புத்தாண்டு கொண்டாட்டத்தில் இளைஞர்கள் இடையே மோதல்

0

முன் விரோதத்தில் புத்தாண்டு கொண்டாட்டத்தில் இளைஞர்கள் இடையே மோதல் இருவர் மண்டை உடைப்பு

food

நாமக்கல் மாவட்டம் எருமப்பட்டி அருகே உள்ள தேவராயபுரம் கிராமத்தில் மெயின் ரோடு அருகே புத்தாண்டை கொண்டாட 31.12.2018ம் தேதி இரவு சுமார் 11.30 மணி வாக்கில் நண்பர்கள் சார்பில் கேக் வெட்ட தன் நண்பர்கள் கௌதமன், பழனியாண்டி, நந்தகுமார், இலங்கேஸ்வரன், பாலு, கோபிநாத், பிரவீன் ஆகியோர் மற்றும் சிலருடன் சேர்ந்து தயாராகிக்கொண்டிருந்த போது அப்போது மேற்கண்ட ஊரைச் சார்ந்த லோகேஸ் மற்றும் செல்வகுமார் கேக் வெட்டும் இடத்திற்கு வந்து ஏற்கனவே இவர்களுக்குள் ஏற்பட்ட தகராறினை பற்றி தட்டிக்கேட்டதாகவும் அது தொடர்பாக ஒருவொருக்கொருவர் தாங்கள் கையோடு தயாராக வைத்திருந்த உருட்டு கட்டையால் மாறி மாறி தாக்கிக் கொண்டு கடுமையான சண்டை நடந்ததில் பிரவீன் (எ) பிரவீன்குமாருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டு சேலம் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு உயிருக்கு ஆபத்தான நிலையில் உள்ளார். சண்டையை விலக்க சென்ற பிரவீன் நண்பர் அருண்குமார் என்பவருக்கு லேசான காயம் ஏற்பட்டது. இத்தகவல் குறித்து அறிந்த எருமபட்டி போலீஸ் காவல் ஆய்வாளர் கைலாசம் மற்றும் சப்இன்ஸ்பெக்டர் மாதையன் ஆகியோர் வழக்கு பதிவு செய்து மேற்கண்ட வழக்கில் தாக்குதல் நடத்திய லோகேஸ் மற்றும் செல்வகுமார் ஆகியோரை கைது செய்து சிறையில் அடைத்தனர். மேற்கண்ட சம்பவத்தால் தேவராயபுரம் கிராமத்தில் பதட்டமான சூழ்நிலை நிலவி வருகின்றது.

மேற்கண்ட புத்தாண்டு கொண்டாட்ட தகராறில் படுகாயமடைந்து சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் பிரவீன்(எ)பிரவீன்குமாருக்கும், அவரது வீட்டருகே வசித்து வருபவருக்கும் ஏற்கனவே குடும்ப தகராறு ஏற்பட்டு கடுமையான பகை இருந்து வந்துள்ளது. அதன் காரணமாக ஏற்கனவே பிரவீன் ஒருமுறை கடுமையாக தாக்கப்பட்டு உயிர் தப்பியிருக்கின்றார். அதிலிருந்து பிரவீன்குமார் தனது குடும்பத்துடன் வெளியூர் சென்றுவிட்டார். புத்தாண்டை கொண்டாட நண்பர்கள் அழைத்ததின்பேரில் அவர் வந்தாரா அல்லது யாருடைய தூண்டுதலின் பேரில் அவர் திட்டமிட்டு அழைக்கப்பட்டு தாக்குதல் நடத்தப்பட்டதா? என போலீசார் தீவிரமாக விசாரிக்க வேண்டும் என்றும், இச்சம்பவத்தில் ஈடுபட்ட முக்கிய நபர்கள் தப்பியிருக்கலாம் என்றும் அவர்களை கண்டுபிடித்து அவர்கள் மேல் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தொடர்ந்து இதுபோல் தேவராயபுரம் கிராமத்தில் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தி வருபவர்கள் மீது மாவட்ட காவல்துறை கடுமையாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே பொதுமக்களின் கோரிக்கை.

gif 4

Leave A Reply

Your email address will not be published.