1977-ம் ஆண்டு எம்.ஜி.ஆருக்கு நினைத்த எல்லாமே கூடி வந்தது

0
Business trichy

பாலுக்கும் காவலாக இருக்க வேண்டும். பூனைக்கும் தோழனாக இருக்க வேண்டும் என்று புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். பக்குவமாக காய் நகர்த்தினார்.
மத்தியில் மொரார்ஜி தேசாய் பிரதமராக இருந்தார். ஆனால் அவரது கட்சிக்கு தமிழ்நாட்டில் செல்வாக்கு இல்லை. இந்திராவோ அதிகார வட்டத்திற்கு வெளியே இருந்தார். ஆனால் அவரது கட்சிக்கு தமிழ்நாட்டில் ஓரளவே பலம் இருந்தது. சட்டென்று டெல்லிக்கு ஒரு விசிட் அடித்தார் எம்.ஜி.ஆர். மொரார்ஜி தேசாய் அரசுக்கு அ.இ.அ.தி.மு.க. நிபந்தனை அற்ற ஆதரவு தரும் என்று சொல்லி பூங்கொத்தை கொடுத்துவிட்டு திரும்பினார் எம்.ஜி.ஆர். இதனை கருணாநிதி விரும்பவில்லை. உண்மையில் டெல்லியில் ஏற்பட்ட ஆட்சிமாற்றம் தங்கள் மீதான சர்க்காரியா விசாரணையை முடக்கி வைக்கும் என்றுதான் தி.மு.க.வினர் நம்பினர். ஆனால் மொரார்ஜியோ சட்டம் தன் கடமையை செய்யும் என்று சொல்லிவிட்டார்.

 

இத்தனைக்கும் கருணாநிதிக்கு உதவ வேண்டும் என்று ஜெயபிரகாஷ் நாராயணனே கேட்டுக்கொண்டிருந்தார். ஆனாலும் மொரார்ஜி தேசாய் கண்டுகொள்ளவில்லை. அவருடைய கண்களுக்கு எம்.ஜி.ஆர் வசம் இருந்த 19 எம்.பி.க்களே தெரிந்தனர். கருணாநிதி தரப்பில் இருந்த ஒற்றை சீட்டு அவர்களுக்கு என்ன பலனைக்கொடுத்து விடப்போகிறது என்று அலட்சியம் காட்டிவிட்டார். திடீரென எம்.ஜி.ஆரிடம் இருந்து அறிக்கை ஒன்று வெளியானது. நமது வீடுகள் தோறும், அலுவலகங்கள் எங்கினும் அமரர் அண்ணாவின் உருவம் பொறித்த கொடி பளிச்சிடவேண்டும். நாம் இந்த கொடியின் கீழ்தான் இருப்போம். இது நமது கொள்கை கொடி என்று உறுதி கொண்டு விட்ட எனது ரத்தத்தின் ரத்தமான ஒவ்வொரு உடன்பிறப்பும் தனது உடலில் அண்ணாவின் படம்பொறித்த நமது கொடியை பச்சை குத்திக்கொள்ள வேண்டும்.

 

கட்சிக்கட்டுப்பாட்டையும், பதவி ஆசை கொள்ளாமல் கட்சியின் முடிவுக்கு தலைவணங்கி செயல்படும் தன்மையும் கொண்ட அமரர் அண்ணாவின் தம்பி, தங்கைகள் அ.இ.தி.மு.க. கொடியை பச்சை குத்திக்கொள்வோம். நம்மை யார் கண்டாலும் நாம் யாருடைய தம்பிகள், நாம் எந்த கொள்கைக்கு சொந்தக்காரர்கள், நாம் எப்படிப்பட்ட பாச உணர்வும், உடன்பிறப்பு உணர்வும் உள்ளவர்கள் என்று நாடு உணரட்டும் என்றது எம்.ஜி.ஆர். அறிக்கை.

Kavi furniture

நியாயமாக தொண்டர்களுக்கு எம்.ஜி.ஆர். மீது கோபம் தான் வரவேண்டும். இத்தனை காசு செலவு செய்து கட்சியை வளர்க்கிறோம். கொடியேற்றுகிறோம், கூட்டம் நடத்துகிறோம். ஆனால் எம்.ஜி.ஆர் நம் மீது சந்தேகப்படுகிறாரோ? என்று ஆத்திரப்பட்டிருக்க வேண்டும். ஆனால் தொண்டர்களுக்கு உற்சாகம் பீறிட்டுக்கொண்டிருந்தது. தொண்டர்கள் போட்டிபோட்டுக்கொண்டு பச்சை குத்திக்கொண்டனர். அதுதான் எம்.ஜி.ஆர். அதிலும் அண்ணா பிறந்த நாளான செப்.15 1974 அன்று எம்.ஜி.ஆர் தானே பச்சை குத்திக்கொண்ட பிறகு தொண்டர்களின் உற்சாகம் மேலும் அதிகரித்தது.

தொண்டர்கள் ஆர்வத்துடன் பச்சை குத்திக்கொண்டபோது தலைவர்கள் மத்தியில் சலசலப்பு ஆர்.எம்.வீரப்பனுக்கு பிடிக்கவில்லை. நேரடியாகவே சொல்லிவிட்டார். டாக்டர் ஹண்டே, கோவை செழியன் போன்றவர்களுக்கும் பிடிக்கவில்லை. எதிர்த்தனர். எதிர்ப்பும் தெரிவித்தனர். பச்சை குத்திக்கொள்வது தொடர்பாக எம்.ஜி.ஆரே பிறகு விளக்கம் கொடுத்தார்.

MDMK

பச்சை குத்திக்கொள்வது என்னுடைய ஆசை. விருப்பம் உள்ளவர்கள் பச்சை குத்திக்கொள்ளலாம். பச்சை குத்திக்கொள்ளா தவர்கள் கழக கொள்கையில் இருந்த விலகிவிட்டவர்கள் என்றோ, பச்சை குத்திக்கொள்ளாதவர்கள் அண்ணாவின் கொள்கையை விரும்பாதவர்கள் என்றோ, பச்சை குத்திகொள்ளாதவர்கள் அதிமுகவின் எந்த பதவியில் இருக்கத் தகுதி இல்லாதவர்கள் என்றோ நினைக்கவோ, கூறவோ இடமில்லை.

எல்லாமே கூடி வந்தது எம்.ஜி.ஆருக்கு. ஜுன் 1977ல் சட்டமன்ற தேர்தல் அறிவிக்கப்பட்டது. கடந்த காலங்களில் திமுக எந்தமாதிரி முடிவு எடுக்கிறது என்றே எம்.ஜி.ஆர். தனது பாதையை தேர்வு செய்வார். எமர்ஜென்ஸிக்கு கருணாநிதி எதிர்ப்பு என்றால், எம்.ஜி.ஆர் ஆதரவு. மாநிலங்களில் சுயாட்சி வேண்டும் என்று கருணாநிதி சொன்னால் எம்.ஜி.ஆரோ ஒரே இந்தியா என்று. தற்போது நிலமை மாறி இருந்தது. தி.மு.க.தவிர இந்திரா காங்., ஜனதா, இ.கம்யூ, மா.கம்யூ போன்ற கட்சிகள் எப்படி அசைகின்றன என்பதை வைத்தே அடுத்த கட்டத்தை தீர்மானிக்க எம்.ஜி.ஆர் முடிவு செய்தார். தி.மு.க.வை உதாசீனம் செய்தது ஜனதா கட்சி. திமுகவிற்கோ இந்திராகாங்கிரசில் சேர வாய்ப்பில்லை.

 

ஒரே வாய்ப்பு மா.கம்யூ. ஆனால் மா.கம்யூவோ முதலில் ஜனதாகட்சியுடன் பேச்சுவார்த்தை நடத்தியது. ஆனால் திமுகவையே அலட்சியம் செய்துவிட்ட ஜனதாகட்சி மா.கம்யூ மட்டும் உயர்த்தி விடுமா? சொற்ப தொகுதிகளை மட்டுமே தருவதாக சொல்லியது. அதை ஏற்காத மா.கம்யூ தனித்தே நின்றது. அதே சமயம் கூட்டணிக்கான கதவுகளை திறந்தே வைத்திருந்தது. இதுதான் சமயம் என்று கழத்தில் இறங்கினார் எம்.ஜி.ஆர். காங். கட்சியுடன் கூட்டணி அமைத்தால் மொரார்ஜி கோபித்துக்கொள்வார். அதற்காக மொரார்ஜியின் ஜனதாவுடன் கூட்டணி வைக்க முடியாது.

 

நிதானமாக யோசித்தார். மின்னல் வேகத்தில் செயல்பட்டார். அ.தி.மு.க. மா.கம்யூ கூட்டணி பிறந்தது. ஏற்கனவே எம்.ஜி.ஆருடன் ஏற்பட்ட மனத்தாங்கல் காரணமாக இ.கம்யூ அதிமுக அணியில் இருந்து விலகி இருந்தது. கூட்டல், கழித்தல் கணக்குகள் எல்லாம் முடிந்தன. பழைய எமர்ஜன்சி பாசத்தில் இந்திராகாங். இ.கம்யூ கட்சியும் கூட்டணி அமைத்தன. தி.மு.க.வும்,ஜனதாவும் தனித்தனியே கூட்டணி அமைத்தன. தேர்தல்; முடிவு ஜுன் 15,1977 வெளியானது. தேர்தல் முடிவுகள் எம்.ஜி.ஆரை கோபுரத்தில் அமர்த்தியது. அதிமுக மா.கம்யூ கூட்டணி அமோக வெற்றி பெற்றது. 1977-ஜுன் 30ல் தமிழகத்தின் முதல்வராக ஏழைகளின் தலைவர் எம்.ஜி.ஆர்.பதவியேற்றார்.

 

ஆர்.பூபேஷ்

Pranav city

Leave A Reply

Your email address will not be published.