சாதித்த பெண்கள்

0
1 full

தேனி வளர்க்கும் ஜானகி..

திருச்சி ஸ்ரீரங்கத்தை சேர்ந்த பட்டதாரி ஜானகி. இளங்கலை கணித துறையில் படித்துவிட்டு தனக்கு சொந்தமான நிலத்தில் தேனீ வளர்ப்பை ஆயிரம் ரூபாயை முதலீடாக வைத்து சிறிய அளவில் துவங்கினார். மாதத்திற்கு 1.5 லிட்டர் தேன் எடுக்க முடியும். மழை காலங்கள் தவிர 3 மாதங்கள் மட்டுமே அதிகமாக தேனீக்களை உற்பத்தி செய்கிறார். விவசாய மற்றும் சுய உதவி குழுக்கள் கண்காட்சிகளில் தனது தயாரிப்புகளை விற்பனை செய்கிறார். பல மருத்துவர்கள் இவரிடம் தேன் வாங்கும் வாடிக்கையாளர்களாக உள்ளனர்.

சிலம்பாட்ட சுபாஷினி

2 full

திருச்சி பாலக்கரை செங்குளம் காலனியை சோ்ந்தவர் சுபாஷினி (21). தற்போது திருச்சி சட்டகல்லூரியில் படித்து வருகிறார். 2011ஆம் ஆண்டு 10ஆம் வகுப்பு படித்து கொண்டிருந்த போது ஆசிய அளவிலான சிலம்பாட்ட போட்டியில் 1 வெள்ளி, 3 வெண்கல பதக்கங்களை பெற்றார். அடுத்ததாக 2013ஆம் ஆண்டு தமிழ்நாடு சிலம்பாட்ட கழகம் சார்பில் ஆந்திர மாநிலம் குண்டூரில் நடைபெற்ற அகில இந்திய சிலம்பாட்ட போட்டியில் பங்கேற்று 1 வெள்ளி பதக்கம் பெற்று உலக போட்டிக்கு தோ்ந்தெடுக்கப்பட்டார்.

போராடி வென்ற துர்கா

திருச்சி அ.தி.மு.க முன்னாள் துணைமேயரும், அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் மரியம்பிச்சையின் மகனுமான ஆசிக் மீரான் என்னுடன் தனிக்குடித்தனம் நடத்தும்படி சொல்லுவதை நம்பத் தயாராக இல்லை, தன்னை ஆசிக் ஊரறிய திருமணம் செய்துகொள்ள வேண்டும் என வழக்கு தொடர்ந்து குற்றவாளிகளுக்கு சிறைத் தண்டனை பெற்று தந்தவர். பாதிக்கப்பட்ட பெண் தகுந்த ஆதாரங்களுடன் கடைசி வரை பேராடினால் நீதி கிடைக்கும் என்பதற்கு துர்கா மாதிரி பெண்களே சாட்சி என்றார்.

சுசிமாமி அபி

அபிராமி. பிறந்தது திருவாரூர். பி.காம் முடித்துவிட்டு எம்.பி.ஏ படிக்கும் போது “ஆல் இந்தியா ரேடியோவில் (ALL INDIA RADIO)” நடைபெற்ற வாணி சான்றிதழ் வகுப்பில் தேர்ச்சி பெற்று பகுதி நேர அறிவிப்பாளராக 2004-2008ம் ஆண்டு வரை வேலை. ஹலோ fm-ல “வணக்கம் திருச்சி” ஷோவில் நிறைய சமூக பிரச்சனைகளை பேசினார். அதன் விளைவாக அதிகாரிகளிடமிருந்தும் பாராட்டுக்கள். கல்வியும், உணவும் ஒரு மனிதனின் அத்தியாவசியமானது என்கிறார். வாழ்த்துகள்…

அவசர கோழி அருணா

பிறந்தது திருச்சி. இப்போ ஹலோ fmல ஆர்.ஜே. முதலில் ஆல் இந்தியா ரேடியோல பகுதி நேர அறிவிப்பாளர். பிறகு 2009ல் ஹலோ fmல முழு நேர அறிவிப்பாளர். ‘காவேரி தென்றல்’, ’அவசரகோழி 008’. தன்னுடைய குடும்பத்திற்காக செய்ய வேண்டிய கடமைகள் முடிந்தவுடன், நான் இயக்குனராக பணியாற்ற ஆயத்தமாகப் போவதாக சொல்கிறார். அதற்கான வேலைகளை விரைவில் தொடங்குவேன் என்கிறார். மணிரத்னம் படம் மாதிரி உயிருள்ள காதல் கதைகளை இயக்கனுமாம்.

பார்வையை வென்ற அப்ரின்சிபானா

21 வயதே ஆன அப்ரின்சிபானா பிறவியிலே பார்வையற்றவர். கும்பகோணத்தைச் சேர்ந்த இவர் இளங்கலை ஆங்கிலம் முடித்தவர். திருச்சி என்.ஆர் ஐ.ஏ.எஸ் அகாடமியில் பயின்று டிஎன்பிஎஸ்சி தேர்வில் 196 மதிப்பெண்கள் பெற்று தற்போது திருவண்ணாமலை மாவட்டத்தில் நிலஅளவையாளர் பணிக்காக தேர்வாகியுள்ளார்.
தன்னைப்போல உள்ளவர்கள் ஊதுபத்தி விற்று, பாட்டு பாடி சம்பாதிப்பதை விட்டு இது போன்ற அரசு தேர்வுகளை எழுதி வெற்றி பெறவேண்டும் என்பதே தனது விருப்பம் என்கிறார்.

திருநங்கை கஜோல்

சமூகம் தன்னில் அள்ளித்தெளித்த வார்த்தைகளை அழகாய் மாற்றிய அழகுக்கலை நிபுணர் இவர். புன்னகையான முகம் தன்னில் பெண்மைக்கான அத்தனை உணர்வுகளையும் புதைத்து வைப்பவர்.தன்னிலை மாறி பெண்நிலையை கெளரவிக்க காலமெல்லாம் பாடுபடும் போராளி இவர். தன் சுய உழைப்பில் முன்னேறியவர். சுயமதிப்பை இழக்காத பணிகளை செய்பவர். திருச்சியில் திருநங்கைகளுக்காக SAFE என்ற அமைப்பைத் தொடங்கி செயல்படுத்திக்கொண்டுவருபவர்.

நிர்வாக இயக்குநர் மரிய புளோரா

திருச்சி சத்திரம் பேருந்து நிலையத்திலுல்ள ஹோட்டல் சம்பத்-தின் நிர்வாக இயக்குனர் மரியா புளோரா. கணவர் சம்பத் பொறியாளர். தங்களுடைய குடும்பத்தில் ஆணுக்கு பெண் நிகர் தான் என்கிறார். ஹோட்டல் நிர்வாகம் செய்வது பெண்களுக்கு மிக எளிதான ஒன்று என்றும், உணவகம், தங்கும் விடுதி நடத்துவது சவாலானது. உணவகத்தில் அறுசுவை உணவு வழங்குவது போட்டி மிகுந்த காலத்தில் பெரும் சவால் தான். நல்ல செயலும் சிந்தனையும் இருந்தால் வாழ்வில் வெற்றி பெறலாம் என்கிறார்.

விழிப்புணர்வு ஏற்படுத்தும் சாந்தி

அன்றாட வாழ்வில் இருக்கும் அறிவியல் குறித்து சாமானியர் முதல் சாதனையாளர் வரை விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார் தமிழ்நாடு அறிவியல் இயக்க மாநில இணைச்செயலர் சாந்தி. 21 ஆம் நூற்றாண்டில் விஞ்ஞான தொழில் நுட்பத்தை பயன்படுத்தினாலும் சகுனம் பார்ப்பது இன்றளவும் தொடரத்தான் செய்கிறது என்கிறார். அனைத்து நிகழ்விலும் அறிவியல் எப்படி செயலாற்றுகிறது என்பதை மாணவர்களுக்கு எடுத்துரைத்தும் பாலினம் சமத்துவம் என்பது கேள்விக்குறியாகத்தான் உள்ளது என்கிறார்.

 

 

 

3 half

Leave A Reply

Your email address will not be published.