திருச்சி சூரியன் fm – சமத்துப் பொண்ணு தர்சினி

0
Business trichy

திருச்சி சூரியன்fmல “ரகசிய ரசிகை”, “இது எங்க ஏரியா” ஷோக்களை தொகுத்து வழங்கி, தற்போது யூத்களின் பல்ஸுக்கு “ரிலாக்ஸ் ப்ளீஸ்” ஷோ ஆர்.ஜே தர்சினியை நம்மதிருச்சியின் அலைவரிசை ஆளுமைகள் தொடருக்காக சந்தித்தோம்.

அதென்ன சமத்துப்பொண்ணு தர்சினி?
என்னோட பேரு தர்சினி. சமத்துப்பொண்ணு தர்சினின்னு சொன்னாத்தான் எல்லாருக்கும் தெரியும். எப்போதும் ரேடியோ பொறுத்தவரை வாய்ஸ் வச்சுதான் எல்லாருக்கும் தெரியவரும். நம்ம ஒரு முனைல இருப்போம், அவங்க ஒரு முனைல இருப்பாங்க, டி.வில வர வி.ஜேன்னா கூட நம்ம முகம் அவங்களுக்கு ஞாபகத்தில இருக்கும். அதனால் முதல்ல நம்ம பேரை அவங்க மனசுல பதிய வைக்கனும்ன்றதால , நானே என்னோட ஷோவோட ஆரம்பத்திலே “நான் உங்க சமத்துப்பொண்ணு தர்சினி”னுசொல்லி , இப்போ எல்லாருமே சமத்துப்பொண்ணு தர்சினின்னு கூப்பிட ஆரம்பிச்சிட்டாங்க.

ஆர்.ஜே வாய்ப்பு கிடைச்சது எப்படி?
சின்ன வயசுல எனக்கு டாக்டர் ஆகனும்ன்தான் என்னோட கனவு. ப்ளஸ்டூ ரிசல்ட்ல எனக்கு கட் ஆப் வரல, அதனால திண்டுக்கல்ல டீச்சர் டிரைனிங் ஜாயின் பண்ணிட்டேன். அதுக்கப்பறம் பெட்டவாய்தலை பக்கத்துல இருக்க சாந்தி சேவை ஸ்கூல்ல வேலை பார்த்தேன்.
மறுபடியும் பி.எஸ்.சி காவேரி காலேஜ்ல படிச்சுட்டு இருக்கும் போது தான் சூரியன் fm ஆடிசன் வந்தது. ஒகே கிளாஸ் கட் அடிக்கலாம்ன்னு தான் போனேன். கடைசி அப்ளிக்கேசன் வாங்கி கடைசி ஆளா ஆடிசன் அட்டன் பண்ணேன் . வாய்ஸ் நல்ல இருக்கு நீங்க ஆபீஸ் வந்துருங்கன்னு சொன்னாங்க.
ஆனா எங்க அப்பாவுக்கு பிடிக்கல, என் பொண்ணு இந்த வேலைக்கு வரல்லன்னு சொல்லதான் சூரியன் fm கூட்டிட்டு வந்தாங்க.
ஆர்.ஜே அபி மேம் தான் உங்க பொண்ணுக்கு இந்த வாய்ஸ் கிடைச்சது கடவுளோட ஆசீர்வாதம்ன்னு சொல்லி எங்க அப்பாவை ஒத்துக்க வச்சாங்க.
2011 பிப்ரவரி 14 ,”அன்புடன் சூரியன் fm” தான் என்னுடைய முதல் ஷோ. அடுத்து பிஷப் ஹீபர் காலேஜ்ல எம்.எஸ்.சி, எம்.பில் படிச்சிட்டே “செம்ம ரகள” ஷோ பண்ணேன். “லேடீஸ் கார்னர்” ஷோல தான் எனக்கு பெரிய டேர்னிங்க் பாய்ன்ட். இப்போ ரிலாக்ஸ் ப்ளீஸ்.

loan point

“சிவா மனசில சக்தி” படத்தில வர மாதிரி யாராவது கலாய்ச்சிருக்காங்களா?
அதலாம் நிறைய குதர்க்கமான கால்ஸெல்லாம் வரும், சங்கிமங் கின்ற பேர்ல கூட கால்வந்திருக்கு. எங்க தாத்தா இறந்துட்டாரு, வாழ்த்து சொல்லுங்கன்னு சொல்லுவாங்க.
எப்போதுமே ஒரு ஆர்.ஜேக்கு சமயோஜிதபுத்தி இருக்கனும், அதனால கொஞ்சம் சமாளிச்சடுவேன்.

nammalvar

மறக்கமுடியாத நினைவுகள்?
“இது எங்க ஏரியா”ஷோல நான் ஒரு யானைக்கதை சொன்னேன். சூசைட் பண்ணிக்க போன ஒருத்தரு அந்த கதையை கேட்டுட்டு வாழனும்ன்ற முடிவு பண்ணேன்னு சொல்லி ஆபிஸ்க்கு கால் வந்தது. அப்போதான் தர்சினி ஏதே உருப்படியா வேலை பாக்கிறா போலன்னு நினைச்சுக்கிட்டேன்.

web designer

உங்களுடைய பேவரேட் ஆர்.ஜேயாரு?
சுசிமாமி, கீதாமாமி அபிதான். நான் சூரியன்fmல வேலை பாக்கிறதுனால சொல்லல. அபி மேம்கே இது தெரியாது. பரபரன்னு வேலை பார்த்து, எல்லாரையும் அட்ராக்ட் பண்ணிடுவாங்க.

காதல் திருமணத்தின் மீது நம்பிக்கை இருக்கா?
லவ் மேரேஜ் பண்ணாத்தான் ஒருத்தரை ஒருத்தர் புரிஞ்சுக்க முடியும்னு கிடையாது. லவ் மேரேஜ் பண்ண நம்ம மட்டும் ஹேப்பியா இருப்போம். அரேஞ்ச்டு மேரேஜ் பண்ணினா நம்ம மொத்த பேமிலியே அதைக்கொண்டாடும்.

நம்முடைய ஷோவை எவ்வளவு பேர் கேக்கறாங்கன்னு எப்படி தெரிஞ்சுப்பீங்க?
200 பேர் ரேடியோ கேக்கறாங்கன்னா, அதுல ஒருத்தருக்கு தான் எஸ்.எம்.எஸ் பண்ணனும்னு தோனும். அதை வச்சுத் தான் கால்குலேட் பண்ணுவோம். வெளில போகும் போது டீக்கடை, பெட்டிக்கடைலலாம் நம்மளோட ஷோ கேக்றாங்கலானு பார்ப்போம்.

ஆர்.ஜேவாக நிலைத்திருக்க செய்ய வேண்டியவை?
ஒரு ஆர்.ஜே எதையுமே தெரியாதுன்னு சொல்லக்கூடாது, அவங்க எல்லாத்தையும் கத்துக்கனும். புதுபுது வார்த்தைகளை கத்துக்கனும். நம்பர் ஒன் ஆகறது ரொம்ப ஈசி, ஆனா அதை தக்க வச்சுக்கறது ரொம்ப கஷ்டம். பணம் சம்பாதிக்கறதுக்காக ஆர்.ஜேபணிக்கு வரக்கூடாது. எந்த ஒரு வேலையிலும் காதல் குறைஞ்சா அந்த வேலையை சரியாபார்க்க முடியாது.

-சுபா ராஜேந்திரன்

IAS academy

Leave A Reply

Your email address will not be published.