அரசு பள்ளி மாணவ மாணவிகளுக்கு இலவச கண் கண்ணாடி

0
1 full

09 ஜனவரி 2019 இன்று காலை திருச்சி மாவட்ட நிர்வாகம் மற்றும் மகாத்மா கண் மருத்துவமனை இணைந்து “கண்மணியின் கண் பாதுகாப்பு” திட்டத்தின் கீழ் அரசு பள்ளி மாணவ மாணவிகளுக்கு இலவச கண் கண்ணாடி வழங்கும் நிகழ்வு திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற்ற நிகழ்வில் மாவட்ட ஆட்சியர் கு.ராசா மணி அவர்கள் 250க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகளுக்கு இலவச கண் கண்ணாடிகளை வழங்கினார் . விழாவில் மகாத்மா கண் மருத்துவமனை தலைமை கண் மருத்துவர்கள் ரா. ரமேஷ், ரா. மீனா குமாரி, மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் இணை இயக்குநர் மருத்துவர் செ. சம்சாத் பேகம், சிட்டி அலுமினியம் கம்பெனி நிர்வாக இயக்குநர் ஷேக் தாவுத், திருச்சி பயனீட்டாளர் இயக்கத்தின் தலைவர் சகுந்தலா சீனிவாசன் மற்றும் பலர் உடனிருந்தனர்.

3 half

Leave A Reply

Your email address will not be published.