விராலிமலை அரசு மருத்துவமனையில் இன்று முதல் முதுகெலும்பு தண்டுவட அறுவை சிகிச்சை சிறப்புடன் செய்யப்பட்டது

0
Business trichy

விராலிமலை அரசு மருத்துவமனையில் இன்று முதல் முதுகெ லும்பு தண்டுவட அறுவை சிகிச்சை சிறப்புடன் செய்யப்பட்டது.

MDMK

மலையடி பட்டியை சார்ந்த பிரான்ஸிஸ் சேவியர் 55 வயது கூலி தொழிலாளி தீவிர முதுகு வலியினால் பல வருடங்கள் சிரமப்பட்டு வந்தார்.பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றும் சரியாக ததினால் விராலிமலை அரசு மருத்துவமனையில் எலும்பு மூட்டு அறுவை சிகிச்சைகள் சமீப காலமாக சிறப்பாக செய்யபடுவதை கேள்வி பட்டு விராலிமலை அரசுமருத்துவமனைக்கு வந்தார். அவரை பரிசோதித்து பார்த்த தலைமை மருத்துவர் ஜான் பரிசோதித்து பார்த்து விட்டு அவருக்கு இடுப்பு முதுகெலும்பு நகர்ந்து தண்டுவடத்தை அழுத்துவதினால் வலி ஏற்பட்டு அவதிபடுவதை கண்டறிந்து அதனை அறுவை சிகிச்சை செய்து ெ படிக்கல் ராட் அண்டு ஸ்குரு ஸ் போட்டு சரி செய்ய முடிவு செய்தார்.

 

அதன்படி இன்று அதிகாலை 6 மணிக்கு சேவியருக்கு அ றுவை சிகிச்சை செய்யப்பட்டு 9மணிக்கு வெற்றிகரமாக முடிக்கப்பட்டது.
மற்றொரு நோயாளி மனப்பாறையை சேர்ந்த பூ வியாபரி செல்வத்திற்கு முதுகு தண்டுவட சவ்வு விலகி நரம்மை அழுத்துவதினால் வலியினால் அவதிபட்டார்.
அவருக்கு தண்டுவட சவ்வை அறுவை சிகிச்சை மூலம் அகற்றி நரம்பின் மேல் உள்ள அழுத்தம் நீக்க பட்டது. இரு நோயாளிகளும் தற்போது நலமுடன் உள்ளனர் என்று முதன்மை மருத்துவ அலுவலர் ஜான் தெரிவித்தார். முதுகு தண்டுவடத்தில் அறுவை சிகிச்சை என்பது மருத்துவ கல்லுரி மருத்துவமனைகளில் அதற்கென உள்ள சிறப்பு மருத்துவ பிரிவில் மட்டும் தான் செய்யபட முடியும் என்ற நிலையில் துணை தாலுக்கா மருத்துவமனையான விராலிமலை அரசு மருத்துவமனையில் வெற்றிகரமாக சிறப்புடன் செய்யப்படுவதை நோயாளிகளும் நோயாளிகளின் உறவினர்களும் வெகுவாக பாராட்டினார்கள் இந்த சிறப்பு வசதிகளை விராலிமலை அரசு மருத்துவமனையில் ஏற்படுத்தி கொடுத்த மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் அவர்களுக்கு நோயாளிகளும் பொதுமக்களும் நன்றிகளை தெரிவித்தனர்

Pranav city

Leave A Reply

Your email address will not be published.