தட்சண ரயில்வே எம்ப்ளாயீஸ் யூனியன் ஆர்ப்பாட்டம்

0
Business trichy

அகில இந்திய தொழிலாளர்களின் பொது வேலை நிறுத்தப்போராட்டத்தை ஆதரித்து, திருச்சி கோட்ட தட்சண ரயில்வே எம்ப்ளாயீஸ் யூனியன்(DREU) சார்பில் ரயில்வே கோட்ட மேலாளர் அலுவகம் எதிரே இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்தில், திருச்சி கோட்ட DREU தலைவர் மொய்தீன் தலைமை வகித்தார். DREU கௌரவத்தலைவர் கே.வெங்கடேசன், CITU மாவட்ட செயலாளர் ரெங்கராஜன், DREUவை சார்ந்த பி.க மாதவன் உள்ளிட்டோர் சிறப்புரையும், DREU உதவி கோட்ட செயலாளர் சி.சாமிநாதயாதவ் வரவேற்புரையும், DREU கோட்ட செயலாளர் ஜி.கண்ணன் நன்றியுரையும் ஆற்றினார்கள். மேலும், DREUவின் நிர்வாகிகளான சரவணன், கரிகாலன், கவியரன் உட்பட பலரும் இந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர்.

MDMK

இதில், புதிய பென்சன் திட்டத்தை ரத்து செய்து பழைய பென்சன் திட்டத்தை அமல்படுத்துதல், ரயில்வே உள்ளிட்ட அரசுத்துறை மற்றும் பொதுத்துறையில் தனியார் மயத்தைக் கைவிடுதல், அனைத்துக் காலியிடங்களையும் நிரப்புதல், தொழிலாளர் நலச் சட்டங்களை முதலாளிகளுக்குச் சாதகமாகத் திருத்தக்கூடாது, குறைந்தபட்ச அடிப்படை சம்பளம் ரூ.26ஆயிரம் வழங்குதல், ஆக்ட் அப்ரண்டீசுக்கும் படித்த இளைஞர்களுக்கும் வேலைகொடுத்தல், தற்காலிக ஊழியர்களை நிரந்தரமாக்குதல், குறைக்கப்பட்ட HRA உள்ளிட்ட அலவன்சுகளை மீண்டும் வழங்குதல், விவசாயம் மற்றும் கல்விக்கடன்களை ரத்துசெய்தல், விலைவாசி உயர்வைக்கட்டுப்படுத்தல், விவசாயிகள் விளைபொருளுக்கு கட்டுபடியான விலை நிர்ணயம் செய்தல் மற்றும் ஜிஎஸ்டியை ரத்து செய்தல் உள்ளிட்டவை முக்கியக்கோரிக்கைகளாக இடம் பெற்றிருந்தன.

Kavi furniture

Pranav city

Leave A Reply

Your email address will not be published.