இந்தியாவை ஆளும் ரஜினியின் எண்

0

எ(ன்)ண் ஜோதிடம்-4

 

இந்த வாரம் எண் 3-ஐ பற்றி தொடர்ந்து பார்ப்போம். எண் கணித முறைப்படி இந்தியா என்பது எண் மூன்றைக் குறிக்கும். அதாவது, INDIA= 1 + 5 + 4 + 1 + 1 = 12 = 1 + 2 = 3.
வைகோ இந்தியா குறித்து மேடைகளில் பேசும் போது இந்தியா வல்லரசாக மாற, அமெரிக்காவை USA என அழைப்பதுபோல், இந்தியாவையும் USI (United State of India) என மாற்றம் செய்யவேண்டும் என்பார்.

USA என்பதன் கூட்டுத்தொகை U+S+A= 6+3+1 = 1 + 0 = 1
USI என்பதன் கூட்டுத்தொகை U+S+I= 6+3+1 = 1 + 0 = 1
அவர் இந்தியா என்பதை USI என மாற்ற வேண்டும் என்று கூறுவதற்கான காரணம் எண் 1 வர வேண்டும் என்பதற்காகவே. ஆனால், பகுத்தறிவுவாதியான அவர் இதனை விளக்கமாக மேடைகளில் பேசுவதில்லை.
இந்த 3-ம் எண்ணில் (3, 12, 21, 30) எண் 12 மட்டும் மிகவும் கஷ்டப்பட்டு தனது சுற்றத்தை இழந்து முன்னேறும் எண். இந்தியாவின் சுதந்திர தினம் ஆகஸ்ட் 15. இந்த தேதியில் நாளின் கூட்டு எண் 1 + 5= 6. தேதியின் கூட்டு எண் 1 + 5 + 8 + 1 + 9 + 4 + 7 = 35 அதாவது 8.

சுதந்திர தினத்தின் தேதி கூட்டு எண் 6. இந்த எண் 3-க்கு எதிர் எண். சுதந்திர தினத்தின் கூட்டு எண் 8. இது சனி கிரகத்தின் ஆதிக்கம் கொண்ட எண். 6 மற்றும் 8 இரண்டுமே இந்தியா என்ற பெயரில் உள்ள 3-ம் எண்ணுக்கு எதிர் எண்ணாகவே இருந்து வருகிறது. அதனாலேயே பல தீய விளைவுகள் ஏற்பட்டன.
ஆங்கிலேயே கவர்னர் மௌண்ட்பேட்டன் 15 / 8/ 1945-ல் ஜப்பானை தங்கள் கட்டுக்குள் கொண்டு வந்த தினத்தை முன்னிட்டு, 15 / 8 / 1947-ல் சுதந்திர தினத்தை அறிவித்தார். அதாவது, அவர் அறிவித்த 15-ம் தேதியின் கூட்டு எண்ணும் 6.
நமது நட்பு நாடாக இருந்த சீனாவின் கூட்டு எண் 6. அதனாலேயே, சுதந்திரத்திற்கு பிறகு சீனா நமக்கு பகை நாடாக மாறியது. காரணம் இந்தியா (3) என்ற எண்ணுக்கு சீனா (6) பகை எண் உடையதாக உள்ளது.

இந்தியாவிற்கு சுதந்திரம் வழங்க இங்கிலாந்திடம் பரிந்துரைத்த பிரதமர் கிளமண்ட் அட்லி பிறந்த தினம் 3 / 1 / 1883. அதாவது அவரது பிறந்த தேதி கூட்டு எண் 3. தேதியின் மொத்த கூட்டுத் தொகை 6. அவர் காவிரியில் பாசனத்துக்கு தண்ணீர் திறந்த தினம் 12/6/1934. இவற்றின் கூட்டுத்தொகை 3 மற்றும் 8 ஆகிய எண்கள். நாம் முன்னரே பார்த்தபடி இந்தியாவில் முக்கிய தினங்கள் 3, 8 என்ற எண்களுக்குள்ளேயே அமைந்துவிட்டன.

குடியரசு தினம் 26 / 1 / 1950 = இதன் தேதியின் கூட்டு எண் 8
அப்போதைய பிரதமர் இந்திராகாந்தி எமர்ஜென்சியை 25 ஜூன் 1975 என்ற தேதியில் அறிவித்து அது அடுத்த நாள் 26-ம் ேததியிலிருந்து அமலுக்கு வந்தது. 26 ஏப்ரல் 1975 -ம் ஆண்டும் சிக்கிம் மாநிலம் இந்தியாவுடன் இணைந்தது. அதுமட்டுமின்றி, 26 டிசம்பர் 2004 ம் ஆண்டு ஏற்பட்ட சுனாமி பேரழிவு, 26 நவம்பர் 2008-ல் மும்பையில் நடைபெற்ற தீவிரவாத தாக்குதல் ஆகிய அனைத்து தேதிகளின் கூட்டு எண்ணும் 8.

ஆனால், இதே எண்ணில் பிறந்தவர்களாலேயே இந்தியாவில் ஜனாதிபதியாகவோ, பிரதமராகவோ 5 ஆண்டுகள் முழுவதும் பதவிவகிக்க முடிந்தது. எனவே, இந்தியாவை ஆள வேண்டும் என்றால் பிறந்த தேதியின் கூட்டு எண் 3, 8 ஆக இருக்க வேண்டும். அல்லது பிறந்த தேதி +மாதம்+வருடம் மூன்றையும் கூட்டிவரும் எண்ணோ அல்லது பெயரின் கூட்டு எண்ணோ 3, 8 ஆக இருக்க வேண்டும்.
உதாரணமாக, முன்னாள் ஜனாதிபதி டாக்டர். ராஜேந்திர பிரசாத் பிறந்த தேதி 3, முன்னாள் பிரதமர் இந்திராகாந்தி பிறந்த நாளின் கூட்டு எண். 19-11-1917 = 30 = 3, முன்னாள் ஜனாதிபதி பிரதிபாபாட்டீல் அவர்களின் கூட்டு எண் 19-12-1934 = 30 = 3, தற்போதைய ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் பிறந்தநாளின் கூட்டுத் தொகை 1-10-1945 = 21 = 3. ராஜீவ்காந்தியின் பெயர் எண் (RAJIV GANDHI) 2+1+1+1+6+3+1+5+4+5+1=30=3, R.Venkataraman பெயர் எண் 3, APJ ABDULKALAM கூட்டு எண் 3 ஆகிய எல்லோருடைய எண்களுமே 3 தான்.

food

இதேபோல, சந்திரசேகர், நரசிம்மராவ், அடல்பிகாரி வாஜ்பேய், மன்மோகன் சிங், மோடி ஆகியோர் 8ம் எண்காரர்கள். ஆகவே, இந்தியா என்ற பெயரை எண் 1 என வருவதுபோல் மாற்றியமைத்தால் அமைதியான நாடாக மாறும்.
ரஜினிகாந்த் (12-12-1950)
நடிகர் ரஜினிகாந்த் அவர்கள் பிறந்த தேதியின் கூட்டு எண்ணும் 3, பிறந்த தேதி + மாதம் + வருடம் மூன்றையும் கூட்டினால் எண் 3 வரும் அதாவது 3 & 3 என மூன்றால் ஆளக்கூடியவர் எண் 3-ல் 3, 12, 21, 30 இல் எண் 12 தாய் தகப்பனால் ஜாதக வலுவாக இருந்தால் தாய், தந்தையை கஷ்டப்படுத்தும். இல்லை என்றால் ஒன்றும் செய்யாது தாய், தகப்பன் ஜாதகம் வலுவிழந்தால் தாயையோ தகப்பனையோ அல்லது இருவரையும் மரணிக்கச் செய்யும்.

இதனால் சிறு வயதில் பெற்றோரை இழந்த ரஜினிகாந்த் அவர் கூட்டு எண் 21 = 3
இவருக்கு பிறந்த எண்ணுடைய கூட்டு எண்ணும் 3 ஆகவே இவர் கடின உழைப்பால் சினிமாவில் முன்னேறியவர். சினிமாத்துறையில் 3, 7, 9 தேதி உள்ளவர்களின் ஆதிக்கம் அதிகம். ஆகவே சினிமாத்துறை அவருக்கு கை கொடுத்தது.
எண் 3 இவரை தேதியவாதியாக்கியது. என் தேசம், என் மக்கள் என்று கூறுவார்.
இந்தியாவை ஆளும் தகுதி உள்ள எண் 3ம் 8ம் ரஜினிகாந்த் அவர்கள் இந்திய தேசியத் தலைவராக அவதாரம் எடுக்கலாம்.

ரஜினிகாந்த் பிறந்த தேதியும் கூட்டு எண்ணும் 3 & 3
RAJNIKANT 2+1+1+5+1+2+1+5+4 = 22 =4
பெயர் எண் 4 ராகுவை குறிக்கும் இப்பெயர் மாற்றத்திற்கு பிறகுதான் (சிவாஜிராவ்) ரஜினிகாந்த் வேகமான வளர்ச்சி அடைந்தார்.
RAJNI 2+1+1+5+1=10 எண் ஒன்றைக் குறிக்கிறது.
இவர் தேசியத் தலைவராக வரலாம்.
இவர் கைகாட்டக்கூடிய நபர் தமிழகத்தை ஆளலாம்.
இவருக்கு பிறந்த தேதியும் கூட்டு எண்ணும் 3 (3 & 3)தமிழ்நாடு எண் 2. அதனால்தான் தான் அவமானப்பட்டு விடுவோம் என்ற அச்சம் உள்ளது.
மோடி ரஜினி தேசிய அரசியலில் தலை எடுக்கக் கூடாது என்று தமிழக அரசியலுக்கு சொல்லுங்கள் என்று அழுத்தம் கொடுக்கிறார். (தமிழக அரசியலில் இவர் ஈடுபட்டால் அவமானப்படுவார். தேசிய அரசியல் இவருக்கு நன்று)
பிரியங்கா காந்தி (12-1-1972)

அன்னை இந்திராகாந்தியின் பேத்தியும் புதுயுகம் காணவேண்டும் என்று எண்ணம் உடைய ராஜிவ்காந்தி சோனியாகாந்தியின் இளையமகள் பிரியங்காகாந்தி (இந்திராகாந்தியின் மறு அவதாரமாக கருதப்படுவார்)
இவர் பிறந்த எண்ணின் கூட்டுத்தொகை 12-1-1972 1+2+1+1+9+7+2= 23 = 5
பிறந்த தேதி எண் 12 = 1+2 = 3 எண் 3ஐ குறிக்கும்
இந்தியாவை ஆளக்கூடிய எண் 3ம், 8ம் அதாவது பிறந்ததேதி கூட்டு எண் அல்லது பிறந்த தேதி + மாதம் + வருடம் மூன்றையும் கூட்டி வரும் எண் அல்லது பெயரின் எண் 3 அல்லது 8 வந்தால் அவர் இந்தியாவில் ஜனாதிபதியாகவும் பிரதமராகவும் வாய்ப்பு உண்டு.

காங்கிரஸில் பிரியங்கா தலைமைக்கு வந்தால் தான் பிரதமர் மோடிக்கு போட்டியாளராக இருப் பார். 12ம் தேதி பிறந்தவர்களின் பெற்றோருக்கு ஜாதகமோ பெயரோ வலுவிழந்தால் தந்தை தாயை பாதிக்கும். ராஜீவ்காந்தியின் பிறந்த தேதி 20-8-1944 2+0+8+1+9+4+4+ 28 = 1
இதேபோல 2, 1-ம் எண்கள்…
பெயர் எண் RAJIV GANDHI 2+1+1+1+6+3+1+5+4+5+1 = 30 = 3 பெயர் எண் 3 இவரை பிரதமராக ஆக்கியது கூட்டு எண் 1 உச்ச பதவிக்கு தள்ளியது.
அதாவது எண் 1 பதவிக்கு வரும் பொழுது குறுக்கு வருபவர்களை தள்ளி விட்டோ இல்லை என்றால் முன்னவரை மரணிக்கச் செய்தோ அந்த பதவிக்கு வரும். இராஜிவ்காந்தி இந்திராகாந்தி மறைவின் மூலம் பிரதமர் ஆனார்.

உதாரணம்
1. இந்திராகாந்தி பிறந்த தேதி 19-11-1917 1+9+1+1+1+9+1+7 = 30 = 3
2. பெயர் எண் 1 உள்ள மு.கருணாநிதி அவர்கள் அண்ணா மறைவை ஒட்டி முதல்வர் ஆனார்.
3. 10-11-1974 1+0+1+1+1+9+7+4 = 24 = 6 பிறந்த எண் 1 உடைய J.தீபா தன் அத்தை மரணத்திற்குப் பின் அரசியலுக்கு வருகிறார்.

தொடரும்…

-சுரேஷ் ஆழ்வார்

gif 4

Leave A Reply

Your email address will not be published.