திருச்சி வடகறி

0
Full Page

திருச்சின்னாவே ஸ்பெஷல்தான். அதுவும் சுவைக்கு பஞ்சமில்லா பாரம்பரியமிக்க கடைகள் திருச்சி பெரியகடைவீதியில் பஞ்சமே இல்லன்னு சொல்லலாம். “பாவா கடை”, “வரது கடை”,”பீ.வி டிபன்”ன்னு எவ்வளவோ பேரு இருந்தாலும் திருச்சி பெரிய கடை வீதில வடகறி வரதன் கடைன்னு கேட்ட, யாரா இருந்தாலும் சின்ன கம்மாளத்தெரு சந்துக்குள்ள இரண்டாவது கடைன்னு சொல்லுவாங்க.

இரவு 7 மணிக்கு விறுவிறுப்புடன் ஆரம்பிக்கும் வடகறி விற்பனை இரவு 12 மணிவரை கூட்டம் குறையாமல் இருக்கிறது. 40 வருடத்திற்கு மேலாக இயங்கிவரும் பீ.வீ டிபன் சென்டரின் ஊரிமையாளர் பாலகிருஷ்ணனை சந்தித்து பேசினோம்.

“எங்களுக்கு திருச்சி தான் பூர்வீகம். அப்பா வரதராஜன் , 40 வருசம் ஓட்டல்ல மாஸ்டரா இருந்தாரு. ஆரம்பத்துல பெரியகடைவீதி நகைகடையெல்லாம் இரவுல மூடுற நேரத்துல இட்லி, தோசை கடை ஆரம்பிச்சாங்க.

அப்பாவோட நண்பர் ஒருத்தர் ஏதாவது புதுசா, வித்தியாசமா செய்ங்கன்னு சொன்னதால, வடகறி போட ஆரம்பிச்சாரு. 1977ல இங்க கடை ஆரம்பிச்சு இப்போ நிறைய வெரைட்டீஸ் போட்டுட்டு இருக்கோம்.


முதல்ல அப்பாதான் எல்லாமே செய்வாரு, அதே மாதிரி இப்பவும் மாஸ்டர் இல்லாமே நானேதான் செய்றேன். இங்க செய்ற எல்லா உணவுக்கும் மிளகா வதக்கி அரைச்சு போடுறது தான்.

மிளகா பொடி உபயோகப்படுத்துறது இல்ல. கே.என்.நேரு, வெல்லமண்டி நடராஜன், செளந்தரராஜன்னு பல அரசியல் தலைவர்கள் இங்க ரெகுலர் கஸ்டமர்.

Half page

தினமும் இங்கே ஒரு ஸ்பெஷல் உணவும், மூலிகை சட்னியும் கிடைக்கும். இங்க வடகறி மட்டும் ஸ்பெஷல் இல்ல, சேவை , அசோகா அல்வா, நெய் அக்காராடிசில், அடை, தோசைன்னு எல்லாத்துலயுமே பல வெரைட்டி கிடைக்கும்.

இது எல்லாம் சாப்பிட்டு தீர்க்கவே ஒரு மாசம் ஆகும் ஏன்னா இங்கே ஒவ்வொரு நாளும் ஒவ்வொண்ணு ஸ்பெஷல் சேவைல லெமன் சேவை, புலி சேவை, மிளகு சேவை, தேங்காய் பால் சேவைன்னு ஒரு நீண்ட லிஸ்டை சொல்ல ஆரம்பிக்கிறார்…

அவர் சொல்லும் போதே நாவில் எச்சில் ஊறுகிறது… சைவ பிரியர்களுக்கான குட் சாய்ஸ் நைட் கடை பி.வி டிபன் சென்டர்.

வட கறி எப்படி செய்யலாம்?
தேவையான பொருட்கள்:

கடலை பருப்பு, உளுந்தம் பருப்பு, பாசி பருப்பு – தலா 300 கிராம், தேங்காய் 1, வெங்காயம், தக்காளி- தலா கால் கிலோ, வரமிளகாய்- 20 கிராம், பெட்டுக்கடலை -20 கிராம், ஏலக்காய் – 5, கிராம்பு-10, கசகசா-30 கிராம், மல்லி-2 ஸ்பூன், எண்ணெய், கறிவேப்பிலை, கொத்தமல்லி தேவையான அளவு, சோம்பு- 15 கிராம், பட்டை-10 கிராம்.

செய்முறை:
3 வகை பருப்புகளையும் ஊற வைத்து வடைக்கு அரைப்பது போல் அரைத்து, எண்ணெயில் சிறு சிறு உருண்டைகளாக பொரித்து எடுக்கவேண்டும். தேங்காய், வரமிளகாய், ஏலக்காய், கிராம்பு, கசகசா, மல்லி ஆகியவற்றை தனியாக அரைத்து எண்ணெயில் தக்காளி, வெங்காயம், கறிவேப்பில்லை சேர்த்து வதக்கி இறக்கி கொத்தமல்லி தூவினால் சுவையான வடகறி ரெடி.

Quarter page

Leave A Reply

Your email address will not be published.