என்னையும் ஆட்டோகிராஃப் போட வச்சது ஹலோ fm

0
full

திருச்சி ஹலோ fmல் நிகழ்வு மேலாளராக நுழைந்து, ”கூர்கா குருசிங்”, ”பல்லாங்குழி” ஷோக்களின் மூலமாக தன்னை ஆர்.ஜேவாக அடையாளப்படுத்திக் கொண்டவர், தற்போது “தாறுமாறு தர்பார்” என்ற ஷோவை மாலை 6 முதல் 9 மணிவரை தொகுத்து வழங்கிக் கொண்டிருக்கும் ஆர்.ஜே கார்த்தியுடன் ஒரு சிறப்பு நேர்காணல்.

தங்களைப்பற்றி?
எனக்கு பூர்வீகம் மதுரை. என்னோட அப்பா ஆர்மி ஆபீஸர்ன்றதால ஸ்கூலிங்களாம் 5,6 ஊர்ல படிச்சேன். மதுரை எம்.ஐ.எஸ்.எஸ் காலேஜ்ல பி.எஸ்.சி.கம்ப்யூட்டர்சயின்ஸ் முடிச்சேன். எனக்கு ஊர் சுத்தறது ரொம்ப பிடிக்கும், வித்தியாசமான உணவுகளாம் தேடிபோய் சாப்பிடுவேன். நான் லவ்மேரேஜ்தான், என்னோட மனைவி வீ.ஜே.பூவிழி.

நீங்கள்ஆர்.ஜேவானதுஎப்படி?
அப்பாக்கு நான் ஆர்மீலதான் சேரனும் ஆசை, ஆனா எனக்கு அதுல பெரிசா விருப்பமில்ல. 2009ல நிகழ்வு மேலாளரா தேர்வாகினேன். ஹலோ fm வந்த புதுசுல, எனக்கு தமிழ் பேசத்தெரியும், ஆனா படிக்கத் தெரியாது. சகா சாரோட வழி நடத்தல்ல தான் ஆர்.ஜே வானேன்.

poster


உங்களது காதல் கதை பற்றி கொஞ்சம் சொல்லுங்களேன்?!
பூவிழி, அவங்களும் முதல்ல ஹலோfmலதான் வேலை பாத்தாங்க. அப்போதான் காதலாச்சு, புதிய தலைமுறை சேனல்ல கிச்சன் கேபினேட் ஷோ பண்ணிட்டு இருந்தாங்க. “அலைபாயுதே ஸ்டைல்தான்” – ரெசிஸ்டர் மேரேஜ். அவங்கவங்க வீட்ல இருந்தோம், பெரிய கலவரத்தில தான் கல்யாணமே நடந்துச்சு.

அதென்ன கூர்கா குருசிங்?
ஹலோ fmல என்னுடைய முதல்ஷோ கூர்கா குருசிங், நள்ளிரவு 12 மணி – 2 மணிக்கு, அந்த டைம்ல எங்க பஞ்சர்கடை இருக்கும், சாப்பாடுக்கடை இருக்கும்னு திருச்சிய பத்தி நிறைய சொல்லுவேன். ரயில்வே ஊழியர்கள், இரவு நேர பணியாளர்கள்லாம் இந்த ஷோல பேசுவாங்க. அன்றைக்கு நடந்த எல்ல விஷயங்களை பத்தியும் பேசுவோம்.

half 2

நீங்கள் பார்த்து வியந்த பிரபலங்கள் பற்றி?
நான் பார்த்து வியந்த பிரபலங்கள் பிரட்லி, வாலி, மாதவன், விக்ரம், கார்த்தி, பிரகாஷ்ராஜ், ஏ.ஆர்.முருகதாஸ்னு நிறையபேர் இருக்காங்க. ஊருல இருக்கப்போ இயக்குனர் கஸ்தூரிராஜாகிட்ட ரொம்ப கஷ்டப்பட்டு ஆட்டோகிராஃப்லாம் வாங்கியிருக்கேன். நமீதா மேமோட பெரியவிசிறி நானு, இன்டர்வியூ எடுக்க 8 மணிக்கு வர சொன்னாங்க 6 மணிக்கே போயிட்டேன். எல்லாருமே ரொம்ப ஜாலியா, எதார்த்தமா பேசுவாங்க.

உங்களுக்கு ரோல்மாடல் யாராவது இருக்காங்களா?
எனக்கு ரோல்மாடல் என்னுடைய அப்பா மனோகர், சகா சார் ரெண்டுபேருமே. எங்க எல்லாரையுமே வழி நடத்தி செல்ற ஒரு அருமையான தலைவர். நான் எப்போதுமே ரொம்ப பரபரன்னு இருப்பேன். ஹார்ட்வோர்க் எங்க அப்பாகிட்ட கத்துக்கிட்டேன், ஸ்மார்ட்வொர்க் சகா சார்ட கத்துக்கிட்டேன், கத்துக்கிட்டேஇருக்கேன்.

திருச்சிக்கும் உங்களுக்குமான தொடர்பு எப்படிப்பட்டது?
என்னோட சின்ன வயசில ட்ரெயின்ல வரும்போது அம்மா “இதான் உச்சிபிள்ளையார்கோவில், ரங்கம் பாத்துக்கோ”னு சொல்லுவாங்க. நான் நினைச்சு கூட பாக்கல அதே திருச்சிலதான் என்னோட வாழ்க்கைய நகர்த்த போறேன்னு. திருச்சி என்னோட ஊருதான்னு நான் சொல்லுவேன், திருச்சி மக்கள் பழக்கத்திற்கும் சரி, பாசத்திற்கும் சரி குறைச்சலே இல்லாதவங்க.

ஆர்.ஜேக்கான தகுதிகள் என்ன?
தன்னிச்சையான நல்லபேச்சுத் திறமைவேணும், தினமும் பேப்பர்படிக்கனும், முக்கியமா தமிழ் நல்லா பேசத் தெரிஞ்சிருக்கனும்.

ஹலோ fm பற்றி?
என்னை பாக்கிறதுக்காக திருச்சிக்கு என்னோட அப்பா வந்திருந்தாரு. நாங்க ஒரு ரெஸ்டாரன்ட் போயிருந்தப்போ, என்கூட ஒருபையன் ஆட்டோகிராஃப் வாங்கி, செல்பி எடுத்துகிட்டான். எங்க அப்பாவுக்கு அதை பார்த்து ரொம்பவே சந்தோஷம். ஆட்டோகிராஃப் வாங்கின என்னை, ஆட்டோகிராஃப் போட வச்சது ஹலோ fm தான்.

-சுபா ராஜேந்திரன்

half 1

Leave A Reply

Your email address will not be published.