ஆர்ப்பாட்டம்

0
D1

நாமக்கல்லில் நேற்று பூங்கா சாலையில் தமிழ்நாடு மோட்டார் வாகன தொழில், தொழிலாளர் பாதுகாப்பு ஒருங்கிணைப்புக்குழு சார்பாக இன்றும், நாளையும் நடைபெறும் அ;கில இந்திய பொது வேலை நிறுத்தத்தை வெற்றி பெறச் செய்யக் கோரியும், மத்திய அரசு 2014ம் ஆண்டு மோட்டார் வாகன சட்டம் 1988க்கு பதில் சாலைப் போக்குவரத்து மற்றும் பாதுகாப்பு மசோதா என்ற புதிய சட்டத்தை கொண்டு வர முயற்சித்தது. நாடு தழுவிய எதிர்ப்பின் காரணமாக அதை கைவிட்டு மோட்டார் வாகன சட்டத்தில் 68 திருத்தமும், 28 புதிய பிரிவுகளை சேர்த்து புதிய சட்டம் கொண்டு வர முயற்சிப்பதாகவும் தெரியவருகின்றது.

N2

அப்படி இச்சட்டத்தை கொண்டு வந்தால் வண்டியின் எப்.சி., லைசென்ஸ் அனைத்தும் தனியாரிடம் ஒப்படைக்கப்படும். லட்சக்கணக்கான ஓட்டுநர் பயிற்சிப்பள்ளிகள் மூடும் ஆபத்து உருவாகும். சுயதொழில் செய்பவர்கள் மட்டுமின்றி சொந்தமாக வாகனம் வைத்திருப்போரும் பாதிக்கப்படுவர். ஆகவே இச்சட்டத்தை மத்திய அரசு உடனே கைவிட வேண்டும் என கோரியும். ஆர்ப்பாட்டம் நடந்து வருகின்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் மோட்டார் வாகன சட்டத்தை வாபஸ் பெற வேண்டும், பெட்ரோல் டீசல் விலை உயர்வை கட்டுப்படுத்த வேண்டும், டோல்கேட் வசூலை இந்திய முழுவதும் கைவிட வேண்டும். இன்சூரன்ஸ் முறைப்படுத்த வேண்டும், லாரி பாடி பில்டர் தொழிலை பாதுகாத்திடவும், டிரெய்லர் தயாரிப்பு அங்கீகார கட்டணத்தை குறைக்க வேண்டும் போன்ற முக்கிய கோரிக்கைகளை முன் வைத்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இப்போராட்டத்தில் லாரி, எல்.பி.ஜி., டிரெய்லர், மணல் உரிமையாளர் சங்கம், ஓட்டுநர் பயிற்சி பள்ளி அசோசியேஷன், மோட்டார் சைக்கிள் அசோசியேஷன், ஸ்பேர் பார்ட்ஸ் அசோசியேஷன், பாடி பில்டர் அசோசியேஷன், டிரெய்லர் ஓனர் அசோசியேஷன், ஆல் மோட்டார், மெக்கானிக் ஒர்க்ஸ் ஷாப், டூரிஸ்ட் வேன் ஓட்டுநர் சாலை பொக்குவரத்து தொழிலாளர் சங்கம் சார்ந்த ஏராளமானவர்கள் திரண்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

N3

Leave A Reply

Your email address will not be published.