‘ஹலோ தமிழா’ கைலாஷ்-திருச்சி ஹலோ fm

அலைவரிசையின் ஆளுமைகள் - 11

0
1

காலையில எழுந்து ரேடியோ ஆன் பண்ற திருச்சி மக்கள் இவரோட வாய்ஸ் கேக்காம இருந்திருக்கமாட்டீங்க. மாற்றம் எப்போதும் நம்மிடம் தான் ஆரம்பிக்கனும்னு சொல்றாரு ஹலோ fm ஆர்.ஜே கைலாஷ்விக்கி…

உங்களை பற்றி?
நான் பொறந்து வளர்ந்தது எல்லாமே திருச்சி தான். ஸ்கூல் படிக்கறவரை ஒரு ஐடியாவும் இல்லாம தான் இருந்தேன். படிப்பில எனக்கு பெரிசா ஆர்வம் இல்லை. சிவானி இன்ஜினியரிங் காலேஜ்ல டிப்ளமோ படிச்சுட்டு இருக்கும்போது தான் மீடியா போகனும், வீ.ஜே ஆகனும் ஐடியா வந்தது. ஓகே, அதுக்கான வேலையை ஆரம்பிக்கலாம்னு நினைச்சு முதல்ல ஆர்.ஜேக்களோட பேஸ்புக் அக்கவுண்ட்ஸ் எல்லாம் கண்டுபிடிச்சு எப்படி ஆர்.ஜே ஆகனும், அதுக்கான வழி என்ன?, எந்தந்த திறமையெல்லாம் வேணும்னு கேட்டு கத்துக்கிட்டேன்.

2

நிறைய ஆர்.ஜே.ஸ் எனக்கு அதற்கான வழிமுறைகளை என்னோட மெசெஜ்க்கு ரெஸ்பான்ஸ் பண்ணி பதில் கொடுத்தாங்க. அப்பறம் என்னோட அம்மா சித்ரா, அவங்கதான் எனக்கு பெரிய சப்போர்ட், நான் சென்னைக்கு ஆடிசன் போகனும்னு சொல்லி 5 ஆயிரம் ரூபா காசு வாங்கிட்டு போய், செலவு பண்ண தெரியாம 3 நாள்ல திருச்சி வந்துட்டேன்.
சரி அப்போ அதுவரை வேற எதாவது வேலைக்கு போகலாம்னு நினைச்சு திருச்சில ஒரு கால் சென்டர்ல வேலை பார்த்தேன். கூடவே மீடியாக்குள்ள நுழைறத்துக்கான முயற்சியும் செஞ்சிட்டு இருந்தேன்.

ஹலோ fm-ல் வாய்ப்பு கிடைத்தது?
திருச்சில வேலை பாத்துட்டு இருக்கும் போதே ஹலோ fm-ன் ஆடிசன் வந்தது. ஆனா நான் நிறைய ஆடிசன் அட்டன் பண்ணி தோற்றதால, இந்த ஆடிசன்லேயும் நாம செலக்ட் ஆக மாட்டோம். சும்மா ஒரு அனுபவமா இருக்கட்டுமேன்னு நினைச்சு தான் வந்தேன், செலக்ட் ஆயிட்டேன். ஆனா மியூஸிக் மாஸ்டரா. இடையில ஆர்.ஜேஸ் யாராவது லீவ் எடுத்தா அவங்களோட ஷோவை நான் தொகுத்து வழங்குவேன். அப்பறம் ஆர்.ஜேவா ஹலோ தமிழா ஷோ பிரைம் டைம்ல பண்ண ஆரம்பிச்சேன். இப்போ ஆர்.ஜே ப்ளஸ் மியூஸிக் மாஸ்டர்.

4

“ஹலோ தமிழா” ஷோ பற்றி?
டீக்கடைல உக்காந்துகிட்டு மக்கள் பிரச்சனைகளை பத்தி புலம்பனும். அது அரசியலாக இருக்கலாம், அவங்களுடைய ஏரியால இருக்க நிறை, குறையா இருக்கலாம். ஹலோ fm மக்களுக்கான பிரச்சனைகளை கேக்க எப்போதும் செவி சாய்த்திருக்கும்.

திருச்சியின் மாற்றங்கள் பற்றி?
மாநகராட்சி ரொம்ப நல்ல மாற்றங்களை கொண்டு வந்துருக்காங்க. திருச்சில பல கடைகள்ல பிளாஸ்டிக் உபயோகம் இல்லாமல் இருக்கு. வீடுகள்ல கூட குப்பையை பிரிச்சு கொடுக்கறாங்க. பல தெருக்கள்ல குப்பை தொட்டி வந்தருச்சு. இதுவே ஆரோக்கியமான மாற்றம் தான்.

மாறவேண்டியது?
திருச்சியில எனக்கு எந்த குறைகளும் தெரியல. பொதுவாகவே அரசாங்கம் என்ன திட்டம் கொண்டு வந்தாலும், அதை மக்கள் தான் கடைபிடிக்கனும்.
பயன்படுத்துதலோடு மட்டுமே நம்முடைய கடமை முடியாது. அதை பராமரிக்கவும் செய்யனும். மாற்றங்களுக்கு நாம தான் முதல்ல பிள்ளையார் சுழி போடனும்.

-சுபா ராஜேந்திரன்

 

3

Leave A Reply

Your email address will not be published.