திருச்சி தினகரன் நிருபர் மாரடைப்பால் மரணம்

திருச்சி தினகரன் நிருபர் மாரடைப்பால் மரணம்
திருச்சி மாவட்டம் துறையூர் தாலுகா காளிப்பட்டியைச் சேர்ந்தவர் சுபாஷ் சந்திரன் (50). கடந்த 20 ஆண்டு காலமாக தினகரன் நாளிதழ் நிருபராகவும், கடந்த சில ஆண்டு காலமாக சன் டிவி நிருபராகவும் பணியாற்றி வந்தார். இன்று அதிகாலை 2. மணியளவில் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த அவருக்கு திடீர் மாரடைப்பு ஏற்பட்டது.


உறவினர்கள் தனியார் ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றும் வழியில் இறந்தார். மறைந்த சுபாஷ்க்கு ஒரு மகளும், மகனும் உள்ளனர். நிருபர் சுபாஷின் இறுதி ஊர்வலம் மாலை 4 மணிக்கு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது மறைந்த சுபாஷ்க்கு இதமிழ் நியூஸ் அஞ்சலியை செலுத்துகிறது.
அந்த பகுதியில் உள்ள மூத்த செய்தியாளர் ஒருவர்
எங்கள் பகுதியில் நண்பர்கள் தினமலர் தியாகராஜன் .தினகரன் சக்திவேல் , தினத்தந்தி சுந்தரமூர்த்தி மறைந்துள்ளனர். தற்போது அந்த வரிசையில் துறையூர்சுபாஷ். இவர்கள் குடும்பத்தின் நிலை? ஊருக்காக உழைக்கும் நாம் ஏன் நம்மை பற்றி சிந்திப்பதில்லை. பத்திரிக்கையாளர் நல வாரியம் அமைப்பது எப்போது? தாலுகா செய்தியாளர்களின் அவல நிலை மாறுமா? சிந்திப்பீர் நண்பர்களே? என்று ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்..
