தேசிய இளைஞர் தின விழா (மாவட்ட மைய நூலகம், திருச்சி)

திருச்சிராப்பள்ளி மாவட்ட மைய நூலக இளைஞர் வாசகர் வட்டம், ஸ்ரீரங்கம் விவேகானந்தா யோகா மையம் மற்றும் ஜே.சி.ஐ (JCI)ராக்டவுன் இணைந்து நடத்தும் இளைஞர் தின விழா திருச்சிராப்பள்ளி மாவட்ட மைய நூலகத்தில் 12.01.2019 அன்று மாலை 03.00 மணிக்கு கொண்டாடப்பட உள்ளது. இவ்விழாவில் “நேர்மறை எண்ணங்கள்” என்ற தலைப்பில் ரா.விஜயகுமார் உதவிப் பேராசிரியர் ஸ்ரீமத் ஆண்டவன் கலை மற்றும் அறிவியல் கல்லூரி, திருச்சிராப்பள்ளி அவர்களும், இளைஞர் வாசகர் வட்டம் சார்பில் “கனவு மெய்ப்பட வேண்டும்” என்ற தலைப்பில் பி.சந்திரகேசர், “இளமை – புதுமை -இனிமை” என்ற தலைப்பில் எம்.நாகராசன், “விழித்திரு – ஜெயித்திரு” என்ற தலைப்பில் என்.ஆனந்த குமார், மற்றும் “விதை போல் விழுந்தவன்” என்ற தலைப்பில் சி.மகாதேவி உரையாற்ற உள்ளார்கள். இளைஞர்கள் விழாவில் கலந்து கொள்ள அழைக்கப்படுகிறார்கள்.
