வளம் தரும் பொங்கல்

0
1 full

பண்டையக் காலத்தில் பெரும்பான்மை மக்களின் தொழிலாக இருந்தது உழவு. செய்யும் தொழிலே தெய்வம் என்ற பழமொழிக்கு வித்திடும் வகையில் உழவு தொழிலுக்கு உதவியாக இருந்த சூரியன், மாடு, மற்றும் உழவர்களுக்கு நன்றி கூறும் பண்டிகையே பொங்கல்.

விவசாயம் நடக்க முதல் காரணமாக இருப்பது சூரிய ஒளியே, அதனால் தான் சூரியனுக்கு படையல் வைத்து சூரிய பொங்கல் முதல் நாள் கொண்டாடப்படுகிறது. பிறகு உழவிற்கு மிகவும் உறுதுணையாக இருக்கும் மாட்டிற்கு நன்றி கூறும் வகையில் மாட்டுப்பொங்கல்,அடுத்து விவசாயத்தை செம்மையாக செய்யும் உழவர்களுக்கு உழவர் பொங்கல் என வரிசையாக பொங்கள் பண்டிகை கொண்டாடப்படுகிறது.

பொங்கல் என்பது தமிழக மற்றும் இந்திய தென் மாநிலங்களில் கொண்டாடப்படும் பழமை வாய்ந்த பண்டிகையாகும். முக்கியமாக தமிழர்கள் மத்தியில் பொங்கல் மிகவும் பிரபலமான கலாச்சார விழாவாக திகழ்கிறது. பொங்கலின் வரலாறு என்று காண வேண்டும் எனில் நாம் கி.மு 200 ஆண்டுக்கு செல்ல வேண்டும்.

2 full

கி.மு 200 – கி.மு. 300 களில் பொங்கல் என்பது சமஸ்கிரத புராணம் மற்றும் திராவிட அறுவடை பண்டிகையாக குறிப்பிடப்பட்டுள்ளது. வரலாற்றை பார்க்கும் போது சங்க காலத்தில் முன்னோர்கள் பொங்கல் தை நீராடல் என்ற பெயரில் கொண்டாடப்பட்டதாக கூறப்பட்டுள்ளது. பாவை நோன்பு சங்கக் காலத்தில் கொண்டாடப்பட்ட தை நீராடல் தான் இன்று பொங்கலாக கொண்டாடப்படுகிறது என்றும். அந்த காலத்தில் பெண்கள் தை நீராடலின் போது பாவை நோன்பு விரதத்தை கடைப்பிடித்து வந்தனர் என்றும் கூறப்படுகிறது.

பல்லவர்களின் காலமான கி.பி 400 – கி.பி 800 க்கு இடையில், பொங்கல் மிகவும் முக்கியமான பண்டிகையாக கொண்டாடப்பட்டு வந்துள்ளது. மழையும், வளமும் செழிக்க வேண்டி வணங்கி இளம் பெண்கள் விரதம் இருந்து வந்தனர். இந்த காலக் கட்டத்தில் பெண்கள் பால் மற்றும் பால் பொருட்களை தவிர்த்து, தலையில் எண்ணெயயிட்டுக் கொள்ளாமல், கடுமையான சொற்களை பயன்படுத்தாமல் இருந்து விரதம் இருந்து வருவார்கள். அதிகாலையில் எழுந்து குளித்து கடவுள் வழிபாடு நடத்தி வந்தனர். ஈர மண்ணில் செய்யப்பட்ட கட்யாயணி என்ற பெண் கடவுளை வணங்கி, தை மாதத்தின் முதல் நாளன்று விரதத்தை முடித்துக் கொள்வார்கள். இது போன்ற பல மரபும், சடங்குகளும் நிறைந்திருந்தது பொங்கல் பண்டிகை.

இப்பண்டிகை குறித்து ஆண்டாளின் திருப்பாவை, மாணிக்கவாசகரின் திருவெம்பாவை ஆகியவற்றில் தெளிவாக குறிப்பிடப்பட்டிருக்கிறது. மேலும் திருவள்ளூர் வீரராகவா கோவிலில் உள்ள கல்வெட்டிலும் கூட இது குறிப்பிடப்பட்டுள்ளது.

பொங்கல் பண்டிகையின் இன்னொரு சிறப்பு, தமிழ் மாதங்களில் தலை மாதமான தை மாதத்தின் பிறப்பு. தைத் திங்களில்தொடங்கும் எதுவும் தழைத்தோங்கும் என்ற நம்பிக்கை தமிழர்களின் மனதில் காலம் காலமாக வேரூண்றி விட்ட ஒன்று. தைப்பிறந்தால் வழி பிறக்கும் என்ற பழமொழியே அதற்கு நல்ல சான்று. தை மாதப் பிறப்பில் அறிவியலும் ஒளிந்துள்ளது. சூரியனுடைய முழுச் சுழற்சியும் தென் கோடியில் முடிந்து, திரும்பவும் வடக்குநோக்கி நகரும் காலத்தை உத்தராயணம் என்பார்கள். அந்த உத்தராயணத்தின் தொடக்கம்தான் தை மாதம்.

போகிக்கு இன்னொரு கதையும் உண்டு. மழை தரும் வருண பகவானின் மறுபெயர் போகி என்பதாகும். நல்ல மழை தந்து,விவசாயத்தை செழிப்பாக்கி, உழவர் பெருமக்களின் மனதில் உவகை பொங்க உதவிய வருண பகவானை வணங்கும்விதமாகவும் போகிப் பண்டிகை கொண்டாடப்படுவதாக ஒரு வரலாறு உண்டு.

தைத் திங்களின் முதல் நாள் வீடுமுழுக்க சுத்தம் செய்து, புதுப் பானையில், அறுவடை செய்த புது நெல்லைப் போட்டு பொங்கல் வைப்பர், புதுப்பானையில் இட்ட புத்தரிசி பொங்கி வருவதைப் பார்த்து பொங்கலோ பொங்கல், பொங்கும் மங்கலம் எங்கும் தங்குக என்றுபாடி, குலவையிட்டு மகிழ்ச்சி அடைவர் தமிழ் மக்கள். இப்படிப் பொங்க விடுவதால்தான் பொங்கல் என்ற பெயர் ஏற்பட்டதாம். நன்கு பொங்கி வழிந்தால் அந்த ஆண்டு முழுவதும்வீட்டிலும் சந்தோஷம் பொங்கி வழியும் என்ற நம்பிக்கை தமிழர்களிடம் உள்ளது. பொங்கல் பண்டிகையின்போது வீட்டின் முன்பு வாசலில், அரிசி மாவால் கோலமிட்டு அலங்கரிப்பர். அரிசி மாவுக் கோலம் இடுவதற்கு முக்கியக் காரணம், எறும்பு போன்ற சிற்றுயிரினங்கள் அதை சாப்பிட்டு நம்மை வாழ்த்திச் செல்லும் என்பதால்தான்அரிசி மாவால் கோலமிடுகிறார்கள்.

படைக்கப்பட்ட பொங்கலை நம்மைக் காக்கும் தெய்வங்களுக்குப் படையலிட்டு பின்னர் குடும்பத்தோடு உண்டு மகிழ்வதுவழக்கம். பொங்கல் பண்டிகையின் நாயகனே சூரிய பகவான்தான். எனவே பொங்கலை வீட்டுக்குள் வைக்காமல், வெட்டவெளியில், படைப்பதே சிறந்தது. பொங்கல் பண்டிகையுடன் இணைந்த மற்றொரு சிறப்பு கரும்பு. இந்திரனின் கரும்பு வில்லை நினைவு கூறும் வகையிலேயேகரும்பு பொங்கல் பண்டிகையில் முக்கிய இடம் பிடித்துள்ளதாக ஒரு செய்தியும் உண்டு.

உழவுத் தொழிலுக்கு உறுதுணையாக இருந்து, வருடமெல்லாம் கடுமையாக உழைத்து, நமது உயர்வுக்கு உழைக்கும் மாடுகள்அன்று நன்கு குளிப்பாட்டப்பட்டு, கொம்புகளில் வர்ணம் பூசி, புதுக் கயிறு கட்டி, பொங்கலிட்டு அதை மாடுகளுக்குப் படைப்பர்விவசாயிகள். மாடுகளுக்கு பூஜையும் நடத்தப்படும்.
மாட்டுப் பொங்கலுடன் இணைந்த மற்றொரு விசேஷம் ஜல்லிக்கட்டு எனப்படும் ஏறு தழுவுதல். அந்தக் காலத்தில் ஏழு தழுவுதல்என்று அழைக்கப்பட்ட ஜல்லிக்கட்டு நிகழ்ச்சிக்கும் ஒரு தனிப்பெரும் வரலாறு உண்டு.

 

அந்தக் காலத்தில் கன்னி ஒருவளை மணம் முடிக்க விரும்பும் ஆடவன், ஜல்லிக்கட்டு காளையை அடக்கியாக வேண்டும். அப்படிகாளையை அடக்கும் காளைக்குத்தான் தங்களது பெண்களை அந்தக்கால தந்தையர் மணம் முடித்துக் கொடுப்பார்களாம்.இதற்காகவே வீடுகள் தோறும் காளைகள் வளர்க்கப்படுமாம். தமிழர்களின் வீர விளையாட்டுதான் ஜல்லிக்கட்டு.

3 half

Leave A Reply

Your email address will not be published.