ஞாநி சங்கரன் பிறந்த தினம் இன்று

ஞாநி என்றும் ஞாநி சங்கரன் என்றும் அறியப்படும் இவர் ஒரு தமிழ் எழுத்தாளர், நாடகக் கலைஞர், அரசியல் விமர்சகர், கட்டுரையாளர், அரசியல்வாதி என்று பன்முகத் திறனுள்ளவர். இவர் செங்கல்பட்டில் பிறந்தவர்; இவரது இயற்பெயர் வே. சங்கரன். ஆங்கில இதழாளர் வேம்புசாமியின் மகன்.

சமூக விமர்சன நோக்குள்ள வீதிநாடகங்களும் மேடைநாடகங்களும் நடத்தி வந்தவர். பரீக்ஷா என்ற குழுவை 30 ஆண்டுகளாக நடத்தி வந்தார். தீம்தரிகிட என்ற பத்திரிகையை நடத்தியவர். இவருடைய எழுத்துக்கள் வெளிப்படையான சமுதாய சாடல்கள், விமர்சனங்களைக் கொண்டவை. எழுத்து தவிர, குறும் படங்கள், நாடகங்கள் இயக்குதல் இவரது ஆளுமை. பெரியார் பற்றிய தொலைகாட்சிப் படம் ஒன்றை இயக்கியிருக்கிறார்.
