சாதனைப்பெண்கள்

ஊனத்தை வென்ற கிருத்திகா
சிறு குழந்தையாக இருந்த போது வந்த காய்ச்சலால் தன் கால்களின் நடக்கும் சக்தியை இழந்த கிருத்திகா பாஸ்கரன் திருச்சி பிஷப் ஹீபர் கல்லூரியில் பி.சி.ஏ., எம்.எஸ்.சி. முடித்துள்ளார். தன்னால் தனியாக நடக்க முடியாமல் போனதாலேயே தன்னுடைய மருத்துவம் படிக்க வேண்டும் என்ற கனவு சிதைந்து போனாலும் விடாமுயற்சியால் தற்போது இணைய தள வடிவமைப்பாளராக இருக்கிறார்.
அவர் படிக்கும் போதும், தற்போது பணி புரியும் போதும் யாரேனும் தன்னை தூக்கி வந்து விட்டு செல்ல வேண்டும் என்ற நிலையிலேயே இருப்பவர். இருந்து மனம் தளராமல் தான் படித்த கல்லூரியிலேயே தற்போது பணியில் உள்ளார். ஒருவரின் கனவுகளையும் விருப்பத்தையும் புரிந்து கொள்ளும் குடும்பம் கிடைத்தால் எப்போதும் மகிழ்ச்சிதான் என்கிறார்.
முன்மாதிரி ஆளுமை தமிழ்…

கணவர் ஒரு எச்.ஐ.வி. நோயாளி. தனது முதல் பெண் குழந்தைக்கு எச்.ஐ.வி தொற்று. இரண்டாவது குழந்தை பிறந்து 11வது நாளில் கணவர் இறந்தார். கணவர் இறந்த 30வது நாளில் இரண்டாவது குழந்தையும் இறந்தது. தமிழ்நாடு மாநில எய்ட்ஸ் கட்டுப்பாடு சங்க ஆலோசகராக பணிபுரிந்து திருச்சி மாவட்ட எச்.ஜ.வி உடன் வாழ்வோர் கூட்டமைப்பை (NPT) ஏற்படுத்தி உள்ளார்.எச்.ஐ.வி ஆண்கள் மற்றும் பெண்கள் மறுமணம் செய்ய விரும்புபவர்களுக்கு சிகிச்சையினை மேற்கொள்ள கூறி, பெற்றோர் – சேய் மேவா திட்டம் குறித்து விளக்கி 27 எச்.ஐ.வி தம்பதியினர்க்கு திருமணம் நடத்தி, அவர்கள் ஆரோக்கியமான குழந்தையினை பெற்றெடுத்துள்ளனர். திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகம் மகளிரியல்துறை “முன்னோடி பெண்மணி’’ விருது வழங்கி கௌரவித்தது.

டெக்னி கெமி சசிகலா
கட்டுமான துறையில் உள்ள பாசிடிவ், நெகடிவ் எல்லாவற்றையும் 3 பொறியாளர்களை வைத்து சமாளித்து கட்டுமான பணிகளை செய்து வருகிறார் டெக்னி கெமி நிறுவனத்தின் இயக்குனர் சசிகலா.
இவரின் நிறுவனத்தின் தொழிற்சாலையில் 25 பெண்களுக்கு மேல் பணிபுரிகின்றனர். நிறுவன தயாரிப்புகளான கெமிக்கல் குறித்து ஆரம்பத்தில் தடுமாறிய இந்நிறுவனத்தை தன் தொடர் முயற்சியாலும், திடமான நம்பிகையாலும் கட்டமைத்திருக்கிறார் சசிகலா. மார்க்கெட்டிங் ஊழியர்கள் பற்றாக்குறையாலும் சரியான மார்க்கெட்டிங் ஊழியர்கள் கிடைக்காமல் தடுமாறிய போது கட்டிடம் கட்டுமானம் குறித்த ஆர்வமிகுதியால் தானே சொந்த முயற்சியில் தங்களது நிறுவன தயாரிப்புகளை மார்க்கெட்டிங் செய்து உயர்த்தியிருக்கிறார் சசிகலா.
மருத்துவர் ரமணி தேவி
மருத்துவர்களே நோயாளிகளிடம் அதிகமாக பேசுங்கள் என்கிறார் மகப்பேறு மருத்துவர் ரமணிதேவி. திருச்சியில் முதல் முதலாக மகளிர் மருத்துவர்கள் சங்கத்தை துவங்கி செயல்படுத்தி சிறந்த சங்கத்திற்கான விருதை 5 முறை பெற்றுத்தந்துள்ளார். இந்திய மருத்துவ சங்கத்தில் 2 வருடங்கள் செயலாளராக இருந்ததோடு, அனைத்திந்திய மருத்துவ சங்கத்தில் சிறந்த செயலாளா் என்ற விருதையும், தமிழ்நாடு மருத்துவ சங்கத்தில் தலைவராக பணியாற்றி மாநில அளவிலான சிறந்த மருத்துவ சங்க தலைவர் என்ற விருதும் பெற்றுள்ளார். ஒவ்வொரு கணவனும் தங்கள் மனைவிக்கு விலை மதிக்கமுடியாத பரிசு கொடுக்க வேண்டும் என்று நினைத்தால் மனைவியை முழு உடல் மருத்துவ பரிசோதனைக்கு அழைத்து செல்லுங்கள் என்கிறார் ரமணி தேவி.

வழக்கறிஞர் ஜெயந்திராணி
தனது தந்தைக்கு இறுதிச்சடங்கு செய்து புரட்சி செய்தவர் வழக்கறிஞர் ஜெயந்தி ராணி. சேலத்தில் விவசாய குடும்பத்தில் பிறந்தவர். கல்லூரியில் பயிலும்போது, ‘எத்திராஜ்’ பெண்கள் கல்லூரியில் தேர்தலில் போட்டியிட்டு துணைத் தலைவராக (Vice-Chairman) வெற்றிபெற்றவர். றேன். ‘PARENTS TRUST’ என்ற அமைப்பை ஏற்படுத்தி வளர் இளம் பருவ மாணவிகளுக்கும், முதியவர்களுக்கும், பெண்களுக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்திக் கொண்டிருக்கிறார். குழந்தைகளை குழந்தைகளாக இருக்க விடுங்கள்.. குழந்தைகளோடு அதிகமாக பேசுங்கள்… வேலை, பணம், தொழில், டிவி என்று நேரம் செலவிடும் போது, குழந்தைகளுடன் செலவிடும் நேரம் எவ்வளவு என்று எண்ணிப் பார்க்க வேண்டும் என்றும் குழந்தைகளின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்க வேண்டும் என்கிறார்.
ஆரோக்கிய அரசி செல்வி
மண்மனம் மாறாத ஆரோக்கிய உணவு வகைகள் தயாரிப்புடன் உருவானது ” செல்லம்மாள் மண் பானை உணவகம்”. இதன் உரிமையாளர் செல்விஆடம்பரத்தை விடுத்து ஆரோக்கியத்தில் ஆர்வம் கொண்டு மண்பாண்டங்களிலேயே சமைத்து குட்டி குட்டி மண் குடுவையிலே உணவு பரிமாறுகிறார். பழமையின் பக்குவப் புரிதலைக் கொண்டவர் இவர், நம் இளம் தலைமுறையினர் பலரும் பார்த்திராத பாரம்பரிய அரிசிகள், சிறுதானிய வகைகளை சமைப்பவர். தன் உணவகத்தில் பெண்களை மட்டுமே பணியமர்த்தியிருக்கிறார். உணவே மருந்து – என்ற கருத்தில் சற்றும் மாறாமல் பஃபே சிஸ்ட உணவு முறையையும் புகுத்தி புதுமை படைத்திருப்பவர். பாரம்பரிய உணவின் மீது உள்ள ஆர்வம் பல கஷ்டங்களை தகர்த்தெறிந்திருக்கிறது என்கிறார் செல்வி.
சாதித்த தமிழ்செல்வி
தான் விளைவித்த விளைபொருட்களை சந்தைப்படுத்தி சாதித்தவர் ஈரோடு மாவட்டம் அந்தியூர் தாலுக்கா கொண்டயம்பாளையம் கிராமத்தை சேர்ந்த தமிழ்செல்வி. ஆண்டு லாபம் மட்டும் 13 லட்சம். விவசாயம் நஷ்டமடையக் காரணம் திட்டமிடாததும், விளைபொருட்களை சந்தை படுத்தாததுமே என்கிறார்.
காளான் பயிர் செய்து தானே நேரடியாக வாடிக்கையாளர்களை சந்தித்து விற்றதின் மூலம் தினமும் ரூ.400/- கிடைத்த நிலையில், தற்போது அதிக அளவில் உற்பத்தி செய்யும் அளவுக்கு லாபம் கிடைக்க கூடியதாக இருந்ததால், தினமும் பல ஆயிரம் ரூபாய் லாபம் ஈட்டுகிறார். சரியான திட்டமிடல், மிகக்குறைந்த செலவில் பயிரிடுதல், அதிக உழைப்பு, சிரமம் எடுத்து தானே விற்பனை செய்தல் ஆகியவையே தமிழ்செல்வியின் வெற்றிக்கு இலக்கணமாக திகழ்கிறது.
மாணவி சந்திரலேகா
திருச்சி தேசியக்கல்லூரி மாணவி சந்திரலேகாவின் சொந்த ஊர் கடலூர் மாவட்டம் பண்ருட்டி. மூன்றாமாண்டு ஆங்கிலம் படித்துக் கொண்டிருக்கிறார். 6 ஆம் வகுப்பு படிக்கும் போது கடலூர் மாவட்ட அளவிலான 100 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் தங்க பதக்கம் வங்கியதுதான் முதல் வெற்றி. அதற்கு பிறகு ஏற்பட்ட தன்னம்பிக்கையால் சமீபத்துல 2017 நவம்பர் மாதம் சீனியர் ஓபன் நேசனல் போட்டியில் வெள்ளி பதக்கம் பெற்றார்.
அந்தப் போட்டியில் ஒலிம்பிக்கில் கலந்து கொண்ட வீராங்கனைகளும் கலந்து கொண்டார்கள் என்பது சிறப்பு. தன்னால் என்றாவது ஒரு நாள் கண்டிப்பா இந்தியாவுக்காக ஒலிம்பிக்கில் கலந்து கொண்டு பதக்கம் வெல்வேன் என்கிறார். வாழ்த்துவோம் வருங்கால தங்க மங்கையை. வாழ்த்துகள்.
டேக்வான்டோ பரணி
இந்தியாவிற்குள் ஆக்கிரமித்த விளையாட்டுகளில் டேக்வான்டோவும் ஒன்று. இந்த விளையாட்டில் கடந்த 10 வருடங்களாகத் தொடர்ந்து தங்கப்பதக்கம் பெற்றுவரும் பரணி தற்போது பயிற்சியாளராகவும் பலரை உருவாக்கி வருகிறார். கடந்த 2000ம் ஆண்டு நடைபெற்ற ஒலிம்பிக்கில் முதன்முதலாக தமிழக விடுதி அளவிலான போட்டியில் கலந்து கொண்டு வெள்ளிப்பதக்கத்தை வென்ற இவர், மண்டல அளவிலான போட்டி, குடியரசு தினவிழா, பாரதியார் விளையாட்டு போட்டிகளிலும் பதக்கம் வென்றார். கடந்த வருடம் மாநில அளவிலான போட்டியில் தங்கம் வென்றார். இந்தாண்டு மாநில அளவிலான போட்டியை தவிர மற்ற எல்லாப் போட்டிகளிலும் பங்கேற்று பதக்கம் வென்றார். ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்பது தான் என்னுடைய நீண்ட நாள் இலக்கு என்கிறார்.
