பல்வேறு கல்லூரிகளில் நடைபெற்ற கருத்தரங்கில் வெற்றி பெற்ற எம்.ஐ.இ.டி

0
gif 1

பல்வேறு கல்லூரிகளில் நடைபெற்ற கருத்தரங்கில் வெற்றி பெற்ற எம்.ஐ.இ.டி பலதொழில்நுட்பக் கல்லூரி மாணவர்கள் கடந்த 4ம் தேதி பெருந்துறை கொங்கு பலதொழில்நுட்பக் கல்லூரியில் நடைபெற்ற கருத்தரங்கில் மின் அனுவியல் மற்றும் தொலைதொடர்பு துறையைச் சார்ந்த மாணவர்கள் N.சீனிவாசன் மற்றும் k.ஷேக் அதனன் ஆகியோர் “பயோனிக் ஐ” என்ற தலைப்பில் கருத்தரங்கில் கலந்து கொண்டு முதல் பரிசை வென்றனர்.

gif 4

தானியியங்கி துறையைச் சார்ந்த மாணவர்கள் ஆல்பஹத் மற்றும் ஹாரிகரன் ஆகியோர்  “கீரின் வெகிக்கல்” என்ற தலைப்பில் கலந்து கொண்டு மூன்றாம் பரிசை பெற்றனர்.  மேலும், இக்கல்லூரியில் நடைபெற்ற வினாடி வினா நிகழ்ச்சியில் மின்னனுவியல் மற்றும் தொலைதொடர்பு துறையைச் சார்ந்த மாணவர் k.ஷேக் அதனன் மற்றும் தானியியங்கி துறையைச் சார்ந்த மாணவர் ஹாரிகரன் ஆகியோர்  இரண்டாம் பரிசைப் பெற்றனர்.

gif 3

அதே நாளில் சேலம் தியாகராஐ பலதொழில்நுட்பக் கல்லூரியில் நடைபெற்ற கருத்தரங்கில் கட்டடவியல் துறையைச் சார்ந்த மாணவர்கள் ஆசிக் அக்தர் மற்றும் மகேஷ்வரன் “நானோ கான்கிரட்”; என்ற தலைப்பில் கலந்துகொண்டு இரண்டாம் பரிசினை பெற்றனர்.

இதனைத்தொடர்ந்து கடந்த 5ம் தேதி தொட்டியம் கொங்குநாடு பலதொழில்நுட்பக் கல்லூரியில்  நடைபெற்ற கருத்தரங்கில் மின்அனுவியல் மற்றும் தொலைதொடர்பு துறையைச் சார்ந்த மாணவர்கள் சந்தோஸ் பாலாஜி மற்றும் வெங்கட்ராஜ்  ஆகியோர் “விசன் சென்சிங்” என்ற தலைப்பில் கலந்துகொண்டு இரண்டாம் பரிசை பெற்றனர். கணினிதுறையைச் சார்ந்த மாணவன் கீர்த்திவாசன் “வீ.வீ டெக்னாலஜி” என்ற தலைப்பில் கலந்து கொண்டு மூன்றாம் பரிசை பெற்றார்.  எம்.ஐ.இ.டி. கல்வி நிறுவனங்களின் தாளாளர் அல்ஹாஜ். முகம்மது யூனுஸ், எம்.ஐ.இ.டி. பலதொழில்நுட்பக் கல்லூரி முதல்வர் எம்.ராஜகோபாலன் துறை தலைவர்கள் மற்றும் பேராசிரியார்கள் வெற்றி பெற்ற மாணவர்களை பாராட்டினார்கள்.

gif 2

Leave A Reply

Your email address will not be published.