புனித வளனார் கல்லூரி INDEP2019 நிறைவு & பரிசளிப்பு விழா புகைப்படங்கள்

நேற்று 12.01.2019 மதியம் 3 மணியளவில் தூய வளனார் கல்லூரியில் அனைத்து துறைகளுக் இடையிலான கலைப் போட்டிகள் நடைபெற்றது. இவ்விழாவில் திரைப்பட இசையமைப்பாளர் சாம் மற்றும் மேற்கு தொடர்ச்சிமலை இயக்குநர் ஆண்டோ கலந்து கொண்டு கலைப்போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கி சிறப்புரையாற்றினார்கள்.
இப்போட்டியில் தூய வளனார் மேலாண்மை நிறுவனம் மற்றும் வணிகவியல் (கணினி) துறை மாணவர்கள் முதல் சுழற்கோப்பைகளை தட்டிச் சென்றனர். மேலும் இக்கல்லூரியில் பயிலும் மாணவன் அபி உருவாக்கியுள்ள மென்பொருளை சிறப்புவிருந்தினர்கள் பயன்பாட்டுக்கு துவக்கிவைத்தனர்.


இவ்விழாவில் கல்லுரியின் அதிபர் தந்தை முனைவர் லியோனார்ட் பெர்னாண்டோ, செயலர் தந்தை முனைவர் அந்தோணி பாப்புராஜ், முதல்வர் தந்தை முனைவர் ஆரோக்கியசாமி சேவியர், துணைமுதல்வர்கள், துறை தலைவர்கள், மாணவர் சங்க தலைவர்கள் மற்றும் கலைப்போட்டிகளுக்கான ஒருங்கிணைப்பாளர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

