திருச்சியில் டாட்டூ டிரெண்டிங்

0
1

நம்ம ஊருல பழைய காலத்து பாட்டிலாம் கைல கால்ல நெத்திலன்னு பச்சைகுத்திருப்பாங்க. என்ன பாட்டி இது யாரோட பேருன்னு கேட்டா வெக்கபட்டுட்டே என் வீட்டுகாரரோடதுன்னு சொல்லுவாங்க. இன்னும் சில பேரு அண்ணா, எம்.ஜி.ஆர்னு அரசியல் தலைவர்கள் பேரையும் பச்சகுத்திருப்பாங்க. அந்த காலத்தில பச்சைகுத்தறது டிரன்ட்னா, இந்த காலத்துக்கு டாட்டூனு யூத்ஸ்லாம் ஸ்டெய்லா சொல்லறாங்க. ஷோ எந்த காலத்திலயுமே டிரண்ட் குறையாத டிசைனிங் ஆர்ட் தான் பச்சைகுத்தறது, அதாவது டாட்டூ டிசைன்ஸ்.


சரி அப்புடி என்னதாய்யா பண்றாங்க, கொஞ்சம் எட்டி பாத்துட்டு வருவோம்னு திருச்சி தில்லைநகர் 7வது கிராஸ்ல இருக்க ஹேத்தர் & ப்ரிஃக் பார்லர்ல பயங்கர பிசியா டாட்டூ போட்டுட்டு இருந்தவரை கொஞ்சம் டிஸ்டப் பண்ணி, எப்படின்னே உங்களுக்குள்ள இப்படி ஒரு திறமைன்னு கேக்க.

“எனக்கு சின்ன வயசில இருந்தே ஓவியம் வரையன்னா ரொம்ப பிடிக்கும். அதனால பெங்ளூர்ல டாட்டூ டிசைனிங் கத்துக்கிட்டேன், இப்போ இங்கேயே நிறையா பேர்க்கு டாட்டூ டிசைனிங் சொல்லியும் கொடுக்கிறேன், இங்க நிறைய காலேஜ் பசங்களும் பொண்ணுங்களும் வந்து டிசைன் போட்டுப்பாங்க, நிறைய பேர் அவங்களோட லவ்வரோட பேர டாட்டூ போட்டுப்பாங்க, டாட்டூல ரெண்டு டைப்ஸ், ஒன்னு பர்மனன்ட் டாட்டூ நாம சாகுறவர நம்ம ஒடம்போட ஒட்டி இருக்கும் , ரெண்டாவது டெம்ரவரி டாட்டூ, இது 1 மாசம் வரை தாக்கு பிடிக்கும்”ன்னு சொல்றாரு.

அய்யய்யோ அப்போ டாட்டூ போட்டா அழிக்கவே முடியாதா?!ன்னு நீங்க கேப்பீங்க… அதுக்கு லேசர் ட்ரீட்மென்ட் பண்ணா அழிஞ்சிடும், டாட்டூ ஓட அளவை பொறுத்து காசு செலவாகும், நிறையா பேரு லவ் பண்ணும் போது லவ்வரோட பேரை உன்னை நான் எவ்வளவு ஆழமா காதலிக்கறேன்னு காட்றதுக்காக டாட்டூ போட்டுட்டு கடைசில பிரேக் அப் ஆன உடனே அத அளிக்கனும் நினைக்கறாங்க. இதுல இன்னொரு ஆப்ஸன் ரொம்ப ஈசி, டாட்டூ மேலேயே அந்த பேரை மறைச்சு வேற டிசைன் போட்டுக்கலாம்ன்றாரு.

2

ஓகே…வேற என்னென்ன காரணத்துக்காக டாட்டூ போட்டுக்கறாங்க?
“Make-up” அழகுக்கு அழகு சேக்கற விஷயம் தான் இது. உதடு அழகா இருக்கனும் நினைக்கறவங்க உதடு வரைஞ்சிப்பாங்க, மறையாத பெரிய தழும்பை, கரும்புள்ளியை மறைச்சு டாட்டூ போட்டுப்பாங்க, ஏன் புருவம் கம்மியா இருக்கவங்க கூட அதே கலர்ல டாட்டூ போட்டு போவாங்க… டாட்டூ பொறுத்தவரை என்ன கலர்ல வேணாலும் நீங்க போட்டுக்கலாம்.

இதனால எதாவது சைட் எபக்ட் வருமா?

சைட் எபக்ட்ஸ்ன்னா?! சிலருக்கு ஸ்கின் அலர்ஜிஸ் வர வாய்ப்பிருக்கு. பச்சை குத்தினாதா காய்ச்சல் வரும் ஆனா டாட்டூ போடறதனால கொஞ்சமாதான் வலி இருக்கும், நரம்பைத்தொடாமலே தோலில் மட்டும் வரைவோம், ரத்தமும் வராது. ஒவ்வொருத்தருக்கும் புது ஊசி யூஸ் பண்றதால எந்த நோயும் பரவாது.

டிரன்டிங் வாழ்வில் நமது உணவும் சூழலும் நாளுக்கு நாள் மாறிவரும் நிலையில் இப்படியான புதுப்புது விஷயங்கள் புகுத்தப்பட்டாலும் தீர விசாரித்து மருத்துவர்களின் ஆலோசனைப்படி செயல்படுவது நல்லது.

– சுபா ராஜேந்திரன்

3

Leave A Reply

Your email address will not be published.