திருச்சி ஜமால் முஹம்மது கல்லூரி பட்டமளிப்பு விழா

0
Business trichy

திருச்சி ஜமால் முஹம்மது கல்லூரி மகளிர் பிரிவிற்கான பட்டமளிப்பு விழா இன்று 5 ஜனவரி 2019 பிற்பகல் 3.00 மணியளவில் கல்லூரி குளிர்மையரங்கில் நடைபெற்றது. கல்லூரி முதல்வர் முனைவர் எஸ் இஸ்மாயில் முகைதீன் தலைமையில் நடைபெற்ற இவ்விழாவிற்கு சிறப்பு விருந்தினராக  திருவாரூர் மத்திய பல்கலைகழக பதிவாளர் முனைவர் எஸ் புவனேஸ்வாி கலந்துகொண்டு மாணவிகளுக்கும் பட்டங்களை வழங்கி பேருரை நிகழ்த்தினார். அப்பேருரையில் “கற்றல் என்பது ஒரு தொடாச்சியான செயல்பாடு, நிகழ்காலக் கல்வி நாட்டை செழுமையாக்க உதவும் என குறிப்பிட்டார். இவ்விழாவில் இளநிலை படிப்பில் 934 மாணவிகளும், முதுநிலை படிப்பில் 307 மாணவிகளும், அறிவியல் நிறைஞர் படிப்பில் (M.Phil) 125 மாணவிகள் என மொத்தம் 1336 மாணவிகள் பட்டம் பெற்றனர். முன்னதாக கல்லூரி முதல்வர்  அனைவரையும் வரவேற்றார். இவ்விழாவில் கல்லூாி தலைவர் ஹாஜி. ஜமால் முஹம்மது பிலால், தாளாளர் மற்றும் செயலாளர் டாக்டர். ஏ.கே. காஜா நஜிமுத்தீன், பொருளாளர் ஹாஜி. ஜமால் முஹம்மது உதவிசெயலர் முனைவர் கே. அப்துஸ் சமது, கல்லூரி ஆட்சி மன்ற உறுப்பினர்கள், பாரதிதாசன் பல்கலைகழக செனட் உறுப்பினர்கள், கல்லூரி தேர்வு நெறியாளர், இயக்குநர்கள், துணை முதல்வர் ஏ.முகமது இப்ராஹிம், கூடுதல் துணை முதல்வர் எம். முகமது சிஹாபுதீன், முன்னாள்-இன்னாள் மாணவர்கள், பெற்றோர்கள், பேராசிரிய பெருமக்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

Full Page

Leave A Reply

Your email address will not be published.