‘பேட்ட’யால் விஸ்வாசத்திற்கு நெருக்கடி!

0
1

பொங்கல் போட்டியில் களமிறங்க உள்ள விஸ்வாசம் படத்தின் வியாபாரம் தமிழகத்தில் ஒரு மாதத்திற்கு முன்பாகவே முடிந்து விட்டது. திருச்சி விநியோகப் பகுதி வியாபாரம் முடியாமல் இருந்தது.

ஏற்கனவே சத்யஜோதி தயாரிப்பில் வெளியான விவேகம் படத்தின் திருச்சி ஏரியா உரிமையை மன்னார்குடி அரசியல் பிரமுகர் வாங்கியிருந்தார். படம் 3 கோடி வரை நஷ்டத்தை ஏற்படுத்தியது. அரசியல் குடும்பம் பல முறை தயாரிப்பாளர் தரப்பைத் தொடர்பு கொண்டும் தீர்வு எட்டப்படாததால் விஸ்வாசம் படத்தின் திருச்சி ஏரியா உரிமையைத் தொழில் ரீதியான விநியோகஸ்தர்கள் வாங்க விருப்பம் காட்டவில்லை.

விவேகம் படத்தின் செங்கல்பட்டு, சென்னை நகரம், திருநெல்வேலி ஏரியா உரிமைகளை வாங்கி நஷ்டமடைந்தவர்களுக்கு மீண்டும் விஸ்வாசம் படத்தின் உரிமை விலை குறைக்கப்பட்டு கொடுக்கப்பட்டுள்ளது. அதே போன்று திருச்சி ஏரியாவுக்கும் விவேகம் விநியோகஸ்தருடன் சுமூகமான உடன்பாடு தற்போது ஏற்பட்டுள்ளது.

2

பேட்ட படத்தின் திருச்சி ஏரியா உரிமை அப்பகுதியில் அதிகமான திரையரங்குகளைத் தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் பிரான்சிஸ்க்கு வழங்கப்பட்டது. அவர் அங்குள்ள முதன்மையான திரையரங்குகள், தனித் திரையரங்குகள் என 56 திரைகள் வரை பேட்ட படத்திற்காக ஒப்பந்தம் செய்துள்ளார். விஸ்வாசம் படத்தின் விநியோக உரிமை யாருக்கு என்பதைத் தாமதமாக தயாரிப்பாளர் உறுதிப்படுத்தியதால், முதன்மையான, மற்றும் தனித் திரையரங்குகள் விஸ்வாசம் படத்திற்கு கிடைக்காமல் தடுமாறி வருகிறார் விநியோகஸ்தர்.

மொத்தமுள்ள திரைகளில் 60% பேட்ட படம் ஆக்கிரமித்து கொண்டதால் எஞ்சியுள்ள 40% திரைகளில் விஸ்வாசம் படத்தை திரையிட வேண்டிய நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
பிற ஏரியாக்களில் தியேட்டர் ஒப்பந்தம் செய்வதில் முன்னேற்றப் பாதையில் சென்ற விஸ்வாசம் படத்திற்கு திருச்சி ஏரியாவில் தடுமாற்றத்தை பேட்ட படம் ஏற்படுத்தியிருக்கிறது.

3

Leave A Reply

Your email address will not be published.