எண் 4 பறித்த பிரதமர் பதவி

0
Business trichy

எண் 4

நான்கும் தெரிந்தவர்கள் என்று பாராட்டு பெரும் இவர்கள் சிறந்த அறிவாளிகள். பாற்கடல் கடையும்பொழுது அமிர்தம் கிடைத்தது. அதை திருமால் மோகினி அவதாரம் எடுத்து தேவர்களுக்கு மட்டும் அமிர்த்தத்தை கொடுத்து அசுரர்களுக்கு தன் அழகைக்காட்டி மயக்கி அமிர்தத்தை கொடுக்கவில்லை. இதைப்பார்த்த “ஸ்வர்பானு” என்ற அசுரன் சூரியன் சந்திரன் என்ற தேவர்களுக்கு இடையில் உட்கார்ந்து கொண்டு திருமாலிடம் இருந்து அமிர்தத்தை பருகினான். இதை சூரியனும், சந்திரனும் கண்ணால் மோகினி உருவில் இருந்த திருமாலிடம் உணர்த்தினர். இதை உணர்ந்த திருமால் கையில் இருந்த அகப்பையால் அசுரனை அடித்தார்.

 

தலைவேறாக முண்டம் வேராக விழுந்தது. ஆனாலும் அமிர்தம் உண்டதால் தலையும் உடம்பும் உயிருடன் இருந்தது. பின் திருமாலிடம் வேண்டுதலின் பெயரில் ராகு பாம்பு தலையும் மனித உடலாகவும், கேது மனித தலையும் பாம்பு உடலும் பெற்று எதிர்திசையில், நேர் எதிரில் கோள்களில் சுற்றின. இவர்கள் சூரிய சந்திர கிரகணத்தை ஏற்படுத்தினர். ராகு சூரியனின் அம்சமான ராசியாகும். கேது சந்திரனின் அம்சமான ராசியாகும்.

Kavi furniture

எண் 4 ராகுவை குறிக்கும். எல்லாம் துறையைப் பற்றி தெரிந்தவர் ஏதோ சொல்லிவிடுவார் என்று நாம் கூறுவது எண் 4 காரர்களைத்தான். மற்ற எண்களை விட மனோவலிமை மிக்கவர்கள். ஆனால், உடல் வலிமை உள்ளவர்கள் அல்லர். இவர்கள் நாடாளுமன்ற வாதிகளாகவர். வலிமை மிக்க பேச்சாளர்களாகவும், சூதாட்டப் பிரியர்களாகவும், கமிஷன் ஏஜெண்டுகளாகவும், சமயப்பற்றாளராக, சமய சொற்பொழிவாளராக இருப்பவர், பத்திரிக்கை நிருபராக, பத்திரிக்கை நடத்துபவர்களாக, தகவல் தொடர்பு சம்பந்த துறையிலும் சிறந்து விளங்குவர். பழைய மரச்சாமான், ஆடு, மாடுகள் வளர்ப்பவர்களாகவும் இருப்பார்கள்.
சோதிடத்தில் ஆர்வம் உள்ளவர்கள். வாக்கு உண்மை உள்ளவர்கள்.

 

அனைத்து துறையிலும் பணிபுரிபவர்கள். ஒரு செயலில் இறங்கும்பொழுது வெற்றி பெறுவோமா என்பதை அறிந்து களத்தில் இறங்கி வெற்றி பெறுபவர்கள்.
இவர்கள் யார் இருக்கிறார் என்று யோசிக்காமல் தங்களது கருத்துக்களை தைரியமாக கூறுபவர்கள். இவர்கள் தங்களின் தவறை உணர்ந்து திருந்துபவர்கள். மேன்மை உடைவர்கள். தங்களின் பேச்சால் எதிரிகளை அதிகம் சம்பாதிப்பவர்கள்.
கஷ்டப்பட்டு உழைத்து எளிதில் செலவு செய்யும் இவர்கள் பல நண்பர்கள் இருந்தும், ஒரு சிலரை மட்டுமே நண்பர்களாக வைத்திருப்பர்கள். பத்திரிக்கையில் இவ்வெண்காரர்கள் நிருபராக இருந்தால் எல்லாப் பெரிய மனிதரின் ரகசியத்தையும் பத்திரிகையில் வெளியிட்டு அவர்களை கோபுரத்தில் இருந்து கீழே சரியச் செய்வார்கள். ஒருவரை தொடர்ந்து தொல்லை கொடுக்கமாட்டார்.

 

MDMK

தொடர்ந்து தொல்லை கொடுத்தால் எண் 4 காரர்களுக்கு ஆபத்து. பாம்பு புற்றில் இருக்க வேண்டும். அல்லது புதரில் இருக்க வேண்டும் என்பது இவர்களுக்கு பொருந்தும். எண் 4 உடையவர்கள் வலிமையானர்கள் துணை நின்று செயல்பட வேண்டும். இல்லையென்றால் இவர்கள் பதவி பறிக்கப்படும், சொத்து பறிக்கப்படும் அல்லது உயிர் பறிக்கப்படும் அல்லது முடக்கப்படுவர்.

இவர்கள் அதிக நிலப்பரப்பை பிடிப்பவர். உதாரணம் அலெக்சாண்டர் பெயர் எண் 4 இவர் தன்னுடைய வெற்றியால் பெரும் நிலப்பரப்பை பிடித்தவர்கள். ரியல் எஸ்டேட் துறையில் நிறைய நிலப்பரப்பை பிடித்து கமிஷனுக்கு விற்பார்கள். அதனால் இவர்கள் கையில் இடம் இருந்தால் விற்பனையாக வேண்டும் அல்லது அன்பளிப்பாக கொடுக்க வேண்டும் இல்லாவிட்டால் யாராவது மிரட்டி இடத்தை வாங்குவார்கள்.

அதனால் 4 எண்காரர்கள் இடம் சொந்தத்திற்கு வைத்திருந்தால் தன் தந்தை தாய் அல்லது மனைவி மக்களுடன் இணைந்து சொத்து வாங்கினால் அந்த இடம் இவர் குடும்பத்துக்கு இருக்கும்.(எண் 4 தன் அயல் எண் 7க்கு உதவி செய்யும். இல்லை என்றால் எண் 7, நான்கிடம் இருந்து பொருள்களை அபகரிக்கும். எண் 4 அலைந்து திரிந்து சம்பாதிக்கும் எண் 7 உட்கார்ந்த இடத்தில் இருந்து சம்பாதிக்கும். சம்பாத்தியத்திற்கு எண் 4 மறைமுக உதவி செய்யும்)
இவர்கள் வளர்ந்த கட்சியில் இருப்பது போல் இல்லாமல் வளராத கட்சிக்கு தலைமை எடுத்து அந்த கட்சியை போராடி வளர்த்தெடுப்பர். பெரும் போராட்டக்காரர். உதாரணம் ரஷ்யாவை ஆண்ட லெனின் (DOB 22-4-1870) பிறந்த தேதி 22=2+2=4 இவர் ரஷ்யாவில் போராடி ரஷ்யாவை கைப்பற்றினார். சர்தார் வல்லபாய் படேல் = DOB 31-10-1875 சர்தார் வல்லபாய் படேலின் பிறந்ததேதி 31இன் கூட்டு எண் 3+1=4. அதனால், சுதந்திர இந்தியாவின் சமஸ்தானத்தை இந்தியாவுடன் இணைத்தார்.

 

காங்கிரஸ் தலைமை பொறுப்பில் இருந்த சர்தார் வல்லபாய் படேலை பிரதமர் பதவி கிடைக்கவில்லை. 2-10-1869 (2+1+0+1+8+6+9=27=9) பிறந்த தேதி + மாதம் + வருடம் மூன்றையும் கூட்டினால் எண் 9 வரும் காந்தி சர்தாரிடம் அழுத்தம் கொடுத்து நேருவை முதல் பிரதமர் பதவியில் அமர்த்தினார்.
தமிழ் (TAMIL(4+1+4+1+3=13=1+3=4)) எண் 4 இது ராகுவைக்குறிக்கும். இது வேகமாக வளரும் ஆனால் ராகுவின் மறு உறுப்பான கேது 7 எண் நான்கை ஆட்கொள்ளும். அதனால் தான் தமிழ் மொழியினை ஆங்கிலம் மற்றும் இந்தி உள்ளிட்ட மொழிகள் அடக்க நினைக்கின்றன. (ENGLISH = 5+5+3+3+1+3+5=25=7) (HINDI = 5+1+5+4+1=16=7). எண் 4க்காரர்கள் தனித்து இருந்து ஜொலிக்க முடியாது. வலுவான நபர் துணையுடன் மட்டுமே ஜெயிக்க முடியும். இல்லையென்றால் இவர்களின் உழைப்பை அடுத்தவர் பறித்து விடுவார்.

நான்காம் எண்ணிற்கான உதாரங்களை அடுத்த இதழில் பார்ப்போம்…

 

-சுரேஷ் ஆழ்வார்

Pranav city

Leave A Reply

Your email address will not be published.