அனுமன் ஜெயந்தி விழா

0
Business trichy

நாமக்கல் ஆஞ்சநேயருக்கு இன்று 1 டன் மலர்களை கொண்டும் 1 லட்சத்து 8 வடை மாலை கொண்டு அலங்கரித்து ஜெயந்தி விழா நடைபெற்று வருகின்றது.

பல நூறு ஆண்டுகளாக புகழ் பெற்று விளங்கும் சிறப்பு வாய்ந்த ஆஞ்சநேயர் சுவாமிக்கு இன்று அனுமன் ஜெயந்தி விழா நடைபெற்று வருவதையொட்டி ஒரு டன் மலர்களை கொண்டு கோயிலை அலங்கரித்துள்ளனர்.

Rashinee album

ஒவ்வொரு வருடமும் மார்கழி மாத அமாவாசை அன்று அனுமன் ஜெயந்தி விழா கொண்டாடப்படுகின்றது. அதன்படி இன்று  அனுமன் ஜெயந்தியை முன்னிட்டு அதிகாலை 5 மணி அளவில் நாமக்கல் ஆஞ்சநேயருக்கு இன்று 1 டன் மலர்களை கொண்டும் 1 லட்சத்து 8 வடை மாலை சாத்தப்பட்டு சிறப்பான அபிஷேகம் நடைபெற்று வருகின்றது. அதனை தொடர்ந்து காலை 10 மணிக்கு மேல் எண்ணெய், சீயக்காய், பால், சந்தனம், தயிர், இளநீர், நெய் போன்ற வாசனை திரவியங்களை கொண்டு சிறப்பு அபிஷேகம் செய்து பின்னர் சுவாமிக்கு தங்க கவசம் சாற்றப்படும். ஆஞ்சநேயருக்கு சாற்றப்பட்ட  1 லட்சத்து 8 வடை மாலைகளும் பக்தர்களுக்கு பிரசாதமாக பின்னர் வழங்கப்படும்.

Image

ஆஞ்சநேயரை தரிசனம் செய்ய தமிழகம் மற்றும் இந்தியாவின் பல பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் பெருமளவில் வந்து தரிசனம் செய்து வருகின்றனர். பக்தர்கள் தரிசனம் செய்ய ஏதுவாக காவல்துறை சார்பாக சிறப்பான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. கோட்டை சாலையை சுற்றிலும் போக்குவரத்து மாற்றப்பட்டு வாகனங்கள் வேறு பாதையில் அனுப்பப்படுகின்றது. பக்த்ர்கள் சிறப்பான முறையில் தரிசனம் செய்து வருகின்றனர்.

 

.

 

 

Ukr

Leave A Reply

Your email address will not be published.