகவல்களுக்கு 83000 93777, 94425 90077 என்ற கைபேசி எண்களைத் தொடர்பு கொள்ளவும்.

 

Pranav city

Leave A Reply

Your email address will not be published.