நீரழிவு நோயும் கண் பார்வை பாதிப்பும்

நீரழிவு நோயின் தலைமையிடமாக விளங்க இந்தியா தயாராகிக் கொண்டிருக்கிறது. இந்தியாவில்; 62 கோடி பேர் நீரழிவு நோயால் பாதிக்கப்பட்டிருக்கும் நிலையில், தமிழகத்தில் 4.8 கோடி பேர் இந்நோயால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள்.
நீரழிவு நோயில் நாம் (இந்தியா) சீனா, மற்றும் அமெரிக்காவை விட முன்னணியில் இருக்கிறோம். 20 வயது முதல் 40 வயது வரையுள்ளவர்கள் இந்நோயால் பாதிக்கப்படுகிறார்கள். நீரழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்களில் 90% பேருக்கு கண் பார்வை குறைபாடு, குறிப்பாக ‘ரெட்டினோபதி’(Retinopathy) தாக்குகிறது.

கண்ணில் உள்ள உள்அடுக்கு நரம்பில் இரத்த கசிவு ஏற்படுவதை ‘ரெட்டினோபதி’ என்கிறோம். நோயின் வீரியம் குறைவாக இருக்கும் பட்சத்தில், நோயாளிக்கு கண்களில் நோய் தாக்கியுள்ளதை உணர முடியாது.

கண் பரிசோதனையிலேயே, இந்நோய் தாக்கியிருப்பது தெரியவரும். மிக குறைந்த அளவில் நோய் தாக்கு இருப்பின், கண் மருத்துவரின் சிகிச்சை மூலம் குணப்படுத்தலாம்.
வீரியம் சற்று அதிகமாக இருப்பின், ‘லேசர்’ சிகிச்சை மூலமே கண்பார்வை பாதிப்பிலிருந்து காப்பாற்ற இயலும். நோயின் வீரியம் அதிகமாக இருப்பின், உள் கண்ணில் இரத்தக் கசிவு ஏற்பட்டு, கண்கள் முழுமையாக பார்வை இழக்க நேரிடும்.

எனவே, வருடத்திற்கு ஒருமுறையாவது, கண் மருத்துவரை அணுகி, பரிசோதனை செய்து கொள்வது அவசியம்.
ரெட்டினோபதி நோய் தாக்கி உள்ளவர்கள், முறையாக 3 மற்றும் 6 மாதத்திற்கு ஒருமுறையாவது கண் பரிசோதனை கட்டாயம் செய்து கொள்ள வேண்டும். இரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகரிக்க, கண்களில் இரத்தக் கசிவு அவ்வப்போது ஏற்பட்டுக்கொண்டே இருக்கும்.
நீரழிவு நோயினால் ஏற்படக்கூடிய ரெட்டினோபதி, கண்களை முழுமையாக பாதிக்காத வகையில், சர்க்கரை அளவை கட்டுக்குள் வைத்திருப்பது, முறையான உடற்பயிற்சி, சரியான உணவு பழக்கம் ஆகியவை மிக அவசியம்.
கண்பார்வை இழப்பு என்பது மிகக் கொடியது. குடும்பத்திற்கு, சமூகத்திற்கு பாரமாகி விடுவோம். வருமானமின்றி நோய் சிகிச்சைக்கு செலவு செய்து, மிக அதிக அளவில் மன உளைச்சல் ஏற்படும்.
எனவே, எல்லா நீரழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்களும், சிரமம் பார்க்காமல், கண் மருத்துவரை அணுகி, பரிசோதனை செய்து கொள்வது மிக மிக அவசியம். பார்வை கோளாறு, பார்வை குறைபாடு, பார்வை இழப்பு இல்லாத இந்தியாவை காண கரம் கோர்ப்போம்.
தொடர்ந்து காண்போம்…
