கண்களே பேசட்டும்…

0
1 full

பெண்களின் நாணம் முதல் ஆண்களின் வீரம் வரை தெள்ளத் தெளிவாக அவர்களின் கண்களைப் பார்த்தே தெரிந்து கொள்ளலாம். ஆனால் அந்த கண்களை கண்ணாடி கொண்டு பேச விடமால் செய்கிறோம்.
துள்ளித் திரியும் இளம் பருவக் காலத்தில் எந்தவித இடையூறும் இன்றி சுதந்திரமாக வாழ ஆசைபடுகிறோம். இந்த சுதந்திரத்தை உடைக்கும் விதமாக ஒரு சிலர் இளம் பருவத்திலேயே கண்களின் தூரப்பார்வை குறைபாடு காரணமாக கண்களுக்கு கண்ணாடி அணிகின்றனர்.


தூரப்பார்வை குறைபாட்டுக்கு கண்ணாடி தான் தீர்வு என்று நினைக்கிறோம். இதனால் கண்ணாடியை அணிந்து கொண்டு பல இன்னல்களை மேற்கொள்கிறோம். உதாரணமாக விளையாட்டுத் துறையிலும், நண்பர்களுடன் வெளியே செல்லும் போதும், வேலை தேடி நேர்முக தேர்வுக்கு செல்லும் போது பெண்களாக இருந்தால் திருமணத்தின் போதும் கண்ணாடி அணிந்து இருந்தால் அவர்கள் பல இன்னல்களை சந்திக்கின்றனர்.

நவீன கால நிலையில், அதி நவீன தொழில் நுட்பத்துடனும் அறுவை சிகிச்சை இல்லாமல் லேசர் என்ற ஒளியின் மூலம் குறுகிய கால நிலையில் சரி செய்யும் முறையான LASIK சிகிச்சையை நம் திருச்சியில் உள்ள வாசன் கண் மருத்துவமனையில் சிறப்பாக செய்து வருகின்றனர்.

2 full

LASIK என்றால் என்ன?
Laser Assisted In Situ Keratomileusis என்பதன் ஆங்கில முதலெழுத்தின் சுருக்கமேயாகும். அதாவது லேசர் என்ற சீரொளியை நம் கண்ணில் கருவிழியில் செலுத்துவதன் மூலம் கண்களின் தூரப்பார்வை குறைபாடு சரி செய்யப்படுகிறது.

இச்சிகிச்சை 18 வயது முதல் 40 வயது வரை உள்ளவர்களுக்கு செய்யப்படுகிறது. இதற்கு முதலில் நம் கண்களின் கருவிழி சோதனை, பிறகு கண்ணில் உள்ள பார்வை நரம்புகள் சோதனையை செய்கின்றனர். இவை இரண்டும் நல்ல நிலையில் இருப்பின் நாம் LASIK சிகிச்சையை செய்து கொள்ளலாம்.

அனைவருக்கும் பொருந்துமா?
இது அனைவருக்கும் பொருந்தாது. ஏனெனில் கண்ணின் கருவிழி சோதனை செய்யும் போது அதில் உள்ள குறைபாடுகள் மிக தெளிவாக தெரியும். இச்சோதனையின் முடிவில்தான் இவர்கள் LASIK சிகிச்சைக்கு பொருத்தமானவர்களா எனத் தெரியும்.

இதற்கு குறைந்த கால அளவு ஓய்வு போதுமானது. வேறு எந்தவித கட்டுப்பாடும் தேவையில்லை. ஓய்வு என்பது கூட கண்களுக்கு அதிக வேலை கொடுக்காமல் இருப்பதுதான்.

இனியாவது நாம் நம் கண்களை பேச விடலாமே…

3 half

Leave A Reply

Your email address will not be published.