தமிழ்நாடு அரசு தேர்வாணையம்  (TNPSC GROUP-I)

0
D1

 

தமிழ்நாடு அரசு  தேர்வாணையம் (TNPSC) அறிவிக்கப்பட்டுள்ள துணை ஆட்சியர், துணை காவல் கண்காணிப்பாளர், உதவி ஆணையர், மற்றும் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் போன்ற பணியிடங்களுக்கான எழுத்துத்தேர்விற்கான (ஆன்லைன் தேர்வு) அறிவிக்கை பெறப்பட்டு, 31.01.2019 வரை இத்தேர்விற்கு விண்ணப்பிக்க அனுமதிக்கப்பட்டுள்ளது.

N2

இதன்படி, மேற்காணும் தமிழ்நாடு தேர்வாணையம் (TNPSC) அறிவிக்கப்பட்டுள்ள தேர்விற்கென இலவச பயிற்சி வகுப்பு 22.01.2019 செவ்வாய்க்கிழமை அன்று முதல் திருச்சி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் துவங்கப்படவுள்ளது. இப்பயிற்சி வகுப்புகள் அனுபவமிக்க வல்லுநர்களால் நடத்தப்படுவதுடன் அவ்வப்போது மாதிரி தேர்வுகளும் நடத்தப்படும்.

D2

எனவே, மேற்காணும் தேர்வுகளுக்கு விண்ணப்பிக்கும் இளைஞர்கள் திருச்சி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்திற்கு 22.01.2019 அன்று காலை 10.00 மணியளவில் நேரில் வருகைபுரிந்து தங்களது பெயரை பதிவு செய்து கொண்டு, இலவச பயிற்சி வகுப்பில் கலந்து கொண்டு பயன்பெறுமாறு திருச்சிராப்பள்ளி மாவட்ட ஆட்சித் தலைவர்  இராசாமணி தெரிவிக்கிறார்கள்.

 

N3

Leave A Reply

Your email address will not be published.