B.R.அம்பேத்கார் இளைஞர் நற்பணி மன்றத்தின் 16-ஆம் ஆண்டு முப்பெரும் விழா

திருச்சிராப்பள்ளி, நேரு யுவ கேந்திரா மற்றும் திருச்சி, சிந்தாமணி, பதுவை நகர், Dr. B.R.அம்பேத்கார் இளைஞர் நற்பணி மன்றத்தின் 16-ஆம் ஆண்டு முப்பெரும் விழா 16 ஜனவரி 2019 அன்று மாலை 6.00 மணியளவில் நடைபெற்றது.
இவ்விழாவையோட்டி அப்பகுதி சிறுவர் சிறுமிகளுக்கு விளையாட்டு போட்டிகளும், கலைப்போட்டிகளும் நடத்தப்பட்டது, மேலும் சிறுவர் சிறுமிகளின் நடன நிகழ்ச்சிகளும் நடைபெற்றன.


இவ்விழாவில் திருச்சி, நேருயுவகேந்திராவின் கணக்காளர் மகேஷ்வரன் தலைமைவகித்தார். மேலும் திருச்சி கவிஞர் கவிசெல்வா, தமிழன் சிலம்பம் பாசறை நிறுவனர் கார்த்திக் ரகுநாத், கன்மலை அறக்கட்டளை நிறுவனத்தலைவர் வில்பர்ட் எடிசன் மற்றும் கன்மலை அறக்கட்டளை நிறுவாகிகள் மற்றும் உறுப்பினர்கள் முன்னிலைவகித்து வெற்றி பெற்ற சிறுவர் சிறுமிகளுக்கு பாிசுகள் வழங்கினார்கள்.
முன்னதாக Dr. B.R.அம்பேத்கார் இளைஞர் நற்பணி மன்றத்தின் தலைவர் பக்கிரிசாமி வரவேற்புறை வழங்கினார். இறுதியாக கௌரவத்தலைவர் கோபிநாத் நன்றிகூறி நிறைவு செய்தார். இவ்விழாவை Dr. B.R.அம்பேத்கார் இளைஞர் நற்பணி மன்றத்தினர் ஏற்பாடு செய்திருந்தனர்.
