சாலை விபத்து (லாரி கவிழ்ந்தது)

0
Business trichy

நாமக்கல் மாவட்டம் எருமப்பட்டி பைபாஸ் ரோட்டில் தனியார் நூற்பு ஆலை அருகே இன்று (8.1.2019) காலை சுமார் 9 மணி அளவில் ஈரோட்டை சார்ந்த NST என்ற லாரி வண்டி எண் TM33, BA2799 கரும்பு லோடு ஏற்ற சென்ற போது எதிர்பாராத விதமாக ரோட்டின் திருப்பத்தில் அதிவேகமாக சென்று டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து லாரி கவிழ்ந்தது.

web designer

மேற்கண்ட லாரியை உடுமலைப்பேட்டையை சார்ந்த யோகராஜ் என்பவர் ஓட்டி வந்ததாகவும் படுகாயமடைந்த அவர் எருமப்பட்டி அரசு மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற்ற அவர் மருத்துவமனையை விட்டு தப்பியோடி விட்டதாக மருத்துவமனை ஊழியர்கள் தெரிவிக்கின்றனர்.

இந்த விபத்தின் காரணமாக அதிர்ஷ்டவசமாக ரோட்டில் சென்ற பயணிகள் எவருக்கும் காயம் ஏற்படவில்லை. விபத்து குறித்து தகவல் அறிந்த எருமப்பட்டி போலீசார் விரைந்து சென்று போக்குவரத்தை சீர் செய்து விசாரித்து வருகின்றனர்.

IAS academy

Leave A Reply

Your email address will not be published.