புத்தாண்டு கொண்டாட்டம் கொலையில் முடிந்தது

0
1 full

கடந்த 8 நாட்களாக சேலம் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்றுவந்த பிரவின் (எ) பிரவின்குமார் சிகிச்சை பலனின்றி சாவு.

நாமக்கல் மாவட்டம் எருமப்பட்டி அருகே உள்ள தேவராயபுரம் கிரமத்தில் மெயின் ரோர் அருகே புத்தாண்டை கொண்ட 31.12.2018 இரவு சுமார் 11.30 மணி அளவில் கௌதமன், பழனியான்டி நந்தக்குமார், இலங்கேஸ்வரன், பாலு கோபிநாத் ஆகிய நண்பர்களுடன் சேர்ந்து பிரவின் (எ) பிரவின் குமார் புத்தாண்டு விழாவை கொண்டாட தயாராகிகொண்டிருந்தார்.

அப்போது அங்கு வந்த மேற்கண்ட ஊரை சார்ந்த லோகேஸ் மற்றும் செல்வகுமார் ஆகியோர் தங்களுக்குள் ஏற்பட்ட முன் விரோதத்தினை பற்றி தட்டி கேட்டு தாக்குதல் நடத்தியுள்ளார். ரீப்பர் கட்டையால் பலமாக தாக்கியதில் பிரவின் (எ) பிரவின் குமாருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டு கோமா நிலைக்கு சென்றார். சண்டையை விலக்க சென்ற பிரவினின் நண்பன் அருண்குமாருக்கு லேசான காயம் ஏற்பட்டு குணமடைந்துவிட்டார்.

2 full

பிரவின் (எ) பிரவின்குமார் முதலில் நாமக்கல் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு பின்பு மேல்சிகிச்சைகாக சேலம் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்தார். கடந்த 8 நாட்களாக கோமா நிலையில் உயிருக்கு போராடி வந்த நிலையில் பிரவின்குமார் சிகிச்சை பலனின்றி இன்று (09.01.2019) காலை 8 மணி அளவில் உயிரிழந்தார்.

இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரித்து வரும் எருமப்பட்டி போலீஸ் ஆய்வாளர் கைலாசம் மற்றும் உதவி ஆய்வாளர் ஆகியோர் தாக்குதலில் ஈடுபட்ட லோகோஸ் மற்றும் செல்வக்குமார் ஆகியோர் மீது கொலை முயற்சி வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்திருந்தனர். தற்போது கொலை வழக்காக பதிவு செய்து தீவிர விசாரனை செய்து வருகின்றனர்.

மேற்கண்ட தாக்குதலில் கொலையுண்ட பிரவின் (எ) பிரவின் குமார் ஏழை குடும்பத்தை சார்ந்த தச்சு தொழிலாளின் மகன் ஆவார். மிக வருமையான குடும்பச் சுழல் உடையவர் அவரின் தந்தை மணி ஆசாரி தச்சு தொழில் செய்து வருகிறார். ஆனால் பிரவீன் உடலை தகனம் செய்வதற்கு விறகு வாங்க கூட காசுல்லாமல் சுடுகாட்டில் தடுமாறி கொண்டிருந்த போது பார்ப்பவர்களின் நெஞ்சை பதபதக்க செய்தது சிறுவர்களின் விளையாட்டு விணையாய் முடிந்தது.

செய்தியாளர் – நீலமேகம், நாமக்கல் மாவட்டம்

3 half

Leave A Reply

Your email address will not be published.