பிளாஸ்டிக் இல்லா பொங்கலை கொண்டாடுகள் – மாவட்ட ஆட்சியர் வேண்டுகோள்

0

திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் விவசாயிகள், விவசாய தொழிலாளர்கள், வணிக நிறுவனங்கள், மாணவ, மாணவிகள், தொழிலாளர்கள், மருத்துவர்கள், வழக்கறிஞர்கள், தொண்டு நிறுவனங்கள், பத்திரிக்கை நிறுவனங்கள், ஊடகங்கள் மற்றும் செய்தியாளர்கள் அனைத்து தரப்பு மக்களுக்கும் தமிழர் திருநாள் பொங்கல் வாழ்த்துக்கள்.

விவசாயிகள் தங்கள் நிலங்களில் விளைவிக்கும் நெல்மணிகளை அறுவடை செய்து புது பானை புத்தரிசி பொங்கலிட்டும், தங்கள் கால்நடைகளுக்கு நன்றி செலுத்தும் வகையில் அணிகலன்கள் அலங்கரித்து படையலிட்டு பொங்கலிட்டு விவசாயிகள் மகிழ்வார்கள்.

சந்தா 2

திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் சுகாதாரம், சுத்தம், தூய்மை முழுமையாக கடைபிடிக்கப்பட்டு வருவதால் திருச்சிராப்பள்ளி மாவட்டம் முதல் இடத்தில் உள்ளது.

‌சந்தா 1

தமிழக அரசு 11.1.2019 முதல் பிளாஸ்டிக் பயன்படுத்துவது தடை செய்துள்ளது. டயர், பிளாஸ்டிக் பை, பிளாஸ்டிக் கப் போன்ற பொருள்களை எரிக்காமல் மாசு ஏற்படாத வகையில் கொண்டாடுவோம். பிளாஸ்டிகினால் கால்நடைகள் பாதிப்படைகிறது. நீர்நிலைகளில் தண்ணீர் தேங்கி மாசு ஏற்படுகிறது. மண் வளத்தை பாதிக்கிறது. ஆகவே மக்கும் பொருள்களை பயன்படுத்த வேண்டும் என்று பொதுமக்களுக்கு பல்வெறு நிகழ்வுகளின் வாயிலாக விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது. எனவே, பொதுமக்கள் இயறை்கையோடு இணைந்து மாசு ஏற்படாத வகையில் சிறப்பாக கொண்டாட மாவட்ட ஆட்சி தலைவர் வேண்டுகோள்விடுத்துள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.