திருச்சி வானொலியில் பணிபுரியும் “சொற்சிலம்பம்” நக்கீரன்

அலைவரிசையின் ஆளுமைகள்-9

0
1

“பேரை கேட்ட உடனேயே, ஏதோ ஒரு வழுக்கைத்தலைக்கு சொந்தகாரர்தான் பேசறாருன்னு நினைச்சுருப்பாங்க, அப்படி இல்ல நான் ரொம்ப சின்ன பையன், உங்க வீட்டு பையன். வழுக்கைத்தலையாக இருந்தாலும் ஒன்னும் தப்பில்லயே… ஏன்னா வாய்ஸ்க்கு வயசில்ல”ன்னு சொல்லி பேச ஆரம்பிக்கிறார் ஆல் இந்தியா ரேடியோ ஆர்.ஜே நக்கீரன்.

நக்கீரன்…?
நான் நக்கீரன். தமிழ் பெயர், பழமையான பெயர். அப்பாவுக்கு தமிழ் பற்று அதிகம். 5வது வரை ரங்கம் சிற்றம்பலம் மெட்ரிகுலேஷன்ல படிச்சேன், “உனக்கு தமிழ் பேர்தான் வச்சிருக்கேன், மெட்ரிகுலேஷன்ல படிச்சாலும் தமிழ்லதான் பேசனும்”ன்னு சொல்லி வளத்தாரு.

ஸ்ரீரங்கம் ஆண்கள் மேல்நிலைப்பள்ளில தான் தமிழ் பேச்சு போட்டி முத்தமிழ் மன்றம்ன்னு தமிழை வளர்த்துக்க வாய்ப்பு கிடைச்சது.
நான் ரொம்ப படிக்கற பையன்லாம் இல்ல, போட்டிகளுக்கு போறேன்னு சொல்லிட்டு கிளாஸ் கட் அடிச்சிட்டு படத்துக்கு போறது, கொள்ளிடம் பாலத்துக்கு கீழ உக்காந்து அரட்டை அடிக்கறதுன்னு எல்லா பசங்கமாதிரி ஜாலியா இருந்தேன். அதே நேரத்தில வாழ்க்கையோட வழி இது தான்னு காமிச்சது ஸ்ரீரங்கம் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, இதுதான் வாழ்க்கை பயணிக்கிற விதம்ன்னு சொல்லிக்கொடுத்தது திருச்சி ஸ்ரீமத் ஆண்டவன் கல்லூரி. பி.சி.ஏ இளங்கலை முதுகலைன்னு எல்லாக்கலையும் அங்கதான் கத்துக்கிட்டேன்.


என்னுடைய காலடி படாத கல்லூரியே கிடையாதுன்னு சொல்லலாம், ஏன்னா நிறைய போட்டிகளில் கலந்துக்கிறதுக்கான வாய்ப்புகள் கல்லூரி மூலமா கிடைச்சது.

2013ல்லே என்னோட கல்லூரிக்காலம் முடிஞ்சாலும், இப்பவரை கல்லூரி விழாக்களுக்கு என்னை கூப்பிடுவாங்க, அதேபோல கல்லூரி நண்பர்களான சகோதரர்கள்கூடத்தான், இன்னிக்கு வரை நான் பயணிச்சிட்டு இருக்கேன்.

ஆர்.ஜே. ஐடியா எப்போ வந்தது?
சத்தியமா எனக்கு ஆர்.ஜே ஆகனும்னு ஒரு கனவும் இல்ல. உண்மையா சொல்லனும்னா, என் நண்பனோட லவ்வர் தான், “ அண்ணா ஆல் இந்தியா ரேடியோ ஆடிசன் வருது, நீங்களும் எனக்கு துணைக்கு வாங்க”னு சொல்லி அவங்களே டிடிலாம் எடுத்து கூட்டிட்டுப்போனாங்க.

2

முதல்ல இரண்டு சுற்றுகள்ள ஏனோ தானோன்னுதான் அட்டன் பண்ணேன், 3வது சுற்றுலதான் சரி இவ்வளவு தூரம் வந்துட்டு சும்மா போகக்கூடாது. அப்படி ஒரு வேலை செலக்ட் ஆகலேன்னா, இனி எந்த மேடைலையுமே ஏறக்கூடாதுன்னு முடிவு பண்ணேன். ஒரு வழியா செலக்ட் ஆயிட்டேன். ஆனா இப்போ இந்த வேலை பிடிச்சுத்தான் பாக்கிறேன்.

சினிமால வர மாதிரி சுவாரஸ்யமான நிகழ்வு எதாவது நடந்திருக்கா?
இருக்கு… என்னுடைய காதல் கதையே கொஞ்சம் சினிமாப்பாணி தான். அவங்க சொந்த ஊரு ஸ்ரீலங்கா படிக்கறதுக்காக திருச்சி வந்திருந்தாங்க. இங்க என்னுடைய ஷோ கேட்டுட்டு எனக்கு பேஸ்புக் மூலமா பிரண்ட் ஆனாங்க. அவங்க தான் முதல்ல காதல சொன்னாங்க. இப்போதைக்கு எங்க வீட்டுல எல்லாருக்கும் சம்மதம், இன்னும் சில வருடங்கள்ல கல்யாணம்.

ஆர்.ஜேக்கான தகுதிகள்?
ஆர்.ஜேன்னாலே முதல்ல நல்லா மொக்கை போட கத்துக்கனும், சம்மந்தமே இல்லாத விஷயத்தை சம்மந்தப்படுத்தி பேசனும், ஸ்கூல்லலாம் என்னைய
‘கே டி.வி. நான் ஸ்டாப் கொண்டாட்டம்’னு தான் கூப்பிடுவாங்க, யார் மனதும் புண்படாத வண்ணம் பேசனும்.

ஓய்வு நேரங்கள்ல என்ன செய்வீங்க?
என்னோட கல்லூரி சகோதரர்கள் ஒரு நடன அரங்கம் வச்சருக்காங்க, தாய் கிழவின்னு தான் என்னை கூப்பிடுவாங்க என்னா நான் தான் அங்க இருக்கவங்கல்லே பெரிய பையன். வெட்டியா இருக்க நேரத்தில நல்லா ஆட்டம் போடறது, எதாவது விளையாடறதுன்னு இருக்கும்.

அடுத்தது என்ன?
என்னுடைய இந்த பயணத்தில எனக்கு ஒரு சிறந்த பரிசு ஒண்ணு கிடைச்சிருக்கு, கண் தெரியாதவங்க கூட என்குரலை மட்டும் கேட்டுட்டு “ நீங்க என் சகோதரன் மாதிரி இருக்கீங்க நக்கீரன்”னு சொல்லி என் மேல நிறைய பாசமும் அக்கறையும் காட்றாங்க. அதைவிட மிக பெரிய பரிசு வேறு இல்லன்னு நினைக்கிறேன். அனாதை குழந்தைகளுக்கான ஸ்கூல் கட்டனும், தரமான கல்வியும் உணவும் அளித்து கூடவே தமிழ் வளர்க்கனும்.

-சுபா ராஜேந்திரன்

3

Leave A Reply

Your email address will not be published.