அடிகளாசிரியர்

0
1 full

தமிழ்நாட்டின் விழுப்புரம் மாவட்டத்தில் கள்ளக்குறிச்சியை அடுத்து கூகையூர் என்ற சிற்றூரைச் சேர்ந்தவர். இவரது பெற்றோர் பெரியசாமி ஐயர், குங்கும அம்மாள். வீரசைவ மரபினர். அடிகளாசிரியரின் இளமைப் பெயர் குருசாமி என்பதாகும். தமிழ்க்கல்வியை உ. வே. சாமிநாதையரிடம் கற்ற இவர், 1937 இல் சென்னைப் பல்கலைக்கழகத்தில் தமிழ்ப்புலவர் பட்டம் பெற்றார். 1938ஆம் ஆண்டு மயிலம் தமிழ்க் கல்லூரியில் பேராசிரியராகப் பணியாற்றினார். பின்னர் சென்னைப் பல்கலைக்கழகத்திலும் தஞ்சைப் பல்கலைக்கழகத்திலும் பேராசிரியராகப் பணியாற்றினார். தமிழறிஞர்கள் மறைமலை அடிகள், திரு.வி.க.வோடு நெருங்கிய தொடர்பு கொண்டவர். மறைமலையடிகளார் தொடர்பிற்குப் பிறகு தம் பெயரைத் தனித்தமிழாக்கி அடிகளாசிரியர் என அமைத்துக்கொண்டார். இவர் எழுதிய 100 பாடல்களைக் கொண்ட சிறுவர் இலக்கியத்தை முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் பாராட்டியுள்ளார். உலகத் தமிழாராய்ச்சி நிறுவனமும் இவரது பங்காற்றலுக்காக தொல்காப்பியச் செம்மல், செந்நாப்புலவர், தமிழ் பேரவை செம்மல் என்று பாராட்டியுள்ளது. குடியரசுத் தலைவரால் வழங்கப்படும் தொல்காப்பியர் விருதை 2011 மே 6 ஆம் நாள் மத்திய அரசு இவருக்கு செம்மொழித் தமிழ் உயராய்வு மையம் மூலம் அறிவித்தது.

3 half

Leave A Reply

Your email address will not be published.