உலக கோப்பை கிரிக்கெட் போட்டி அட்டவணை முழுவிவரம்

0
1 full

உலக கோப்பை போட்டி அட்டவணை முழுவிவரம் – இந்தியா மோதும் நாடு தேதி விவரம்

உலக கோப்பை போட்டி அட்டவணை முழுவிவரம் அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்தியா மோதும் நாடு தேதி மற்றும் இடம் அறிவிப்பு.

2 full

12–வது உலக கோப்பை கிரிக்கெட் போட்டி (2019) இங்கிலாந்தில் மே 30–ந்தேதி முதல் ஜூலை 14–ந்தேதி வரை நடக்கிறது. இதற்கான போட்டி அட்டவணையை இறுதி செய்து, சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் (ஐ.சி.சி.) செயல் அதிகாரிகள் கமிட்டி ஐ.சி.சி. போர்டுக்கு அனுப்பியுள்ளது. ஐ.சி.சி. போர்டு குழு ஒப்புதல் அளித்ததும் போட்டி அட்டவணை அதிகாரபூர்வமாக வெளியிடப்பட உள்ளது.

1992–ம் ஆண்டு உலக கோப்பைக்கு பிறகு முதல் முறையாக ரவுன்ட் ராபின் அடிப்படையில் லீக் சுற்று நடக்கிறது. அதாவது பங்கேற்கும் 10 அணிகளும் தங்களுக்குள் தலா ஒரு முறை சந்திக்க வேண்டும். லீக் முடிவில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் அரைஇறுதிக்கு முன்னேறும்.

மொத்தம் 10 நகரங்களில் உள்ள 11 ஸ்டேடியங்களில் 48 ஆட்டங்கள் நடக்கின்றன. ஆசிய துணைக் கண்டத்து ரசிகர்கள் இரவு 11 மணிக்குள் கிரிக்கெட் போட்டி ஆட்டங்களை டி.வி.யில் பார்க்க வேண்டும் என்ற அடிப்படையில் இந்தியா, இலங்கை, பாகிஸ்தான் அணிகள் லீக் சுற்று வரை எந்த பகல்–இரவு ஆட்டங்களிலும் விளையாடாத வகையில் போட்டி அட்டவணை உருவாக்கப்பட்டுள்ளது. போட்டியை நடத்தும் இங்கிலாந்து அணி தங்களது 9 லீக் ஆட்டங்களையும் 9 வகையான மைதானங்களில் விளையாடுகிறது. அந்த அணி தொடக்க ஆட்டத்தில் மே 30–ந்தேதி தென்ஆப்பிரிக்காவை எதிர்கொள்கிறது.

அரைஇறுதி ஆட்டங்கள் மற்றும் இறுதிப்போட்டியை பகல் ஆட்டங்களாக நடத்த திட்டமிடப்பட்டு இருக்கிறது. பரம வைரிகள் இந்தியா–பாகிஸ்தான் அணிகள் மோதும் ஆட்டம் ஜூன் 16–ந்தேதி மான்செஸ்டரில் நடக்கிறது. இதே போல் எதிர்பார்ப்புக்குரிய நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியா–இந்தியா இடையிலான ஆட்டம் ஜூன் 9–ந்தேதி லண்டன் ஓவலில் அரங்கேறுகிறது. இறுதிப்போட்டி லண்டன் லார்ட்சில் ஜூலை 14–ந்தேதி நடக்கிறது. ஜூலை 15–ந்தேதி இறுதிப்போட்டிக்குரிய மாற்று நாளாக வைக்கப்படும்.

இந்திய அணி விளையாடும் லீக் ஆட்டங்கள்

ஜூன்.5 தென்ஆப்பிரிக்கா -சவுதம்டன்

ஜூன்.9 ஆஸ்திரேலியா- தி ஓவல்

ஜூன்.13 நியூசிலாந்து -நாட்டிங்காம்

ஜூன்.16 பாகிஸ்தான் -மான்செஸ்டர்

ஜூன்.22 ஆப்கானிஸ்தான்- சவுதம்டன்

ஜூன்.27 வெஸ்ட் இண்டீஸ்- மான்செஸ்டர்

ஜூன்.30 இங்கிலாந்து -பர்மிங்காம்

ஜூலை.1 வங்காளதேசம் -பர்மிங்காம்

ஜூலை.6 இலங்கை லீட்ஸ்

டிக்கெட் விலை

• 80,000+ டிக்கெட்டுகள் விலை ரூ 1834 (£20)

• 200,000+ டிக்கெட்டுகள் ரூ.4584 (£50) அல்லது அதற்கும் குறைவாக

• குழந்தைகளுக்கான கட்டணம் ரூ 550 இல் இருந்து ஆரம்பம் ( £6)

• குடும்பம் நான்கு நபர் ரூ.4765 (£52)

உலககோப்பை போட்டி அட்டவணை முழுவிவரம் வருமாறு:-

கார்டிஃப் வேல்ஸ் ஸ்டேடியம், கார்டிஃப்

1 ஜூன் – நியூசிலாந்து v இலங்கை (பகல்)
4 ஜூன் – ஆப்கானிஸ்தான் v இலங்கை(பகல்)
8 ஜூன் –இங்கிலாந்து v வங்காளதேசம்(பகல்)
15 ஜூன் – தென்னாப்பிரிக்கா v ஆப்கானிஸ்தான் (பகல்/இரவு)

கவுண்டி மைதானம் பிரிஸ்டல்

1 ஜூன் – ஆப்கானிஸ்தான் ஆஸ்திரேலியா(பகல்/இரவு)
7 ஜூன் – பாகிஸ்தான் v இலங்கை (பகல்)
11 ஜூன் – வங்காளதேசம் v இலங்கை(பகல்)

கவுண்டிகிரவுண்ட் டவுன்டன், டவுன்டன்

8 ஜூன் – ஆப்கானிஸ்தான் v நியூசிலாந்து(பகல்/இரவு)
12 ஜூன் – ஆஸ்திரேலியா v பாகிஸ்தான்(பகல்)
17 ஜூன் – வெஸ்ட் இண்டீஸ்வங்காளதேசம்(பகல்)

எட்க்பாஸ்டன், பர்மிங்காம்

19 ஜூன்– நியூசிலாந்து v தென்னாப்பிரிக்கா(பகல்)
26 ஜூன்நியூசிலாந்து v பாகிஸ்தான் (பகல்)
30 ஜூன் – இங்கிலாந்து v இந்தியா(பகல்)
2 ஜூலை – வங்காளதேசம் v இந்தியா(பகல்)
11 ஜூலை– இரண்டாவது அரை இறுதி (2 v 3) (பகல்)
12 ஜூலை – ரிசர்வ் டே

ஹாம்ப்ஷயர் பவுல், சவுத்தாம்ப்டன்

5 ஜூன் – தென்னாப்பிரிக்கா v இந்தியா(பகல்)
10 ஜூன் – தென்னாப்பிரிக்கா v வெஸ்ட்இண்டீஸ் (பகல்)
14 ஜூன் – இங்கிலாந்து v வெஸ்ட்இண்டீஸ்(பகல்)
22 ஜூன்– இந்தியா v ஆப்கானிஸ்தான்(பகல்)
24 ஜூன்– வங்காளதெசம் v ஆப்கானிஸ்தான் (பகல்)

ஹெட்பிங்லே, லீட்ஸ்

21 ஜூன் – இங்கிலாந்து v இலங்கை(பகல்)
29 ஜூன் – பாகிஸ்தான் v ஆப்கானிஸ்தான்(பகல்)
4 ஜூலை – ஆப்கானிஸ்தான் v வெஸ்ட்இண்டீஸ் (பகல்)
6 ஜூலை – இலங்கை v இந்தியா (பகல்)

லார்ட்ஸ், லண்டன்

23 ஜூன் – பாகிஸ்தான் v தென்னாப்பிரிக்கா(பகல்)
25 ஜூன் – இங்கிலாந்து v ஆஸ்திரேலியா(பகல்)
29 ஜூன் – நியூசிலாந்துv ஆஸ்திரேலியா(பகல்/இரவு)
5 ஜூலை – பாகிஸ்தான் v வங்காளதேசம்(பகல்/இரவு)
14 ஜூலை – இறுதிப்போட்டி (பகல்)
15 ஜூலை – ரிசர்வ் டே

ஓல்ட்டிராஃபோர்ட், மான்செஸ்டர்

16 ஜூன் – இந்தியா v பாகிஸ்தான் (பகல்)
18 ஜூன் – இங்கிலாந்து v ஆப்கானிஸ்தான் (பகல்)
22 ஜூன் – வெஸ்ட்இண்டீஸ் v நியூசிலாந்து(பகல்/இரவு)
27 ஜூன் – வெஸ்ட்இண்டீஸ் v இந்தியா(பகல்)
6 ஜூலை – ஆஸ்திரேலியா v தென்னாப்பிரிக்கா(பகல்/இரவு)
9 ஜூலை – முதல்அரையிறுதி (1 v 4) (பகல்)
10 ஜூலை – ரிசர்வ் டே

திஓவல், லண்டன்

30 May – இங்கிலாந்து v தென்னாப்பிரிக்கா(பகல்)
2 ஜூன் –தென்னாப்பிரிக்காv வங்காளதேசம்(பகல்)
5 ஜூன் – வங்காளதேசம் v நியூசிலாந்து(பகல்/இரவு)
9 ஜூன் – இந்தியா v ஆஸ்திரேலியா(பகல்)
15 ஜூன் – இலங்கை v ஆஸ்திரேலியா(பகல்)

திரிவர்சைடு, செஸ்டர்-லெ-ஸ்ட்ரீட்

28 ஜூன் – இலங்கை v தென்னாப்பிரிக்கா(பகல்)
1 ஜூலை – இலங்கை v வெஸ்ட்இண்டீஸ்(பகல்)
3 ஜூலை – இங்கிலாந்து v நியூசிலாந்து(பகல்)

ட்ரெண்ட் பிரிட்ஜ், நாட்டிங்காம்

31 May – வெஸ்ட்இண்டீஸ் v பாகிஸ்தான்(பகல்)
3 ஜூன் – இங்கிலாந்து v பாகிஸ்தான்(பகல்)
6 ஜூன் – ஆஸ்திரேலியா v வெஸ்ட்இண்டீஸ் (பகல்)
13 ஜூன் – இந்தியா v நியூசிலாந்து(பகல்)
20 ஜூன் – ஆஸ்திரேலியா v வங்காளதேசம் (பகல்)

ICC Cricket World Cup 2019 schedule announced https://t.co/b7dDX8ndKs#cricket@iccpic.twitter.com/z5YNEW42ZK

3 half

Leave A Reply

Your email address will not be published.