தேசிய குழந்தைத் தொழிலாளர் சீரமைப்புத் திட்டம் – “சியர்ஸ்”

0
Business trichy

திருச்சிராப்பள்ளி மாவட்ட ஆட்சித் தலைவர் தலைமையில் செயல்படும் – “சியர்ஸ்” தேசிய குழந்தைத் தொழிலாளர் சீரமைப்புத் திட்டத்தின் மூலம் 10.01.2019 தேதியன்று அமயபுரம் பகுதியில் வசிக்கும் மக்களுக்கிடையே குழந்தைத் தொழிலாளர் முறை ஒழிப்பு குறித்த பொம்மலாட்ட விழிப்புணர்வு கலை நிகழ்ச்சியானது நடத்தப்பட்டது.

இந்நிகழ்ச்சியை தேசிய குழந்தைத் தொழிலாளர் சீரமைப்புத் திட்டத்தின் திட்ட இயக்குநர் பியர்லின் தலைமை தாங்கினார். தேசிய குழந்தை தொழிலாளர் சீரமைப்புத் திட்டத்தின் திட்ட மேலாளர் கௌதம், சேவை சைல்டு லைன் திட்ட ஒருங்கிணைப்பாளர் முரளிக்குமார் ஆகியோர் முன்னிலைவகித்தனர்.

Image
Rashinee album

மேலும் சமாதானம் கலைக்குழுவின் பொம்மலாட்டத்தழன் மூலம் குழந்தைத் தொழிளாலர் முறை ஒழிப்பு பற்றிய விழிப்புணர்வு மக்களிடையே ஏற்படுத்தப்பட்டது. இந்நிகழ்ச்சி முடிவில் அமையபுரம் சிறப்புப் பயிற்சி மையத்தின் தொழிற்கல்வி பயிற்றுநர் ஜெசிந்தா நன்றியுரை ஆற்றி நிகழ்ச்சியை நிறைவு செய்தார்.

Ukr

Leave A Reply

Your email address will not be published.