என்ன செய்ய வேண்டும் திருச்சி மாநகர காவல் ஆணையர்….!

0

 

“லஞ்ச வழக்கும்_திருச்சி மாநகர குற்றப்பிரிவு உதவி ஆணையர் கைதும்”

என்ன செய்ய வேண்டும் திருச்சி மாநகர காவல் ஆணையர்….!

‌சந்தா 1

பொதுமக்கள் தங்கள் பிரச்சினைக்கு உள்ளூர் காவல் நிலையத்தில் தீர்வு கிடைக்கவில்லை என்றால், மேல் அதிகாரியை நாடி தங்கள் குறைகளை முறையிடுவது என்பது வழக்கமான ஒன்று தான்.

ஆனால் திருச்சி மாநகரில் நடக்கும் லட்சம், கோடி என பெரும் மோசடி குற்ற சம்பவங்கள் விசாரிப்பதற்கென்றே பிரத்யேகமாக அமைக்கப்பட்ட பிரிவு தான் “மாநகர குற்றப்பிரிவு”.

மாநகர குற்றப்பிரிவில் சிறப்பு என்னவென்றால், வழக்கமான காவல் நிலையங்களை போன்று பாதிக்கபட்டவர்கள் நேரில் சென்று புகார் கொடுக்க முடியாது.

நீங்கள் பாதிக்கபட்டவர் என்றால் காவல் ஆணையரையோ அல்லது துணை ஆணையரை நேரிலோ/தபாலில் முதலில் புகார் கொடுக்க/அனுப்ப வேண்டும்.

இவ்வாறு பெறப்படும் புகார் காவல் ஆணையர் பரிசீலித்து மாநகர குற்றப்பிரிவுக்கு விசாரிக்க உகந்தது என பரிந்துரைத்தால் மட்டுமே மாநகர குற்றப்பிரிவு விசாரிக்க முடியும்.

அப்படியானால் உயர் அதிகாரிகளின் நேரடி கட்டுபாட்டின் கீழ் “மாநகர குற்றப்பிரிவு” வருகிறது என்பது தான் உண்மை.

சந்தா 2

இப்பேர்ப்பபட்ட மிகவும் சென்சிட்டிவான விவகாரத்தை விசாரிக்கும் முக்கிய பிரிவில், அதுவும் உதவி ஆணையர் பதவியில் உள்ளவரை, திருச்சி லஞ்ச ஒழிப்பு போலிசார் “மாநகர குற்றப்பிரிவு” அலுவலகத்திலே கைவும், களவுமாக கைது செய்யப்படுகிறார் என்றால், அந்த அதிகாரியின் நடவடிக்கை எந்த அளவிற்கு எல்லை தாண்டியிருக்கும் என்பதை தாங்களே யுகித்து கொள்ளுங்கள்.

மேலும் இந்த அலுவலகத்தின் மேல்புறம் குற்றப்பிரிவு துணை ஆணையர் அலுவலகம் உள்ளது.

மேலும் திருச்சி மாநகர காவல் நிலையங்களில் நடக்கும் நேரடி மற்றும் மறைமுக தவறுகள் அனைத்தையும் கண்காணிப்பதற்கென்றே ஒவ்வொரு காவல் நிலையத்திலும் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் இருப்பது வழக்கம்.

இந்த நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் காவல் நிலையங்களில் நடக்கும் சமாச்சாரங்களை உடனுக்குடன் உயர் அதிகாரிகளுக்கு தெரியபடுத்துவர், அதன் அடிப்படையில் மேல்நடவடிக்கை எடுக்கப்படும்.

ஆனால் தற்பொழுது இந்த நுண்ணறிவு பிரிவு உள்ளிட்ட சில மிக முக்கிய பிரிவுகள் “மாநகர குற்றப்பிரிவு உதவி ஆணையர் காட்டிய பாதையில் சீறும், சிறப்புமாக பயணப்படுகின்றனர் என்பது நிதர்சனமான உண்மை.

திருச்சி மாநகர உயர் அதிகாரிகள், அவர்கள் கீழ் பணியாற்றும் அதிகாரிகள் எந்த அளவிற்கு விசுவாசமாக பணியாற்றுகிறார்கள் என்பதற்கு, மாநகர காவல் துறையில் நேரடி கட்டுப்பாட்டில் உள்ள குற்றப்பிரிவு உதவி ஆணையர் லஞ்ச வழக்கில் கைது செய்யபட்டிருப்பது ஒரு சிறு உதாரணம்.

உயர் அதிகாரிகள் தன் கீழ் பணியாற்றும் அதிகாரிகள் மீது தனது அதிகாரத்தை செலுத்த வேண்டும். மாறாக “அன்பையும்_பரிவையும்” காட்டினால் தலை குனிவு தான் மிஞ்சும்.

நான் என்றும் மதிக்கும் தமிழ்நாடு காவல் துறை என்றும் தலை நிமிர்ந்து தான் இருக்க வேண்டும். அப்பொழுது தான் பொதுமக்களாகிய நாங்கள் தலை நிமிர்ந்து நடக்க முடியும்.

S.R.கிஷோர்குமார்,
வழக்கறிஞர்.

Leave A Reply

Your email address will not be published.