ஸ்ரீரங்கம் கோவில் அருகே மர்ம கார் ! பீதியில் பக்தர்கள்

ஸ்ரீரங்கம் வெள்ளை கோபுரம் அருகில் கேரளா மாநில பதிவு எண்களைக் கொண்ட ஒரு கார் ஒன்று நீண்ட நாட்களாகவே ஒரே இடத்தில் இருந்து வருகிறது.காரினுள் சில பொருட்களும் உள்ளன இதனை கண்ட பக்தர்களும், பொதுமக்களும்,மிகுந்த அச்சத்துடன் காணப்படுகின்றன.இதனை பற்றி நாம் அங்குள்ள கோவில் நிர்வாகிகளிடமும்,காவலர் கேட்ட போது யாருக்கும் யாருடைய கார் என்பது தெரியவில்லை. இந்த மர்ம கார் குறித்து ஸ்ரீரங்கம் வாசிகள் பீதியில் இருக்கிறார்கள். பல மாநிலங்களில் இருந்து பக்தர்கள் வரும் நிலையில் வெளிமாநில கார் ஒன்று பல நாட்கள் அங்கேயே இருப்பது பலத்த சந்தேகத்தை ஏற்படுத்தி வருகிறது. காவல்துறை உடனே நடவடிக்கை எடுப்பார்களா என்பது ஸ்ரீரங்கவாசிகளின் கேள்வியாக இருக்கிறது.
