சுயதொழில் செய்ய முன்வருபவர்களுக்கு கடனுதவி முகாம்

0
Business trichy

திருச்சிராப்பள்ளி மாவட்டத் தொழில் மையம் கீழ் கண்ட வட்டாரங்களில் கீழ் கண்ட நாட்களில் அந்தந்த வட்டாரங்களை உள்ளடக்கிய பகுதிகளில் ஊக்குவிப்பு முகாமும் அதனை தொடர்ந்து உடனடி தேர்வுகளும் நடத்தப்படவுள்ளன. ((Walk in interview). எனவே கீழ்க் கண்ட தகுதிகளை உடைய படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் சுயமாக தொழில் தொடங்க ஆர்வமுள்ள நபர்கள் இந்த உடனடி தேர்வில் (Walk in interview).  கீழ்க் கண்ட ஆவணங்களுடன் நேரில் கலந்து கொண்டு பயனடைய கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

பள்ளி/கல்லூரி மாற்றுச் சான்றிதழ். 2. குடும்ப அட்டை ஃ ஸ்மார்ட் கார்டு. 3.ஆதார் அட்டை 4. பட்ட படிப்பு (அல்லது)பட்டய படிப்பு(அல்லது) அரசு ஐடிஐ யில் தேர்ச்சி பெற்றதற்கான சான்றிதழ். 5. சாதிச் சான்றிதழ். 6. இயந்திரங்கள் அல்லது மூலப் பொருட்கள் வாங்குவதாயின் அதற்கான விலைப்பட்டியல். (விலைப்பட்டியலில் தங்களது பெயர் மற்றும் விலாசம் இருக்க வேண்டும்). 6. கட்டிடங்கள் கட்டுவதாக இருந்தால் அதற்கான பில்டிங் எஸ்டிமேட், பிளான் அப்ரூவல் அல்லது வாடகை கட்டிடமாக இருந்தால் வாடகை ஒப்பந்த பத்திரம். 7.பாஸ்போர்ட் சைஸ் போட்டோ – 2.

மாவட்டத் தொழில் மையத்தின் மூலம் செயல்படுத்தப்படும் கீழ் கண்ட மூன்று திட்டங்களில் எந்த திட்டத்தில் விண்ணப்பம் செய்ய விரும்புகிறீர்களோ அந்த திட்டத்திற்கான தகுதி இருக்கும்பட்சத்தில் விண்ணப்பிக்கலாம். அதற்கான ஆலோசனையும் அளிக்கப்படும்.

Kavi furniture

1.வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டம்

(UYEGP) கல்வித் தகுதி –  8ம் வகுப்பு தேர்ச்சி, வயது – 18 க்கு மேல் 45 வயதிற்குள் இருக்க வேண்டும்) பொது பிரிவினருக்கு – 35 வயது வரை. கடன் தொகை – அதிகபட்சமாக வியாபாரத்திற்கு – ரூ.1 லட்சம், சேவை சார்ந்த தொழிலுக்கு – ரூ.3 லட்சம், உற்பத்தி சார்ந்த தொழிலுக்கு – ரூ.10 லட்சம். மானியம் : 25 சதவிகிதம். அதிகபட்சமாக ரூ.1.25 லட்சம்.

MDMK

2.புதிய தொழில் முனைவோர் தொழில் நிறுவன மேம்பாட்டுத் திட்டம் (NEEDS): கல்வித் தகுதி – பட்டப் படிப்பு (அல்லது) பட்டய படிப்ப (அல்லது) ஐடிஐ – தேர்ச்சி, வயது – 21 க்கு மேல் 45 வயதிற்குள் இருக்க வேண்டும்) பொது பிரிவினருக்கு – 35 வயது வரை கடன் தொகை – அதிகபட்சமாக ரூ.5 கோடி வரை. குறைந்தபட்சம் இயந்திரத்திற்கான  திட்ட முதலீடு ரூ.10 லட்சத்திற்கு மேல் இருக்க வேண்டும். மானியம் : 25 சதவிகிதம் – அதிகபட்சமாக ரூ.30 லட்சம்.

  1. பிரதம மந்திரியின் வேலை வாய்ப்பை உருவாக்கும் திட்டம். (PMEGP)

பொதுவாக கல்வித் தகுதி தேவையில்லை. ஆனால் திட்ட மதிப்பீட்டில் சேவைச் சார்ந்த தொழிலில் ரூ.5 லட்சத்திற்கு மேல் அல்லது உற்பத்தி சார்ந்த தொழிலில் ரூ.10 லட்சத்திற்கு மேல் இருந்தால் – 8ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். கடன் தொகை – அதிகபட்சமாக சேவை சார்ந்த தொழிலுக்கு ரூ.10 லட்சம். உற்பத்தி சார்ந்த தொழிலுக்கு ரூ.25 லட்சம். மானியம் : நகரப்பகுதியில் 25 சதவிகிதம. கிராமப் பகுதியில் – 35 சதவிகிதம்.

மேற்கண்ட மூன்று திட்டங்களிலும் கால்நடை வளர்ப்பு மற்றும் விவசாயம் சார்ந்த தொழிலுக்கு விண்ணப்பிக்க இயலாது.

10-01-2019 அன்று காலை 11.00 மணியளவில் திருவெறும்பூர் ஊராட்சி ஒன்றிய பகுதியைச் சேர்ந்தவர்கள் திருவெறும்பூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திலும், 23-01-2019 அன்று காலை 11.00 மணியளவில் முசிறி, தொட்டியம், தாத்தையங்கார்பேட்டை ஆகிய ஊராட்சி ஒன்றிய பகுதியைச் சேர்ந்தவர்கள் முசிறி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திலும், 25-01-2019 அன்று காலை 11.00 மணியளவில் லால்குடி மற்றும் புள்ளம்பாடி ஆகிய ஊராட்சி ஒன்றிய பகுதியைச் சேர்ந்தவர்கள் லால்குடி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திலும், 29-01-2019 அன்று காலை 11.00 மணியளவில் மணப்பாறை, மருங்காபுரி, வையம்பட்டி ஆகிய ஊராட்சி ஒன்றிய பகுதியைச் சேர்ந்தவர்கள் மணப்பாறை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திலும், 30-01-2019 அன்று காலை 11.00 மணியளவில் துறையூர், உப்பிலியாபுரம், மண்ணச்சநல்லூர் ஆகிய ஊராட்சி ஒன்றிய பகுதியைச் சேர்ந்தவர்கள் துறையூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திலும், 05-02-2019 அன்று காலை 11.00 மணியளவில் அந்தநல்லூர், மணிகண்டம் ஆகிய ஊராட்சி ஒன்றிய பகுதியைச் சேர்ந்தவர்கள் அந்தநல்லூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திலும், 07-02-2019 அன்ற காலை 10.00 மணியளவில் திருச்சி மாநகரப் பகுதியைச் சேர்ந்தவர்கள் ஆட்சியர் அலுவலக சாலையில் உள்ள மாவட்டத் தொழில் மையம் அலுவலகத்திலும். உடனடி தேர்வு நடைபெற உள்ளது. ரூ.10 லட்சத்திற்கு மேல் கடனுதவி பெற விரும்பும் தொழில் முனைவோர்களுக்கு இரண்டு கட்டமாக நேர்முகத் தேர்வு நடைபெறும். தேர்ந்தெடுக்கப்பட்ட விண்ணப்பங்கள் தகுதியின் அடிப்படையில் வங்கிகளுக்கு மாவட்ட ஆட்சித் தலைவர் தலைமையில் அமைக்கப்பட்ட குழுவின் மூலம் பரிந்துரை செய்யப்படும்.

எனவே படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் இந்த அரிய வாய்ப்பை பயன்படுத்தி இந்த உடனடி நேர்முகத் தேர்வில் கலந்து கொண்டு சுயமாக தொழில் தொடங்க முன்வர வேண்டுமென மாவட்ட ஆட்சித் தலைவர் கு.இராசாமணி  தெரிவித்துள்ளார்.

 

Pranav city

Leave A Reply

Your email address will not be published.