‘போற்றி தாய்’ என்று தோள் கொட்டியாடுவீர்…

Let us worship women

0
1 full

முன்னாள் துணைவேந்தர் மீனா

பெண்கள் கல்வியில் சிறந்து விளங்க வேண்டும் என்ற குறிக்கோளோடு சிறப்புகள் வாய்ந்த இந்திரா காந்தி கல்லூரியில் முதல்வராக பணியாற்றி, கணினி துறையில் எல்லோரும் சிறக்க வேண்டும் என்ற கருத்தில் உறுதியாக இருந்து பல்வேறு பணிகளில் உள்ள பெண்களுக்கு கணினியை அறிமுகம் செய்தவர். புகழ்பெற்ற பாரதிதாசன் பல்கலை கழகத்தின் துணைவேந்தராக சிறப்பாக பணியாற்றி, பல்வேறு விருதுகளுக்கு சொந்தக்காரர். மாற்றுத் திறனாளிகள், பார்வையற்றோர் மற்றும் சுய உதவி குழுவினருக்கும் கணினி கல்வியை அறிமுகப்படுத்தியவர்.

பன்முகம் கொண்ட சல்மா

2 full

துவரங்குறிச்சியில் பிறந்தவர். கவிஞர் மற்றும் அரசியல்வாதியாக திகழ்கிறார். இஸ்லாமியராக பிறந்து, பல போராட்டங்களுக்கு பிறகு சமுதாய அங்கீகாரத்தை பெற்றவர். சலீம் ஜாஃபர், முஹம்மதுநதீம் என இரண்டு மகன்கள் உள்ளனர். பொன்னாம்பட்டி துவரங்குறிச்சி பேரூராட்சித் தலைவராகவும் இருந்துள்ளார். 2006ல் மருங்காபுரி தொகுதியில் தி.மு.க. சார்பில் போட்டியிட்டார். பல கவிதை நூல்களை எழுதியுள்ளார். தமிழ்நாடு சமூகநல வாரிய தலைவியாக, நியமனம் செய்யப்பட்டார். தற்போது சென்னையில் வசித்து வருகிறார். தி.மு.க. மகளிர்அணி பிரச்சாரக்குழு செயலாளராக பணியாற்றி வருகிறார்.

பெண் பயிற்சியாளர் ஞானசுகந்தி

பல மாணவர்களை விளையாட்டில் ஜெயிக்க உந்து சக்தியாக விளங்கும் தமிழகத்தில் மாணவர்களுக்கான முதல் பெண்பயிற்சியாளர் ஞானசுகந்தி அண்ணாவி.  திருச்சி புனித சிலுவை கல்லூரியில் இளங்கலை பொருளாதாரம் முடித்தவர். தமிழ்நாடு சார்பில் 400மீ தொடர் ஓட்டத்தில் வெண்கலப்பதக்கம் வென்ற இவர், விளையாட்டில் சாதிக்க வேண்டும் எனும் நோக்கத்தில் பெங்களூரில் உள்ள தேசிய விளையாட்டு கழகத்தில் பயின்று 2004ல் திருச்சி அண்ணா விளையாட்டு அரங்கில் உள்ள மாணவர்களுக்கான விளையாட்டு விடுதியில் பணியாற்ற சுகந்திக்கு வாய்ப்பு கிடைத்தது.

முற்போக்கு பேராசிரியை சிந்து

அனைத்து உலக மகளிர் தினம் குறித்து
ஆங்கில துறை உதவி பேராசிரியையும் இறகுகள் தொண்டு நிறுவனத்தின் திட்ட ஒருங்கிணைப்பாளர் சிந்து  பேசுகையில் வாழ்க்கையில் நாம் கற்றதை சமுதாயத்தினர்க்கு கற்பிக்க வேண்டும்.
அவ்வகையில் ஆதரவற்ற மாணவர்களுக்கு விளையாட்டு முறையில் ஆங்கிலம் கற்பிக்கின்றேன். ஞாயிறு அன்று மாணவர்களுக்கு விளையாட்டு மூலம் ஆங்கில கல்வியை எளிமையான முறையில் கற்றுக் கொடுக்கிறேன். இதில் ஆணென்ன பெண்ணென்ன அனைவரும் சமம் தான் என்றார்.

டாக்டர் ரொஹையா ஷேக்முகமது

‘மக்கள் சேவை என் பணி’ என மருத்துவத்திலும், அரசியலிலும் ஈடுபட்டு சேவையாற்றி வருகிறார் டாக்டர் ரொஹையா ஷேக்முகமது. சொந்த ஊர் துவரங்குறிச்சி. பெண் பிள்ளைகளை 8-ம் வகுப்புக்கு மேல் பள்ளிக்கு அனுப்பாத ஊர். தான் மருத்துவர் ஆக வேண்டும் என தந்தையிடம் அடம்பிடிக்க சென்னை ராமச்சந்திராவில் மருத்துவம் படித்தார். கடந்த 2011-ம் ஆண்டு உள்ளாட்சித் தேர்தலில் திருச்சி மாநகர மேயர் வேட்பாளராக ம.தி.மு.க சார்பில் போட்டியிட்டு 40 ஆயிரம் வாக்குகள் பெற்று வெற்றி வாய்ப்பை இழந்தவர். இவரின் தந்தை தான் இவர்கள் ஊரின் முதல் பொறியாளர்.

கணவரின் ஊக்கமே காரணம்…

சென்னையில் பி.காம் முடித்த காமினி, தற்போது திருச்சியில் 5 ஆண்டுகளுக்கு முன் பிரபல ஆங்கில பத்திரிக்கையில் விளம்பரப்பிரிவில் பணிபுரிந்தவர்.

தற்போது ஸ்ரீரங்கத்தில் சிஷ்டி எனும் விளம்பர ஏஜென்ஸி நடத்திவருகிறார். விளம்பரங்களை டிசைன் செய்வது, விளம்பரங்களுக்கான பின்னணி குரல் தருவது, லோக்கல் சேனல்களுக்கு விளம்பரங்களை பெற்றுத் தருவது போன்ற பணிகளை செய்து வருகிறார்.
இதனைப்பற்றி அவரிடம் கேட்டபோது “இந்த வெற்றிக்கு என்னுடைய கணவர் பாலாஜி தந்த ஊக்கம் தான் காரணம்’’ என்கிறார் காமினி.

எதிலும் புதுமை செய்யும் அமுதா

அமுதாசுப்பிரமணியன் – மதுரையை பிறப்பிடமாக கொண்டவர் அமுதா, குரு ஹோட்டலின் நிறுவனர் சுப்பிரமணியனை திருமணம் செய்து 33 ஆண்டுகளுக்கு மேலாக திருச்சியில் வசித்து வருபவர்.
அதிகம் படிக்காமல் இருந்தாலும் தனது நிர்வாக ஆளுமையில் சிறப்பாக குரு ஹோட்டலை நடத்திவருகிறார். “தமிழ்நாட்டில் சென்னை , மதுரை, திருச்சி என 7 கிளைகளைக்கொண்ட குரு ஹோட்டலின் வெற்றிக்கும் வளர்ச்சிக்கும் காரணம், எங்களது ஹோட்டல்களில் வீட்டு சுவையை தருவதும், எதிலும் புதுமை புகுத்துவதும் தான்” என்கிறார் அமுதா.

பிபிசி என் கனவு ‘ஷெர்லி தீபக்’

ஹோலிகிராஸ் காலேஜ்ல கன்சல்டன்ஸி,
பிஷப் ஹுபர் காலேஜ்ல பி.ஜி
ஸ்டூடண்ட்ஸ்க்கு ஜர்னலிஷம்
ப்ரொபசர், கன்சல்டண்ட், டிசைனர்,
ஈவண்ட் மேனேஜர் என பரபரப்பாக செயல்படுகிறார் ‘ஷெர்லி தீபக்’. ஆனால்,
இன்னும் பிபிசியில போய் நியூஸ் வாசிக்கிறதுதான் தன் கனவு என்கிறார்.
மேலும், ‘சென்கா’, m4c (மீ்டியா ஃபார் மீடியா கம்யூனிட்டி பவுண்டேஷன், நியூடெல்லி)-ல கன்சல்டன்ட் ஆகவும் ‘காமன்வெல்த் ஆஃப் லேர்னிங் கனடா’-ல இன்டர்நேஷனல் கன்சல்டண்ட் ஆகவும் இருக்கிறார்.

‘யுகா’ அல்லிராணி

பெண்களுக்கான பாதுகாப்பு மற்றும் உரிமைகளுக்கான அமைப்பாக “யுகா” என்ற அமைப்பை துவங்கி நடத்தி வருகிறார் அல்லிராணி. சமுதாயத்தில் தங்களுடைய பெற்றோர்களை சாலையோரங்களிலும், முதியோர் இல்லங்களிலும் விட்டுச் செல்வதை எதிர்க்கும் இவர், குழந்தைகளுக்கு பெற்றோரின் சரியான வழிகாட்டுதலே நாளை நல்ல சமுதாயம் உருவாக வழிவகுக்கும் என்கிறார். சமுதாயம் சார்ந்த பல விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறார். பெண்களுக்காக பெண்களே முன் நின்று நடத்தும் ஒவ்வொரு நிகழ்ச்சியையும் நடத்த வேண்டும் என்பதே யுகாவின் நோக்கம் என்கிறார்.

3 half

Leave A Reply

Your email address will not be published.