தமிழகம்: கைவிடப்பட்ட குழந்தைகள் அதிகம்!

0

தமிழகத்தில் கைவிடப்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாகப் பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம் கூறுகையில், சைல்டு லைன் கேர் பவுண்டேஷன் மற்றும் தேசிய குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையமும் இணைந்து வெளியிட்டுள்ள புள்ளி விவரத்தில், தமிழகத்தில் 7-18 வயதுள்ள 1,550 குழந்தைகள் கைவிடப்பட்டவர்கள். இதற்கடுத்தபடியாக, மேற்கு வங்கத்தில் 933 குழந்தைகளும், கர்நாடகாவில் 729 குழந்தைகளும் கைவிடப்பட்டவர்கள் என்று தெரிவித்துள்ளது.

குழந்தைகள் இல்லங்களில் வாழும் 3.7 லட்சம் குழந்தைகளுக்கு முறையான பராமரிப்பு மற்றும் பாதுகாப்பான வாழ்க்கை முறை தேவைப்படுகிறது. தமிழகத்தில் 1,647 குழந்தை இல்லங்களில் 87,000 குழந்தைகள் இருக்கின்றனர். அதில், 5,994 குழந்தைகள் அநாதைகள். 217 குழந்தைகள் தாமாக வந்து சேர்ந்தவர்கள். 1,550 குழந்தைகள் பெற்றோர்களால் கைவிடப்பட்டவர்கள். இதில், 743 பெண் குழந்தைகள் அடங்குவர். கைவிடப்பட்ட குழந்தைகளில் பெரும்பாலானவர்கள் ஒரு பெற்றோரை மட்டும் கொண்டவர்கள்.

food

யுனிசெப்பின் முன்னாள் குழந்தை பாதுகாப்பு சிறப்பு நிபுணர் வித்யசாகர் கூறுகையில், தமிழகத்தில் திருமணமாகாத தாய்மார்களின் எண்ணிக்கை அதிகரிப்பும், குழந்தைகள் கைவிடப்படுவதற்கு காரணமாக இருக்கிறது. அதனால், இதற்குத் தீர்வு காண்பதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இந்த மாதிரியான குழந்தைகளுக்கு இனப்பெருக்க உரிமைகள் குறித்து பள்ளிப் பருவத்திலிருந்தே கற்றுக் கொடுக்க வேண்டும். அதுபோன்று குழந்தை திருமணங்களை தடுப்பதற்கும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இந்த பிரச்சனைகளுக்கு குறுகிய காலத்தில் தீர்வு காண முடியாது. ஆனால், கவனத்துடன் பிரச்சனைகளை அணுக வேண்டும் என கூறினார்.
அதிகமான குழந்தைகள் இல்லங்கள் இருப்பதால்தான், இந்த எண்ணிக்கை அதிகரித்துள்ளது என குழந்தைகள் நல ஆர்வலர் ஒருவர் கூறியுள்ளார். குழந்தை பாதுகாப்புக்காக பல்வேறு நலன்புரி திட்டங்கள் கொண்டுவரப்பட்டாலும், கைவிடப்படும் குழந்தைகளின் எண்ணிக்கை அதிகரித்திருப்பது கவலையளிக்கிறது என தெரிவித்துள்ளார்.

gif 4

Leave A Reply

Your email address will not be published.