உலக பெண்கள் தினம் (மார்ச் 8)

சாதனை பெண்கள்

0
Business trichy

சமூக சேவகர் நிர்மலா..

திருச்சி ராமலிங்க நகர் மக்கள் குறைகளை போக்க போராடி வென்று பல சமூக செயல்களுக்கு வித்திட்டவர் ஆங்கில இலக்கியத்தில் முதுகலைப்பட்டம் பெற்ற நிர்மலா. 52 வயதிலும் பல பள்ளி, கல்லூரிகளில் தன்னம்பிக்கை எழுச்சி குறித்தும், குழந்தைகள் வளர்ப்பில் ஏற்படும் சிக்கல்களை தீர்ப்பது குறித்து பேசி வருகிறார். கிட்டத்தட்ட கீதாஞ்சலியில் 54 பாடல்களை மொழி பெயர்த்து விட்ட நிர்மலா, முழு பகுதியையும் அவருடைய சொந்த கருத்துக்களையும் சேர்த்து வெளியிட இருக்கிறார். தனது இந்த பயணத்தை தன்னிச்சையாகவே தொடரப்போவதாக கூறுகிறார் நிர்மலா.

முன்னாள் மேயர் சுஜாதா

Image

திருச்சியின் முன்னாள் மேயர் சுஜாதா, ஹோலிகிராஸ் கல்லூரியில் இளங்கலை வணிகவியலும், அண்ணாமலை பல்கலைக் கழகத்தில் முதுநிலையும் முடித்தார். இவரது தந்தை சண்முகம் காங்கிரஸ் கட்சியில் இருந்தவர்.
தந்தையினைத் தொடர்ந்து தனது 18 வயதிலே யூத் காங்கிரஸ் தலைவராக இருந்தவர். திருச்சியில் இரண்டரை வருடங்களாக மேயராக இருந்த இவர், இந்தியன்
ஓவர்சீஸ் வங்கியின் இயக்குனராகவும் பணிபுரிந்தார். தற்போது தமிழக காங்கிரஸ் கமிட்டியின் மாநில துணைத்தலைவராக
உள்ளார்.

கோவன் தங்கை லதா

மக்கள் கலை இலக்கிய கழக கலைக்குழு உறுப்பினராக இருக்கிறார். சமூக மாற்றத்திற்காக பாடல்களின் மூலமாக விழிப்புணர்வு ஏற்படுத்தும் இவர் மகஇகவைச் சேர்ந்த கோவனின் தங்கையாவார். சத்யா என்பவரை திருமணம் செய்து 41 வயதாகிய இவருக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். தினம்தினம் போராட்டங்களிலும் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளிலும் கலந்து கொள்கிறார்.
“அதிகார வர்க்கம் முழுமையாக ஒழியவேண்டும், அதிகாரத்தை பொதுமக்கள் கையில் எடுக்க வேண்டும் “ என்று அயராது போராடிக்கொண்டிருக்கும் பெண்மணி.

துப்பாக்கி கேத்ரின்

சாதிக்க இனம், குலம் தேவையில்லலை. திறமை இருந்தால் போதும் என்கிறார் மீனவ சமூகத்தை சோ்ந்த துப்பாக்கி வீராங்கனை கேத்ரின் எஸ்தர்.

2015 ல் நடைபெற்ற மாநில அளவிலான துப்பாக்கி சுடும் போட்டியில் 8 பதக்கங்களை வென்றார். 2016 ல் 3 தங்க பதக்கமும் 1 வெண்கலமும் வென்றார். திருச்சியில் ‘ஆம் சுவிட்ச்’ என்னும் புதியரக துப்பாக்கியை வைத்து போட்டியில் பங்கேற்ற முதல் பெண் வீராங்கனை. கேத்ரினுக்கு திருச்சி ஹோலி க்ராஸ் கல்லூரி தேசிய மாணவர் படை இயக்குனர் விஜி, பிரிதிவிராஜ் தொண்டைமான், ராயல் புதுக்கோட்டை துப்பாக்கி சங்கம் போன்றோர் பெரும் பக்க பலமாய் இருக்கின்றனர்.

Rashinee album

கின்னஸ் ஜோதி

தொடர் ஓட்டத்தில் கலக்குகிறார் கரூர் மாவட்டம் பஞ்சம்பட்டி கிராமம் ராஜாலிங்கம் மகள் ஜோதி. 2015ல் நடைபெற்ற தேசிய அளவிலான 5000மீ தொடர் ஓட்டத்தில் 1 தங்கமும், 2 வெண்கலபதக்கமும் பெற்றேன். அடுத்தடுத்து தேசிய போட்டிகளில் பங்கேற்றவர் கலந்து கொண்ட எல்லா போட்டிகளிலும், தங்கமும், வெண்கலமும் பெற்றார். 2016ல் இந்திய அளவில் நடைபெற்ற ஓட்டபந்தய போட்டியில் வெண்கல பதக்கம் வென்றார். இவரின் பயிற்சியாளர் ராஜாமணி, தூய வளனார் கல்லூரி உடற்கல்வி ஆசிரியர் பிரேம் எட்வின் என்பது குறிப்பிடத்தக்கது.

சியர்ஸ் பியர்லின்

எம்.எஸ்.டபிள்யூ முடித்தவுடன் பாண்டிசேரியில் போதை தடுப்பு மையத்தில் பணியாற்ற வாய்ப்பு கிடைத்தது பியர்லினுக்கு. பெற்றோர்கள் இல்லாத, வாழ்க்கையை இழந்த குழந்தைகளுக்கு கல்வி பணி செய்து வந்தார்.
அவர்களின் திறமைகளை வெளிக்கொணர்ந்து அதற்கு ஏற்ற பயிற்சிகளை வழங்கினார். அதன்பிறகுதான் 2012ல் திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள “சியர்ஸ்” எனும் குழந்தைகள் பாதுகாப்பு திட்டத்தில் பணியாற்ற வாய்ப்பு கிடைத்தது. குழந்தைகளோடு பணியாற்றுவது தனக்கு முழு திருப்தி தருவதாக கூறுகிறார் பியர்லின்.

நம்பிக்கை பேராசிரியர் வசந்தி

திருச்சியில் தொழிலதிபரான முத்து நாராயணன்-விமலா குமாரி ஆகியோரின் 3வது மகள் வசந்தி. உணர்ந்து கற்றலும், புரிந்து கற்றலும் மட்டுமே மாணவர்களை இந்த சமுதாயத்திற்கானவர்களாக மாற்றும் என்கிறார். திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக சுற்றுச்சுழல் உயிர் தொழில்நுட்பத் துறையின் பேராசிரியர் முனைவர்.வசந்தி. தற்போது திடக்கழிவு மேலாண்மை பற்றிய ஆராய்ச்சியை நான் மேற்கொண்டு வருகின்றார். இந்த சமுதாயத்தில் ஒவ்வொரு மனிதனும் ஒரு நாளைக்கு 200 முதல் 600 கிராம் கழிவுகளை இந்தச் சமுதாயத்திற்கு தருகின்றனர். இந்த விகிதச்சாரம் 2025ல் பல மில்லியன் டன் கழிவுகளாக மாறும் என்கிறார்.

ஒலிம்பிக் சூர்யா

ஒலிம்பிக் போட்டியில் நிச்சயம் தங்கம் வெல்வேன் என்பதில் உறுதியாக இருக்கிறார் திருச்சி ரயில்வேயில் பணி புரியும் சூர்யா.
புதுக்கோட்டை கவிநாடுதான் பூர்வீகம். யூத் ஸ்போர்ட்ஸ் கிளப்’ என்ற பெயரில் பயிற்சி மையம் எனும் விளையாட்டு பயிற்சி மையம் நடத்தி வருகிறார்.
தெற்காசிய விளையாட்டு போட்டியில் 5,000 மீட்டரை 15 நிமிடம் 45.75 வினாடிகளில் ஓடியும், 32 நிமிடம் 39 விநாடிகளில் 10,000 மீட்டர் கடந்து சாதனை படைத்தார். இதன்மூலம் இந்திய வீராங்கனை சுனிதா ராணி மற்றும் பிரிஜாஹதரன் ஆகியோரின் சாதனைகளை முறியடித்தார்.

நம்பிக்கை ஜெனித்தா

திருச்சி பொன்மலைபட்டியில் வசித்துவரும் ஜெனித்தா(27). போலியோ பாதிப்பால் கால்கள், முதுகுத் தண்டு, ஒரு கை செயலிழந்த நிலையில் சர்வதேச செஸ் போட்டியில் பங்கேற்று சாம்பியன் பட்டம் வென்றுள்ளார். சுலோவேக்கியா நாட்டில் 12 நாடுகளை சேர்ந்த 40 பேர் பங்கேற்ற மாற்றுத் திறனாளிகளுக்கான உலக தனிநபர் செஸ் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்றார். இதுவரை ஜெனித்தா ஆன்ட்டோ 5 முறை தங்கம் வென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த முறை அவர் தங்க பதக்கம் பெற்று திரும்பிய போது மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா ரூ.25 லட்சம் பரிசு வழங்கினார்.

Ukr

Leave A Reply

Your email address will not be published.