சமஸ்கிருதபாரதீ மாநில மாநாடு

0

சமஸ்கிருதபாரதீ மாநிலமாநாடு 5 ஜனவரி 2019 இன்று 10.00 மணியளவில், ஆக்ஸ்போடு இன்ஜினியரிங் கல்லூரியில் நடைபெற்றது. இவ்விழாவை விசாகா ஹரி குத்துவிளக்கேற்றி சிறப்புரை வழங்கி துவக்கிவைத்தார். ஸ்ரீராம் (தென்மாநில அமைப்பு செயலாளர்) எழுச்சியுரை வழங்கினார். அனந்த கல்யாண கிருஷ்ணன் மற்றும் சத்தியநாராயணன் சிறப்புரையாற்றினார்கள். இவ்விழா “சமஸ்கிருத குடும்பங்கள் உருவாக்குவதில் இல்லதரசிகளின் பங்கு” என்னும் தலைப்பில் இல்லத்தரசிகள் பங்கு பெற்ற சிறப்பு கருத்தரங்கம் நடைபெற்றது.  மேலும் சிறப்பு அம்சங்களாக பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களின் சமஸ்கிருதம் சம்பந்தமான அறிவியல் மற்றும் இலக்கியம் ஆகியவற்றை விளக்கும் கண்காட்சி. யோகா, ஆயுர்வேத மற்றும் சில்ப சாஸ்த்திரம் பற்றிய செய்முறை விளக்கம், சமஸ்கிருதம், ஆன்மீகம், பக்தி, யோகா, ஆயுர்வேத புத்தக கண்காட்சி மற்றும் விற்பனை. இசை, நாட்டியம் மற்றும் நாடகம் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன. இவ்விழாவில் 1000 மேற்ப்பட்ட தன்னார்வலர்கள், கல்லூரி மாணவ மாணவிகள், சிறார்கள் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

சந்தா 2

 

Leave A Reply

Your email address will not be published.