பேட்ட பட விமர்சனம் பொது ஜன பார்வையில்

0
1

Rajinified என்கிற அழைப்புடன் சென்று பார்த்த படம் ” பேட்ட ”

கதை .. திரைக்கதை … நடிகர்களின் நடிப்பு = ரஜினிகாந்த் என்கிற தனிமனிதனின் நடிப்பை சுற்றி ..

ஒரு நாற்பது வயதுகாராராக … ஒரு காலேஜ் ஹாஸ்டல் வார்டனாக வேலைக்கு சேர பிரதம மந்திரி உதவியாளர் போன் செய்து இவரை சேர்த்து கொள்ள சிபார்சுடன் வருவதாக படம் ஆரம்பிக்க .. அட இது எதோ பெரிய கதாபாத்திரம் போல என்று நாம் நினைக்க .. படம் முடியும் வரை வழக்கம் போல இவரது கதாபாத்திரம் ஒரு அநாதை .. (ஓட்டு வங்கியை எதிர்பார்த்து .) . யாரால் எடுத்து வளர்க்கப்பட்டு இருப்பார் என்று .. ஆம் முஸ்லிம் ஒருவரால் பேட்டை ஐயனார் கோவிலில் … இருந்து எடுத்து ..

2

ரஜினி படத்தில் லாஜிக் எல்லாம் கேட்க கூடாது ..கதை மற்றும் கதாபாத்திரம் பற்றி எப்படி கேட்பது ???

படத்தின் இசை … “மரண மாஸ் ” பாடல் அருமையாக பெப்பியா எடுத்து இருக்கிறார்கள் . உல்லாலா பாடல் மிக மென்மையாக ரஜினியின் வயசை உணர்ந்து மென்மையாக நடன காட்சிகள் ..ரஜினியின் சண்டை காட்சிகள் அதிமாக இருப்பதால் நிறைய “ஓசைதான் ” பின்னணி இசையாக இருக்கிறது ..

சிம்ரன் :- ரஜினியின் இளமை பக்கத்தை மென்மையாக காட்ட ஒரு சிறு பகுதியில் வருகிறார் .. காண்பவர் சிந்தனையில் இருவருக்கும் இடையில் ஏற்படுவதாக நடக்கும் விசயத்தை .. சண்டை போட போகும்போது சிம்ரனிடம் இருந்து வரும் போனை காட்டி சண்டைக்கு போகும் போது காதலுக்கு இது நேரமில்லை என்று சொல்லி .. சிம்ரன் கதாபாத்திரம் என்ன ஆச்சு என்றே தெரியாவில்லை!! என் அண்ணன் Santhanam Krishnan.. சிம்ரன் ரஜினி கடைசியில் இணைத்து இருந்தா நல்லா இருந்திருக்கும் என சொன்னார் .. நானும் அதான் நினைத்தேன் ..

திர்ஷா … ரஜினி மனைவி .. வில்லாதி வில்லனின் மனைவி என்ன ஆகவேண்டுமோ அதே ..வெடிகுண்டு மரிக்கிறார் .. பெரிதாக காட்சிகள் இல்லை இவருக்கு

சசிகுமார் , யோகிபாபு (சில நொடிகள்தான் தெரிந்த மாறி ஞாபகம் ) , Y G மகேந்திரன் பாபி சிம்ஹா இவர்கள் வந்து இருக்கிறார்கள் .ரஜினி கதாபாத்திரத்துக்கு பின்னே நிஜமாக ஓடி ஓடியார .. நன்றாக செய்து .. அவ்வளவுதான் .. YG மகேந்திரன் ரஜினி கூட ஒரு காட்சியிலும் வரவில்லை .. அவர் காலேஜ் முதல்வர் அவ்வளவே !!

சனந்த் ரெட்டி … இவர் படம் முழுவதும் ரஜினி கூட தோளின் பின்னே நிற்கிறார் .. பயந்த ஒரு வாலிபனாக வசனம் பெரிதாக எதுவமில்லை கதைக்கு ஒரு நகர்வு பாத்திரம் மட்டுமே .

விஜய் சேதுபதி .. வடநாட்டில் வாழும் தமிழ் தா’தா’ மிக மிக சிறப்பான உடல் மொழி .. தமிழும் ஹிந்தியும் கலந்து ஒரு எதார்த்த நடிப்பு ..ரஜினியை சந்திக்கும் காட்சிகளில் ஆளுமையான நடிப்பு ..

படத்தில் மிக மிக சிறப்பு இவரின் நடிப்பும் கதாபாத்திரமும்தான்..
with rajini in the screen , vijai sethupathi is able to attract us towards him … his screen presence is awesome ..

கேமரா … திரு …. இப்போது வரும் திரைப்படங்கள் கலர் என்பது நீங்களும் நானும் எடுக்கும் படங்கள் போல இல்லாமல் கலர் கலவை தனித்தன்மையுடன் இருப்பதாக பார்த்துக்கொள்கிறார்கள் .. இந்த படம் முழுவதும் புதுமையாக தீப்பந்த வெளிச்சத்தில் எடுத்தது போல அமைத்து இருக்கிறார்கள் .. ஒரு வித பிரவுன் மற்றும் மெல்லிய தங்க வண்ணம் .. பல சண்டை காட்சிகளில் கேமரா கோணங்கள் அருமையாக இருக்கிறது ..

கதை இயக்கம் … கார்த்திக் சுப்பராஜ் .. பழைய எல்லா ரஜினி படத்தையும் எடுத்து மிக்ஸ்யில் அடிச்சு வடிகட்டி .. ஒரு படம் ..

ரஜினியை ஒரு நடுத்தர வயதானவராக காட்டி ..சிம்ரன் கூட வரும் காட்சிகளில் … சில பல இளமைகால நினைவுகளை தூண்ட வைக்கும் காட்சிகளை அமைத்த பாங்கு அருமை ..

திரைக்கதை .. அப்படீனா .. பல கதாபாத்திரங்களுக்கான ஒட்டும் உறவும் புரியவில்லை ..

ரஜினி ஸ்டைல் .. அவரின் கண்களில் காணும் ஒரு வித கோவமான மினு மினுப்பை பல வருடங்கள் கழித்து திரையில் காட்டி இருக்கிறார் .

என்னம்மா உங்க அண்ணனை போட்டு தள்ளி விடலாமா என்று ஒரு பெண்ணிடம் அனுமதி கேட்டு அவனை சுட்டு தள்ளும் காட்சி .. கொஞ்சம் ஓவர் ..

படத்தில் அவர் ஒரு வில்லாதி வில்லனாக எல்லாரையும் அடிச்சு தூள் பண்ணுகிறார்.

பல வித மென்மையான அவரின் சிறு சிறு மானரிசம் எல்லாவற்றையும் எடுத்து கையாண்டு ஒரு ரஜினி கதம்பமாக தொடுத்து இருக்கிறார் , அவற்றிக்காக படத்தை பார்க்கலாம் !!

குறிப்பு : சண்டை காட்சிகள பிடிக்காதவர்கள் இந்த படத்தை தவிர்க்கவும் !!

விஜயராகவன் கிருஷ்ணன்

3

Leave A Reply

Your email address will not be published.