கண்ணீர் வறட்சி நோய்

0
Full Page

கண்ணீர் பசை வறட்சி (Dry Eye Syndrome) என்ற கண் நோய் சில ஆண்டுகளுக்கு முன்பு வரை அபூர்வமாக வரக்கூடிய நோயாக இருந்தது. ஆனால், கணினி பயன்பாடு, ஸ்மார்ட்ஃபோன் என்ற கைப்பேபசி பயன்பாடு, அதிகநேரம் குளிரூட்டப்பட்ட அறையில் இருப்பது, அதிக காற்றுமாசு ஆகிய காரணிகளால், இக்கண் நோய் தற்போது அதிகளவில் காணப்படுகிறது. கண்சிவத்தல், கண்அரிப்பு, உறுத்தல்ஆகியவையேஇந்நோயின்அறிகுறிகள்.

அதிக நேரம் கணினியை உபயோகப்படுத்தும் போது, கண்களில் உள்ள கண்ணீர் ஆவியாகப் (Evaporate) போவதால், (அதாவது கண்களை நிமிடத்திற்கு 20 முறை கண் சிமிட்டும்படி இருப்பது, கணினி, கைப்பேசி உபயோகப்படுத்தும் போது, கண் சிமிட்டல் குறைகிறது). கண்ணில் கண்ணீர் வறட்சி ஏற்படுகிறது.

அதுமட்டுமல்லாமல், குளிரூட்டப்பட்ட அறையில் அதிகநேரம் இருப்பதாலும் கண்களில் நீர்பசை குறைந்து வறட்சி ஏற்படுகிறது.
மேலும், காற்றில் உள்ள மாசு காரணமாக, அதாவது வாகனப்புகை இந்நோய் அதிகளவில் பாதிப்பை உண்டாக்குகிறது. இரு சக்கர வாகனங்களில் பயணிப்போர் கண்களை பாதுகாக்கும் விதமாக முழு தலைக்கவசமோ, கண்களுக்கு கண்ணாடியோ (Coolers) அணிந்து கொள்வது நல்லது. கணினி மற்றும் பெரிய கைபேசி உபயோகிப்போர் 20/20 விதியை கடைபிடிக்கவேண்டும்.

Half page

அதாவது, கணினி, மடிக்கணினி, கைபேசி உபயோகப்படுத்தும் போது 20 செ.மீ தூரத்தில் இருக்கவும், 20 நிமிடங்களுக்கு ஒருமுறை 20 வினாடிகள் 20 அடி தூரமுள்ள வேறு ஏதாவது பொருளை பார்க்க வேண்டும். நிமிடத்திற்கு 20 முறை கண்களை சிமிட்டவேண்டும்.
குளிரூட்டப்பட்ட அறையில் இருப்பவர்கள் அடிக்கடி குளிர் சாதன பெட்டியை ஆஃப் செய்து பிறகு ஆன் செய்ய வேண்டும், அது மட்டுமல்லாமல் குளிர் சாதனத்திலிருந்து வீசும் காற்று நேரடியாக முகத்தில் (கண்களில்) படும்படி அமரக்கூடாது.

கண்ணீர் வறட்சி என்ற நோய் தற்போது சிறுவர்களுக்கு அதிகளவில் பாதிக்கிறது. ஏனெனில், சிறுவர்கள் அதிகநேரம் தொலைக்காட்சி பார்ப்பதால், கணினியில் விளையாடுவதால் கண்களில் அழற்சி ஏற்பட்டு. கண்கள் மிகவும் வறட்சியாகி, கண்பார்வை பாதிக்கப்படுவதும் இயல்பே.

அறிவியல் வளர்ச்சி காரணமாக தோன்றிய தொலைக்காட்சி பெட்டி, கணினி, கைபேசி, குளிர் சாதனப் பெட்டி ஆகியவற்றை முறையாக சரியாக உபயோகப்படுத்தாததால் கண்கள் தங்கள் இயற்கை தன்மையை இழந்து, கண்களில் நீர்வறட்சி தன்மையை இழந்து, “கண் நீர்வறட்சி நோயாக மாறி”, கண்பார்வை பாதிப்பில் முடிகிறது.

எனவே அறிவியல் வளர்ச்சியை கல்வி வளர்ச்சியின் மூலம் புரிந்து கொண்டு, இயற்கைக்கு மாறாக வாழாமல், இயற்கையான குணாதிசயங்களை இழக்காமல் இருந்தால் நல்லபார்வை உடைய கண்களோடு, நோயின்றி வாழலாம்.

Quarter page

Leave A Reply

Your email address will not be published.