அருளமுதம் எனும் அருமருந்து உயிர் வளர்ப்போம்! கதை வழி மருத்துவம்-10

0
Business trichy

அனைவரும் உண்டு முடித்த பின்னர் ஒரு சிலர் ஆங்காங்கே படுத்து உறங்க தொடங்கினர். இதனை கண்ட யோகியார் அனைவரையும் எழுப்புமாறு கூறினார். உடனே அனைவரும் எழுப்பப்பட்டனர். “உண்ட பிறகு உடனடியாக படுத்து உறங்குதல் கூடாது. உணவு உண்டு 45 நிமிடங்கள் கழிந்த பின்னரே உறங்குதல் வேண்டும்.” என் அறிவுறுத்தினார் யோகியார்.

இதனை கேட்ட அங்கிருந்த முதியவர் ஒருவர் “அய்யா, உண்ட மயக்கம் தொண்டனுக்கும் உண்டு என்பது பழமொழி. அதற்கிணங்க உண்ட பிறகு களைப்பில் ஒரு மயக்க நிலை எல்லோருக்கும் தோன்றுவது சகஜமான ஒன்று தானே? அப்படி இருக்க தங்கள் கூறுவது எவ்வாறு ஏற்புடையதாகும்?” என வினவினார். இதற்கு யோகியார் “அன்பரே, உண்ட மயக்கம் என்பது உணவு உண்ட பின் இயல்பாக உணவினை சீரணிக்கும் பொருட்டு உடல் தன் ஆற்றல் அனைத்தையும் இரைப்பையை நோக்கி திருப்பி விடுவதால் ஏற்படும் சிறு சோர்வாகும்.

இந்த வேளையில் ஓய்வாக அமர்ந்து இருப்பது தான் சரியான செயலாகும், படுத்து உறங்குவது என்பது சீரண சக்திக்கு தேவையான புவி ஈர்ப்பு ஆற்றலை நிலை மாற செய்து விடும். புவி ஈர்ப்பு விசை நம் உடலில் மேலிருந்து கீழாக செயல்படும் பொழுது தான் சீரணம் சரியாக செயல்படும்” என விளக்கினார். இதனை கேட்ட அம்முதியவர் நன்றியுடன் கை கூப்பினார்.

Kavi furniture

அந்தி வேளை நெருங்க இன்னும் சில மணி நேரங்கள் இருப்பதால் பயணத்தை தொடரலாம் என மந்திரியார் அறிவுறுத்தவே பயணம் மீண்டும் தொடங்கியது. அனைவரும் தத்தமது தேர்களில் ஏறிக்கொண்டனர். அவர்கள் பயணத்தில் அடுத்த படியாக கடந்து சென்றது அந்த நாட்டின் நீர் ஆதாரமாக விளங்கிடும் மணியாறு என்கிற வற்றாத ஆற்றினை. அந்த ஆற்றின் குறுக்கே ஒரு நெடிய பாலம் எழுப்பப்பட்டிருந்தது. அப்பாலத்தின் கீழ் ஆற்று நீரை தேக்கி வைக்கும் பிரம்மாண்ட அணைக்கட்டு ஒன்று எழுப்பப்பட்டு இருந்தது. மன்னன் யோகியாரிடம் இவை அனைத்தையும் காட்டி தன் நாட்டின் நீர்வளத்தை பற்றி விளக்கி கொண்டிருந்தான். அந்த நேரத்தில் முன்சென்ற தளபதி வீரமகேந்திரன், திடீரென தேரினை நிறுத்தினார்.

அவரது கம்பீர குரல் காற்றினை கிழித்துக்கொண்டு அனைவரின் செவிகளிலும் தொனித்தது. “வீரர்களே நமக்கு முன்னிருக்கும் இப்பாலத்தின் மையத்தில் நமக்கு ஒரு ஆபத்து காத்திருக்கிறது. ஆயுதம் ஏந்திய ஒரு படை பாலத்தின் மையத்தில் இரு புறங்களிலும் முற்றுகையிட்டுள்ளதை நான் காண்கிறேன். சரியான வியூகம் அமைத்து அவர்களை முறியடித்தாக வேண்டும். குதிரை படையினர் என்னுடன் வாருங்கள். தரைப்படையினர் மன்னரை சுற்றி நின்று அரண் அமைத்து பாதுகாத்திடுங்கள்.” தளபதியின் கட்டளைப்படி குதிரைப்படை அவருடன் அணிவகுத்து முன்னேறியது. பாலத்தின் இரு மருங்கிலும் இருக்கும் எதிர் படையினரை மின்னல் வேகத்தில் தாக்கி பலத்தின் கீழ் ஓடும் மணியாற்றில் தள்ளிவிட்டு வெள்ளப்பெருக்கில் அவர்களை மூழ்கடிப்பது என தளபதி தன் வியூகத்தை வீரர்களுக்கு விளக்கினார்.

வீரர்கள் தளபதியின் தலைமையில் முன்னேறிச்சென்றனர். தளபதியின் திட்டம் சரியாக செயல்பட்டது. சீறி வரும் புயலாக பாய்ந்த வீரர்கள் மறைந்திருந்த எதிர் படையினரை கண்ணிமைக்கும் நேரத்தில் தாக்கி பெரும்பான்மையினரை ஆற்றில் தள்ளினர். எஞ்சிய சிலரை கைது செய்து அழைத்து வந்தனர். கைதிகளை விசாரித்த பொழுது அவர்கள் சமீப காலமாக நாட்டில் வழிப்பறியில் ஈடுபட்டு வந்த கூட்டத்தினர் என்பது தெரிய வந்தது. மக்களுக்கு தொல்லை தந்து வந்த இவர்களை முறியடித்த தளபதியை மன்னன் வெகுவாக பாராட்டினான். நாடு திரும்பியதும் தக்க சன்மானம் வழங்குவதாய் வாக்களித்தான். ஆபத்திலிருந்து தப்பியதை எண்ணி மன்னன் உட்பட அனைவரும் நிம்மதி அடைந்தனர்.

MDMK

இதனை கண்ட யோகியார் “மன்னா, நீர் பாலத்தில் மறைந்திருந்த ஆபத்தினை முறியடித்து ஆற்றில் தள்ளியத்தை எண்ணி நிம்மதியடைகிறீர். ஆனால் ஆபத்து இன்னும் நீங்கவில்லை. மறைந்துள்ள அதனை கண்டறிய வல்லார் யாரும் உம்மில் இல்லை.” என்றார். இதனை கேட்டு திகைத்த மன்னன் “அய்யனே, இன்னும் ஆபத்தா? அது எங்கு மறைந்துள்ளது என்பதை சற்று விளக்கமாக கூறியருளுங்கள். நமது படையினர் அதனையும் முறியடிப்பார்கள்” எனக் கூறினான். ஆனால் யோகியாரோ “மன்னா, இதனை முறியடிக்க உம்மாலோ உம் வீரர்களாலோ இயலாது.” எனக் கூறினார்.

யோகியார் பேசிக்கொண்டு இருக்கும் பொழுதே திடீரென அங்கு காற்று வேகமாய் வீசியது. பலமான அக்காற்றில் வனத்தின் மரங்கள் உரசி தீப்பற்றிக்கொண்டது. விரைவாக பரவிய தீயானது அருகிருந்த மரங்களில் பற்றிக்கொண்டது. அங்கிருந்த அனைவரும் தீயால் சூழப்பட்டனர். தப்பிக்கும் வழியை யோசிக்கும் முன்னரே நாற்புறமும் தீ சூழ்ந்து கொண்டது. குதிரைகள் மிரண்டன, மக்கள் கூக்குரலிட்டனர். அப்போது சற்றும் கலங்காமல் நின்று கொண்டிருந்த யோகியார் தனது சுண்டு விரலினை வானத்தினை நோக்கி உயர்த்தினார், அடுத்த சில வினாடிகளில் வானம் குளிர்ந்த மழை துளிகளை உதிர்க்க தொடங்கியது. பெருகிய மழை நீரில் காட்டுத்தீ மெல்ல குறைந்து மறைந்தது. இவ்வதிசயத்தினை கண்ணுற்ற அனைவரும் திகைப்பில் ஆழ்ந்தனர். அவர்கள் அனைவரும் யோகியை ஒரு அதிசயப்பிறவியாக பார்த்தனர். சிலர் அவரை இறை அவதாரம் என்றனர்.

மன்னனோ யோகியாரின் பாதங்களை பற்ற முற்பட்டான். பதறியபடி அவனை தடுத்த யோகியார் “மன்னா, வணக்கத்திற்கு உரியவன் இறைவன் ஒருவனே. நீங்கள் நினைப்பது போல இது பேரதிசயம் அல்ல, விடா முயற்சியால் எவரும் அடைய கூடிய ஒன்றே. யாம் கற்றுக்கொடுத்து கொண்டிருக்கும் அக்குயோகா கலைக்கு பஞ்ச பூதங்களை கட்டுப்படுத்தும் வல்லமை உண்டு. ஒரே ஒருமுறை நடந்த இந்த நிகழ்வுக்கு இவ்வளவு அதிசயித்து போகிறீர்களே, தினம் தினம் இந்த அதிசயத்தை நீங்கள் அனைவரும் நிகழ்த்தி கொண்டு இருக்கிறீர்கள் என்பதனை அறிவீர்களா?” என வினா எழுப்பினார். இதனை கேட்ட மன்னன் “என்ன தினமும் நாங்கள் இந்த அதிசயத்தை நிகழ்த்துகின்றோமா? சற்று புரியும்படி விளக்கிடுங்கள் அய்யா” எனப் பணிந்து வேண்டினான்.

யோகியாரும் தன் வழக்கமான புன்முறுவலுடன் விளக்க தொடங்கினார் “மன்னா, நம் உடலில் இரண்டாவது பூதமாக விளங்குவது நீராகும். நமது உடலில் எப்போதெல்லாம் வெப்பம் மேலிடுகின்றதோ அப்போதெல்லாம் இந்த நீர் பூதம் தான் நமது உடலினை சமநிலைபடுத்துகின்றது. உங்கள் உயிரானது அன்றாடம் நீர் பூதத்தினை இயக்கி உடலானது வெப்பத்தால் அழிந்து விடாமல் பாதுகாக்கின்றது. இந்த நீர் பூதத்தின் இயல்புகளை விளக்குகிறேன் கவனமாக கேளுங்கள். கரு உறுப்பு- சிறுநீரகம், உறு உறுப்பு – சிறுநீர்ப்பை, உணர்வு உறுப்பு – காதுகள், உப உறுப்புகள்- எலும்பு, நகங்கள், தலை முடி, முட்டி, கீழ் முதுகு, இனவிறுத்தி உறுப்பு, நிறம்-கருப்பு, சுவை – உப்பு, காலம் – குளிர்காலம், உணர்ச்சி – பயம், திசை – வடக்கு, ஆதாரம் – மணிபூரகம்” என யோகியார் விளக்கினார். இவற்றை கேட்ட மன்னன் “அய்யனே, தாங்கள் முன்னர் நிலம் எனும் பூதத்தின் இயல்புகளை இதே போன்று தொகுத்துக்கூறினீர்கள். இவை படைப்பின் மூல தத்துவம் எனக்கூறினீர்கள். இவற்றை தெரிந்து கொள்வதால் என்ன பயன் என்பதை விளக்கிட வேண்டுகிறேன்.

யோகியார் மன்னனின் இக்கேள்விக்கு “மன்னா, இந்த பூதங்களின் இயல்புகள் வாயிலாக உடலில் தோன்றும் எந்த ஒரு நோயினையும் அடையாளம் காண இயலும். உடலில் எங்கு என்ன பாதிப்பு ஏற்படுகின்றதோ அந்த பூதம் பாதிப்படைந்து உள்ளது என்பதனை புரிந்து கொண்டு அதனை எளிமையாக சீர்படுத்தி கொள்ளலாம். இதற்காகவே அனைவரும் இவ்வியல்புகளை அறிந்து வைத்திருக்க வேண்டியது அவசியமாகும். இவ்வுலகில் வீட்டிற்கு ஒருவரேனும் இந்த அக்குயோகா எனும் இந்த ஞான மருத்துவக்கலையை கற்றுக்கொண்டு பயன்பெற வேண்டும் என்ற நோக்கிலேயே இதனை உலகுக்கு உரைக்கின்றோம்.” என விடை பகிர்ந்தார். இதனை கேட்டு உள்ளம் தெளிந்த மன்னன் யோகியாரின் உயர்ந்த பண்பினை போற்றி வணங்கினான்.

அப்போது அனைவருக்கும் காட்டுத்தீயின் வெப்பத்தாக்கத்தால் தாகம் மேலிடவே நீர் பருகிட ஆற்றங்கரைக்கு சென்றனர். அங்கு மன்னன் நீரினை குவளையில் அள்ளினான், தலையை அன்னார்ந்தபடி நீரினை பருக குவளையை வாயருகே கொண்டு சென்று உயர்த்தி பிடித்தான். அப்போது யோகியார் திடீரென மன்னன் நீரினை பருக முடியாதபடி அவன் கரங்களை இறுக பற்றிக்கொண்டார்.
தொடரும்…

Pranav city

Leave A Reply

Your email address will not be published.