திருச்சி ஆல் இந்தியா ரேடியோ- “இசைவெள்ளி” செண்பா

0
D1

திருச்சி ஆல் இந்தியா ரேடியோவின் ஆர்.ஜே “இசைவெள்ளி” செண்பாவுடன் ஒரு நேர்காணல்…

செண்பா?
என்னோட பேரு செண்பா. என்னோட கணவர் கார்த்திக் என்று சொல்லியபடி சிரிக்கிறார். எல்லோருமே எங்களை ராஜா-ராணி சீரியல்ல வர கார்த்திக் செண்பாவான்னு கேட்டுதான் கிண்டல் பண்ணுவாங்க. எனக்கு சொந்த ஊரு, ஸ்கூலிங் எல்லாமே திருச்சி பொன்மலை தான். திருச்சி எம்.ஐ.இ.டில இன்ஜினியரிங் முடிச்சேன். பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் எம்.பி.ஏ முடித்தேன்.

 

ஆல் இந்தியா ரேடியோவில் வாய்ப்பு கிடைத்தது எப்படி?
நான் இன்ஜினியரிங் படித்ததே, எனக்கு ஆர்வமில்லாமல் தான். எல்லாரும் இன்ஜினியரிங் படிக்கறாங்க. அதனால நாமலும் படிக்கலான்னு தான் ஜாயின் பண்ணேன். எனக்கு பொதுவாகவே ரேடியோ கேட்கிற பழக்கம் இல்லை. என்னோட தோழி ஒருத்தவங்கதான் நீங்க முயற்சி பண்ணுங்கன்னு சொன்னாங்க, கடைசி நாள் தான் அப்ளிக்கேஷன் வாங்கி ஆடிசன் அட்டன் பண்ணேன். என்னுடைய தமிழ் உச்சரிப்பு நல்லா இருந்ததால உடனே என்னை செலக்ட் பண்ணிட்டாங்க. இப்போ வெற்றிகரமாக ஏழாவது வருடத்தை தொட இருக்கிறேன்.

D2

N2

இசைவெள்ளி?
முதலில் நான் திரைக்களஞ்சியம் என்ற நிகழ்ச்சியை “பாட்டும் பரதமும்” என்ற தலைப்போடு நடத்தினேன். எனக்கு சின்ன வயசில இருந்தே பாட்டு பாடறதில ஆர்வம் இருந்தது. “வார்த்தை சடுகுடு”வில் வித்தியாசமான முறையில் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினேன். தற்போது “இசைவெள்ளி” பாடலின் இடையிலோ, முடிவிலோ பாடுவேன். நேயர்கள் அந்த பாடலுடைய பல்லவியை பாட வேண்டும். இது தான் இசைவெள்ளி. இசைவெள்ளி எனக்கு நிறைய நேயர்களை உருவாக்கியது.

ஆர்.ஜேவாக நிலைத்திருக்க செய்யவேண்டியவை?
நான் எத்தனை புது ஷோக்கள் வழங்கினாலும், ஒரு முறைக்கு இருமுறை ஏதாவது தவறு இருக்கிறதா என திருப்பி கேட்டு பார்த்து சரி செய்வேன். 1 மணிநேர நிகழ்ச்சிக்கு குறைந்தது 2 மணிநேரமாவது செலவு செய்து நிகழ்ச்சிக்கான ஸ்க்ரிப்டை நானே தயார் செய்வேன்.

மறக்கமுடியாத அனுபவம்?
ஒரு முறை பஸ்ல போயிட்டு இருந்தப்போ ஆல் இந்தியா ரேடியோ ஓடிட்டு இருந்தது. எனக்கு முன்னாடி இருந்த சீட்ல இருந்த லேடி ஒருத்தர், பக்கத்தில இருந்தவர் கிட்ட, வாரா வாரம் வெள்ளிக்கிழமை “இசைவெள்ளி” நிகழ்ச்சில ஒரு பொண்ணு ரொம்ப அழகாப்பாடும், நீங்க கேளுங்கன்னு சொன்னாங்க. எனக்கு அப்படி ஒரு ஆச்சரியம், சந்தோசம் வந்தது. முகம் தெரியாதவங்களுடைய குரலை மட்டும் வைத்து நம்மை அங்கீகாரம் செய்றாங்க. இன்னமும் நம்முடைய இந்த பணியை சிறப்பா செய்யனும்னு தோனுச்சு.

சமூகத்திற்கு நீங்கள் கூற நினைப்பது?
இன்றைய இளைஞர்கள் எல்லா விஷயத்திலும் ஆர்வமாக இருக்கிறார்கள் அதே நேரத்தில் மறதியும் அதிகமாக இருக்கிறது. மரம் இல்லை, மழை இல்லைன்னு சொல்றதவிட நமக்கிட்ட இருக்கிறதை நாம பாதுகாத்திருந்தாலே, பக்கத்தில போய் கெஞ்ச வேண்டிய நிலைமை இருக்காது.

– சுபா ராஜேந்திரன்

N3

Leave A Reply

Your email address will not be published.